(Reading time: 6 - 12 minutes)

"..ந..நல்லா இருக்கு!ஆனா,ஒரே ஒரு விஷயம்!"

"சொல்லுங்க தம்பி!"

"நான் சுகர் பேஷண்ட் இல்லை...அதனால எனக்கு சக்கரை போட்டே கொடுங்க!"

"சக்கரை இல்லை?"

"இல்லை...."

"இன்னிக்கும் மறந்துட்டேனா!"

"முதல்ல நாளைக்கு ரெடி ஆகுங்க!டாக்டர்கிட்ட போய் உங்க ஞாபகத்தை கொஞ்சம் செக் பண்ணிடலாம்!"

"எனக்கு...செக்...பண்றதைவிட...நீங்க கல்யாணம்...பண்ணிட்டீங்கன்னா...வர போற பொண்ணு உங்களை....பார்த்துப்பால்ல!"-அதைக் கேட்டதும் அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி!!!

"ஆபிஸ் கிளம்புறேன்!ராத்திரி வர லேட் ஆகும்!"-என்றவன் ஏதும் பேசாமல் அமைதியாக சென்றான்.

காரில் ஏறியவனின் ஞாபகம் எங்கெங்கோ பயணித்தது.

சிறிது நேரம் சென்றிருக்கும்.அவன் கவனத்தை கலைக்கும் வண்ணம் அவன் கைப்பேசி சிணுங்கியது.

"ஆ..சொல்றா மகேஷ்!"

"ஆ..நான் சிவன்யா பேசுறேன்!"-அவள் பெயரை கேட்டதும் சில நொடிகள் மௌனித்தான் அவன்.

"ஹலோ!"

"ஆ...சொல்லும்மா!"

"அண்ணா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாரு!இப்போ எப்படி இருக்கு?"-அவன் முகத்தில் புன்னகை!!

"இப்போ பரவாயில்லைம்மா!சரியாயிடுச்சு!"

"உடம்பை பார்த்துக்கோங்க!ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க!"

"சரிம்மா!"

"அப்பறம் பேசுறேன்!"

"மதி!"

"ஆ...சொல்லுங்க!"

"இல்லை ஒண்ணுமில்லை...!"

"சரி...!"-அவள் இணைப்பை துண்டித்தாள்.

அவன் கைப்பேசியை கீழே வைப்பதற்குள் அடுத்த அழைப்பு வந்தது.

"சொல்லுடா!"

"யார் கூடடா பேசிட்டு இருந்த?எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?"

"மதி போன் பண்ணாடா!"

"ஓ..ஓ..!என்னவாம்?"

"மகேஷ் உடம்பு சரியில்லைன்னு சொன்னான் போல!அதான்...எப்படி இருக்கேன்னு கேட்க போன் பண்ணா!"

"உடம்பு சரியில்லாதது சரி!அவளை பார்த்ததுல இருந்து மனசு சரியில்லாம இருக்கியே அதை எப்போ சொல்லப்போற?"

"கார்த்திக்...!"

"நீ வேணும்னா பாரு..!என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற!நானே போய் உன் லவ் மேட்டரை அவக்கிட்ட உடைக்க போறேன் பார்!"

"டேய் நீ வேற ஏன்டா?"

"பின்ன என்னடா?இவரும் சைலண்ட்டா லவ் பண்ணுவாராம்!ஆனா,சொல்ல மாட்டாராம்!"

"எல்லாத்துக்கும் நேரம் வரணும்டா!"

"அப்போ நேரா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

"ப்ச்...சீக்கிரமே மகேஷ்கிட்ட பேசுறேன்!போதுமா?"

"ஆமா...நீ மகேஷை தானே லவ் பண்ற!அவன்கிட்ட சொல்லணுமாம்.முதல்ல உன் மதிக்கிட்ட சொல்லி தொலை..!"

"மதி சம்மதிச்சு மகேஷூக்கு விருப்ப் இல்லைன்னா சங்கடமா போயிடும்!அவ மகேஷ் விருப்பத்துக்கு மாறா எதையும் பண்ண மாட்டா!"

"மகேஷ் சம்மதிச்சு சிவன்யா சம்மதிக்கலைன்னா?"

"..............."

"என்னடா?"

"அவளுக்கு என்ன விருப்பமோ அப்படியே நடக்கட்டும்!"

"டேய்!"

"நான் உங்களை மாதிரி இல்லைடா!சின்ன வயசுல இருந்து ஒரு சின்ன அன்புக்கூட உணராம வளர்ந்தவன் நான்!மதி என் வாழ்க்கையில எப்போ வந்தாலோ அப்போ தான் இதுதான் அன்புன்னு எனக்கு தெரிந்தது! இதுநாள் வரைக்கும் என் அம்மாப்பா எப்படி இருப்பாங்கன்னு கூட எனக்கு தெரியாது!ஆனா,எந்த தாய்பாசம் ஜென்மத்துக்கும் எனக்கு கிடைக்காதுன்னு நினைச்சேனோ அந்த அன்பை மதி எனக்கு கொடுத்தா!எனக்கு என் விருப்பத்தோட அவ விருப்பம் தான் முக்கியம்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.