(Reading time: 29 - 58 minutes)

காயம் தெரியாம மறைச்சுக்கோ! வீட்டில் பார்த்தாங்கன்னா என்னமோ ஏதோன்னு பயந்துடுவாங்க”, என்று ஒரு துப்பட்டாவைக் கொடுக்க...

‘அட, அஞ்சனா நினைக்கிறா... ஆர்யா சொல்றானே’, என்று வியப்புடன் அவனை நோக்கி நிமிர்ந்தவளை அதை சொல்ல விடாமல் தடுத்தது அவன் கொடுத்த அந்த பர்ப்பிள் நிற துப்பட்டா!!!

“பார்ர்ர்ரா!!!! குர்தாவுக்கு பாட்டம் எடுக்கணும்ன்னு தோணலை! பாட்டம்க்கு மேட்சிங்கா துப்பட்டா மட்டும் எடுக்க தெரியுது!”, என்று சிரிப்புடனே கிண்டலடிக்க.. அவளை முறைத்து,

“அதான் வலிக்குதுல்ல! கொஞ்ச நேரம் பேசாம இரு!”, என்றவன் தொனியில் கண்டிப்பும் கூடவே கொஞ்சம் கவலையும்..

அந்த கொஞ்ச கவலை தான் அவளுக்கு பெரிதாக தெரிய...  எதையாவது பேசி அவன் மன நிலையை மாற்ற எண்ணி,

“அதெப்ப்ப்ப்புடி!!!!”, என்று அவனைப் பார்த்து ஆரம்பித்தவள் பின் கண்ணாடியைப் பார்த்து துப்பட்டாவால் முக்காடிட்டவாறே...

“பாஸ்வேர்ட்ல பெர்பெக்ட் பொண்ணு சைஸ் போட்டா பத்தாது! பொண்ணு  போடுற ட்ரஸ்ஸயும் பெர்ஃபெக்ட்டா எடுக்கணும்!”, என்று சீண்டலாக முடிக்கும் பொழுது மீண்டும் அவனைப் பார்த்தாள்...

அவன் கவனமோ அவளிடம் இன்றி வெளியே எதையோ பார்த்து நிற்க....

அதைக் கண்டதும்.. அவன் முன் சென்று சொடக்கிட்டு..

“ஹலோ!!! டங் ஸ்லிப்பாகி பெரிய பெரிய தத்துவமெல்லாம் அதுவா வருது!! நீங்க உம்.. “, என்று தலையை மேலும் கீழுமாக அசைத்து..

“இல்லை ஊகூம்”, என்று தலையை இட வலமாக அசைத்து...

“ஏதாவது சொல்லலாம்லே! ட்ரெஸ் விஷயத்தில் பிரிஷிசன் மிஸ் செய்தா....”, என்று இழுத்து அவனை வம்புக்கு இழுக்க 

தலையைத் தலையை ஆட்டி பேசும் அவள் பாவனைகளை கண் கொட்டாது பார்த்திருந்தவன்... அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது முக்காடி சரிந்து விழுவதை கண்டதும்... அதை மீண்டும் அவள் முகத்தை சுற்றி போட்டு விட்டவாறு பார்வையால் அந்த முகத்தை அளவிட... 

இதை எதையும் கண்டு கொள்ளாது தன் கருத்தை சொல்வதிலே தீவிரமாக இருந்தவளோ....

“..... பின்னாலே மிசஸ் ஆர்யாவுக்கு எவ்வளோ குஷ்டம்”, என்று சொன்னதும்...

இவன் துணை என்றாலே... அலை அலையாக மனதில்  மோதும் பப்பியை துளி கூட நினைக்க கூட விடாது  பேரலையாய் இவனை வாரி சுருட்டி... அவள் வாய் மொழிந்ததை அத்தனை புலன்களும் சுகிக்க வைத்தது அவன் உயிரோடு உறவாடிய அந்த உணர்வு!!!!

அது அவளைத் தவிர்க்க இவன் போட்ட கட்டுபாடுகளை  அவனறியாமலே தளர்த்தி விட.... கண்கள் ஒளிபெற அவள் விழிகளில் கலந்து...

“உங்க மிஸ்டர்  படுற குஷ்டத்தை விடவா என் மிசஸ் படப் போறாங்க??”,

என்றான் சிரித்துக் கொண்டே!

