(Reading time: 20 - 40 minutes)

ங்கே அவன் தேவதை, ஆம் தேவதையேதான் அந்தப் பச்சை நிற சேலையில் புதிதாய் பூர்த்த மலர் போல் நின்று, ரிஷப்ஷனில் தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனால் நம்பமுடியவில்லை ஆனாலும் அதுதான் நிஜம். அருகில் சென்றவன் “அனு என்ன இது சர்ப்ரைஸ், நீங்க, இங்க” என்று வார்த்தை வராமல் மென்று விழுங்கினான்.

“ஸாரி விஷ்ணு, நீ போன் பண்ற னு தான் சொன்ன, பட் எனக்கு வீட்டுல ரொம்ப போர் அடிச்சிது. அதான் கிளம்பி வந்துட்டேன். ஸாரி” என்று அவனுக்குப் பதில் அளித்தாள். அதிலும் பொய், போர் அடிக்கிறது என்றா இங்கு வந்தாள், இவனைப் பார்க்க வேண்டும் என்றுதானே இருப்பு கொள்ளாமல் கிளம்பி வந்தாள்.

“ச்ச எதுக்கு அனு ஸாரி எல்லாம். சரி வாங்க” என்று திரும்பி நடக்க ஆரம்பித்தான். கரும்பு தின்னவா கூளி வேண்டும் என்பது போல் அனுவுடன் இருக்கவா விஷ்ணுவிற்குக் கசக்கும்.

அவனுடன் உள்ளே சொல்ல ஆசைதான் அவளுக்கும், அதற்காகத் தானே வந்தாள். இருந்தாலும் இது அவன் வேளைப் பார்க்கும் இடம் என்று தயங்கியவள் “இல்ல விஷ்ணு நான் இங்கே வெயிட் பண்றேன், நீ வேளையை முடிச்சிட்டு வா நாம வெளியே போகலாம்” என்றாள் அங்கேயே நின்று.

“அதெல்லாம் ஒண்ணும் ப்ரொப்லெம் இல்ல அனு. உள்ள வாங்க, ஒரு 10 மினிட்ஸ். வர்க் முடிஞ்சிடும், கிளம்பலாம்” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தான். அவளும் அவன் பின்னால் சென்றாள்.

ஆபிஸ் உள்ளே போகும் வழியில் ஒவ்வொரு பகுதியாக அவளுக்குக் காட்டி இது எடிட்டிங் ரூம், அது ப்ரிண்டிங் ஏரியா என்றும், வழி தென்படுபவர்களை அவளுக்கும், அவளை அவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

கடைசியாகத் தான் வேளைச் செய்யும், கதைக்காக அமைக்கப் பட்டிருந்த செட் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு ஒவ்வொருவருக்காக அறிமுகம் செய்து விட்டு கடைசியாக வித்யா அருகில் வந்தான்.

வந்தவன் வித்யாவிடம் “வித்யா, இவங்க” என்று கூறும் முன்பே “இவங்க பேர் அனு. உன்னோட ஃப்ரெண்ட், சரிதானே” என்றாள்.

உனக்கு எப்படித் தெரியும் என்பதுபோல் பார்த்த விஷ்ணுவைப் பார்த்து “நீ இந்த ரெண்டு டயலாக்கை தானே அரை மணி நேரமா எல்லோர் கிட்டையும் சொல்லிட்டு வர” என்று கூறிவிட்டு, அனுவைப் பார்த்து “ஹெலோ, நான் வித்யா, விஷ்ணு ஏற்கனவே என்னைப் பற்றி நிறைய உங்க கிட்டச் சொல்லிருப்பான், அதை எல்லாம் நம்பிடாதீங்க(தன் அடக்கமாம்)” என்றாள் பந்தாவாக.

“ஸாரி வித்யா, உங்களைப் பற்றி விஷ்ணு எதுவும் சொல்லல” என்று அனு ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்

அவள் கூறிய மாத்திரத்தில் வித்யாவின் முகம் போன போக்கைப் பார்க்க விஷ்ணுவிற்கு அடக்க முடியாத சிரிப்பு வர சிரித்தும் விட்டான். சிரிப்பவனை ஒரு முறை முறைத்தாள் வித்யா. “இப்படி கோத்து விட்டுடியே அனு” என்பது போல் விஷ்ணு அனுவை பார்க்க, சிலிமிஸமாய் சிரித்தாள் அனு.

“அடி பாவி” என்று மனதில் நினைத்துக் கொண்டு, “என்ன அனு வித்யா வ பத்தி நிறையத் தடவை சொல்லிருக்கேனே, செம பிரிலியண்ட், இங்க ஆல் இன் ஆல் என்று எல்லாம் சொல்லிருக்கேனே, அந்த வித்யா இவங்கதான்” என்று திக்கி தினாறி சமாலிக்க முயற்சி செய்தான் விஷ்ணு.

அதற்கு வித்யா “யாரு நீ இப்படி எல்லாம் என்ன பத்தி சொல்லிருப்ப! நான் நம்பிட்டேன்” என்று விஷ்ணுவைப் பார்த்து முறைத்துக் கொண்டே கூறினாள்.

“மறந்தே போயிட்டேன் வித்யா, எம்டி போட்டோஸ் உடனே வேணும் னு சொன்னாராம் நான் போய் அந்த வேளையைப் பார்க்கிறேன்” என்று அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான் விஷ்ணு.

எஸ்கேப் ஆகிறான் என்று இருவருக்கும் தெரியும், இருவரும் அவன் பக்கம் பார்த்து  சிரித்துக் கொண்டிருந்தனர். பின் சற்று நேரத்திலையே இருவரும் நல்ல தோழிகளாக மாறிப் போக, பெண்கள் இருவர் ஒன்று சேர்ந்தாள் சொல்லவா வேண்டும்? ஒரே பேச்சும் சிரிப்புமாக இருந்தது அந்த இடம் முழுக்க.

வித்யாவுடன் அத்தனைப் பேச்சுகள் பேசினாலும், அவ்வப்போது தன் மீன் விழி பார்வையால் விஷ்ணுவை அவள் தழுவாமல் இல்லை.

விஷ்ணுவும் சளைத்தவன் இல்லையே. அவ்வப்போது அவன் அனுவை, ஓர பார்வை பார்த்து வைத்தான். எத்தனை நாள் ஆசை அவனுக்கு அவளைத் தான் வேளைச் செய்யும் இடத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று, அவன் ஆசையில் சிறு மாற்றம் மட்டுமே காதலியாக அழைத்து வரவேண்டும் என்று நினைத்தான் ஆனால் தோழியாக மட்டுமே அழைத்து வர முடிந்தது. அவனுக்கே தெரியாத விஷயம் என்னவென்றால் அவள் காதலியாக தான் வந்திருக்கிறாள்.

சிறிது நேரத்தில் தன் வேளை விஷ்ணு முடித்துவிட, வித்யாவிடம் மத்த விவரங்களை எல்லாம் கூறிவிட்டு, அனுவுடன் கிளம்பினான் விஷ்ணு. சிறிது நேரமே என்றாலும் வித்யாவும் அனு நல்ல தோழிகளாக மாறிப் போய் இருந்தனர்.

காரில் வந்து அமர்ந்தவுடன் அனு விஷ்ணுவைப் பார்த்து “எங்கே போறோம் விஷ்ணு” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.