(Reading time: 29 - 58 minutes)

மிளகாவை தேச்சு விட்ட மாரி கன்னமெல்லாம் காந்துது!”, என்று அவள் சொன்னதை நினைவு கூர்ந்த உள்ளம் இப்பொழுது இவனை கூறு போடத் துவங்க..

இன்னொரு மனம், “நீங்க அறைஞ்சிட்டீங்களேங்கிறது தான் அதிகம் வலிக்குது!”, என்றவளின் வார்த்தையை எண்ணி மருகத் துவங்கியது..

அவளோ அதற்குள் குர்தாவை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

இத்தனை நேரமும் அவளுடன் போரட்டம் நடத்தி விட்டு.... இப்பொழுது அவளுக்காக போராடும் மனதை எதிர் கொள்ள திராணியற்றி நின்றவன்

விழிகளோ அசையாது முன்னே சென்றவளையே பார்த்து நின்றது!

பவதாரிணியின் அழைப்பில் ஆரம்பித்து இந்த நிமிடம் வரை அவன் சிந்தையை ஆக்கிரமித்துக் கொண்டவள் அவள் தானே!

ஆம், ரிசப்ஷனிட்டை நேரில் பிடிக்க முடியவில்லை என்றாலும்... விடாது  அலைபேசியில் பிடித்து அவள் யாருடன் சென்றிருக்கிறாள் என்பதை அறிந்து...

ஃபிலோமினா என்றவள் போதை வஸ்து மற்றும் மோசமான சகவாசம் உள்ளவள் என்று தான் கேள்வி படத்தை வைத்து... அவளுடன் ஸ்கூட்டியில்  சென்றால் இவள் பத்திரமாக திரும்ப வாய்ப்பே இல்லை என்று யூகித்து..

கூடவே அந்த ஃபிலோமினா ஏதாவது திட்டம் போட்டு அழைத்து போயிருப்பாளோ? என்ற சந்தேகம் தோன்றிய மறு கணமே,  ‘நித்தியைக் கூட இப்படி தானே திட்டம் போட்டு கூட்டிகிட்டு போனாங்க’, என்ற வலியும் தோன்ற.... கூடவே கவலையும்.. அதையும் மிஞ்சும் பயமும் ஆட்கொள்ள... அதற்கு மேல் ஒரு நொடி கூட நிதானிக்காது.. 

தினேஷ் மூலமாக ஃபிலோமினா இருந்த டிவிஷனில் உடன் பணி புரிவோரை தொடர்பு கொண்டு அவள் வாடிக்கையாக செல்லும் மதுக்கூடத்தை விசாரித்து அறிந்தவன்..

அப்படியே தினேஷ்ஷிடம் ஃபிலோமினாவின் நண்பர்களைப் பற்றி விவரங்களைத் திரட்டி தரும் பொறுப்பை ஒப்படைத்து... எதற்கும் வாசுவையும்  அங்கே வரச் சொல்லலாம் என்று அவனை அழைத்து..

“மச்சி! கிளம்புறதுக்கு முன்னாலே எனக்கு இரண்டு விஷயம் பண்றே! ஒன்னு அந்த பப் பத்தி விசாரிக்கணும்! இரண்டாவது, அஞ்சனா அங்கிள் அந்த கமிஷினர் பெர்சனல் நம்பர் கொடு!”

என்று கேட்க, கமிஷனரின் அலுவலக எண் தான் வாசுவிடம்  இருக்க... திருமண வீட்டில் ஏதேட்சையாக பதிவாகி இருந்த சைலஜாவின் எண்ணைத் தான் அவனிடம் கொடுக்க முடிந்தது வாசுவால்!

ஆத்திர அவசரத்திற்கு இருக்கட்டும் என்று நோக்கிலே சைலஜாவின் எண்ணை  குறித்து கொண்ட ஆர்யமன், அந்த மதுக்கூடத்தை நோக்கி வண்டியை செலுத்திய சில மணித் துளிகளில்..

“மாப்ளே! நீ சொல்ற அந்த பப்லே எல்லா இல்லீகல் விஷயமும் நடக்குமாம் - ஏதோ மந்திரியோட பினாமி தான் நடத்துறான்!”, என்று தன் சக காவலர்களிடம் விசாரித்து வாசு அலைபேசியில் சொல்லி விட..