அவன் அதை கேட்கும் பொழுது அவன் நிறத்திற்கு பளிச்சென்று எடுப்பாகத் தெரிந்த அந்த அடர் புருவமும் இவளிடம் கேள்வி கேட்பது போல ஏறி இறங்குவதையும்.. பிரகாசித்த அந்த பருத்த விழிகளில் தெரிந்த சிரிப்பையும் ஆர்வம் பொங்க பார்த்தவள்....

‘ஹப்பாடா சிரிச்சிட்டான்!!!’, என்று மன நிறைவுடன்  அவனோடு வாயாடுவதைத் தொடர்ந்தாள்!

“ஹே.. நான்லாம் ரொம்ப நல்ல பிள்ளை! உங்களை வேணா குறை சொல்லுவேன்! மிஸ்டர் அஞ்சனாவை  குறையே சொல்ல மாட்டேன்!”, என்று இவள் சொல்ல..

அவளுக்கு போட்டியாக இவனும்,

“ஆஹான்! உனக்குங்கிறதாலே கையிலே கிடைச்சதை எடுத்து கொடுத்தேன்! மிசஸ் ஆர்யாக்குன்னா.. நானே டிசைன் செய்திருப்பேன்”,

என்றதும் பலமாக சிரித்தவளை... பாதி ரசனையும்... மீதி கேள்வியுமாக பார்த்த ஆர்யமனிடம்... அவள் சிரித்துக் கொண்டே,

“ஹா.. ஹா.. பாவம் மிசஸ் ஆர்யா! க்ரீன் அன்ட் பர்ப்பிள் காம்பினேஷன்ல ட்ரெஸ் இல்லை டென்ட் தான் டிசைன் செய்ய முடியும்!.”, என்று சொல்லவும்..

“டென்ட்டா... ஹா.. ஹா...”, என்று விழுந்து விழுந்து சிரித்தவனின் கன்னத்தில் குழி விழ கண்டு இவள் விழி விரிய...

அவள் ஆர்வமாக பார்க்கும் பார்வையே தடுமாற வைத்தது இவனை..

‘அடுத்து இவ ஏதாவது சொன்னா என்ன ஆகுறது நான்’, என்று தலையை உலுக்கி  தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனாக....

“கன்னக்குழி சூப்பர், குண்டு முழி சூப்பர்ன்னு சும்மா ஏதாவது ஃப்ளர்ட் பண்ணாம சீக்கிரமா வா!”

என்று போகிற போக்கில் சொல்லி விட்டு முன்னே நடக்க ஆரம்பித்தான்..

வாயாடுவதிலே இருந்தவளோ முதலில் அவன் சொன்னதை கவனிக்காமல்... “கன்னக்குழி ஓகே! பட், குண்டு முழின்னு எப்போ ஃபளர்ட்”, என்ற பின் தான்.. தான் சொன்னது உரைக்க.. நாக்கைக் கடித்துக் கொண்டவள்..

“ஃப்ளர்ட்டா???!!!!”, என்ற திகைப்புடன் அவனை ஏறிட... அவனோ அதற்குள் அவன் சில எட்டுகள் முன்னே சென்றிருந்தான்...

“ஆர்யா”, என்று அழைத்த படி பின் தொடர ஆரம்பித்த பொழுது எதிர் திசையில் கண்ணில் பட்ட காட்சி அவளை அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைய வைக்க.... ஒரு ஷணம் முன்னே சென்றவனை தொடராது அப்படியே நின்று விட்டாள்!

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே!!!

சஸ்பென்ஸ்சா  end card போட்டோம்ல!!!  அது யாருன்னு கெஸ் செய்துட்டே இருங்க!  தலைவனும், தலைவியும் இன்னும் நிறைய பேசணும்ன்னு அடம் பிடிக்கிறாங்க. நானும்  பாவம்ன்னு விட்டுட்டேன்! ஏன்னா  வைக்கிறோம்ல ஆப்பு - இது அவங்க கடைசி சந்திப்பு !!! (ஹி..ஹி.. தற்காலிகம் தான் - கவலைப் படாதீங்க!) 

தொடரும்

Episode 20

Episode 22

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.