அதே சமயம் தினேஷ்ஷூம் அவனுக்கு தகவல் அனுப்பியிருந்தான் - ஃபிலோமினாவின் நண்பர்களின் ஆள் பலமும், அரசியல் பலமும் பற்றி!

அரசியல்வாதி என்றதுமே சாமான்யனாலே சமாளிக்க முடியாது என்று  தயக்கமும் காட்டாது முதல் வேலையாக கமிஷினரிடம் பேச நினைத்து.. அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு அவரை பிடிக்க முடியாது போக.. அப்பொழுதும்  விடவில்லை அவன்! சைலஜாவிற்கு அழைத்தான்... அவரோ  கணவருடன் அப்பொழுது தான் துக்க வீட்டிலிருந்து புறப்பட்டு கொண்டிருந்தார்.

அவர் அழைப்பை எடுத்ததும், “நான் அஞ்சனாவோட டீம் லீட்! அவங்களை பத்தி  உடனடியா கமிஷனர்கிட்ட பேசணும்! கமிஷனர் பெர்சனல் நம்பர் தர்றீங்களா?” என்பது தான் முதல் கேள்வியாக இருந்தது ஆர்யமனுக்கு!

“அஞ்சனாவை பத்தியா? என்ன விவரம்? ஏன் அவர் நம்பர் கேட்கிறீங்க? ”, என்று சைலஜா துருவ ஆரம்பிக்க.. மனைவியைப் பார்த்த கமிஷனர்,

“யார்?”, என்று கேட்ட படி அவரிடமிருந்து அலைபேசியை வாங்கி பேச, அவரே பேசியதும்.. இவன் விவரத்தை சொன்ன விதத்தில் கமிஷனருக்கே ஒரு பய அலை உருவாவதை இவனால் உணர முடிந்தது!

“இது பத்தி இப்போதைக்கு பவதாரிணிக்கு சொல்ல வேண்டாம்.. நானே பார்த்துக்கிறேன்”, என்றவர்..  தனக்கு நம்பிக்கையான எஸ். பி. ஸ்ரீவாசனை உடனடியாக அங்கே அனுப்பி வைப்பதாக  சொன்ன பின் தான் நிம்மதியே வந்தது அவனுள்!

‘நாம தான் முன்னெச்சரிக்கை முத்தையனா  ஓவரா வேலை பார்த்து கமிஷனரையே பயங்காட்டி விட்டோமோ??? அந்த சீரியஸ் போலீஸ் ஸ்ரீவாசன், நம்ம சிரிப்பு போலீஸ் வாசுன்னு எல்லாரையும வரச் சொல்லியாச்சே!’

‘இப்படி நானும் டென்ஷனாகி அத்தனை பேருக்கும் டென்ஷன் ஏத்தி... அங்க போய் நிக்கிறப்போ... இந்த லூசு கூலா அரட்டை அடிச்சுகிட்டு கையிலே பியர் பாட்டிலையோ.. வைன் கிளாஸ்சையோ....’,

‘சே...ச்சே... இது அந்த லெவல்க்கு எல்லாம் வளர்ந்திருக்காது! பர்த் டே கேக்காக வந்திருக்கும்! இப்போ உலகத்தையே மறந்து அதை மொக்கிட்டு இருப்பா..’,

என்றெண்ணியவனுக்கு அந்த ரெட் வெல்வெட் நினைவுகள் மனதிற்குள் நிழலாட பேராவலுடன் அந்த மதுக் கூடத்திற்கு உள்ளே நுழைந்தான்..

ஆனால், அதன் பின் தான் என்ன என்னவோ நடந்தேறி விட்டதே! காணும் முன் எண்ணங்களிலும் கலந்திருந்திருந்தவளே.. கண்ட பின்  இவன்  சகல செயல்களுக்கும் காரணியாய்...!

ஜனனி ஜனனி ஜகம் நீ! அகம் நீ!

சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!

என்ற சக்தியின் பாடல் அந்த கடையில் ஒலித்துக் கொண்டிருக்க...  மன உளைச்சலில் மொத்த சக்தியும் வடிந்து நின்றவனோ... சர்வ  விமோசனம் வேண்டி அவள்  சென்ற திசையையே பார்த்து நின்றான்!

அகமும் அவளே! ஜகமும் அவளே!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.