(Reading time: 29 - 58 minutes)

தற்குள் அவள்..

“என்ன ஆர்யா! எறும்புக்கு போய் யானை சைஸ் பேன்ட்டை கொடுக்கிறீங்க! ”, என்று குறை பாடிய படி சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் தலையை வெளியே நீட்ட...

‘என்னது யானையா?’, என்று குழம்பி, பின் தெளிந்து அவள் பக்கம் திரும்பியவன், புருவ முடிச்சிட

“ஸ்மால் சைஸ்ன்னு சொல்லி தானே கொடுத்தாங்க!”, என்று சந்தேகமாக கேட்டான் அவளைப் பார்த்து!

“சொன்னா?? தலையாட்டிட்டு வாங்கிட்டு வந்துடுவீங்களா? செக் பண்ண மாட்டீங்களா?”, என்று அந்த டேக்கை காட்ட...

அதைப் பார்த்தவனுக்கு கடைக்கார பெண் கவனக்குறைவாக கொடுத்திருப்பது புரிய.. ‘எனக்கு வந்த சோதனையா’,  என்று பெருமூச்சு விட்டவன் மறுபேச்சு பேசாது மறுபடியும் அந்த கடைக்கார பெண்ணிடம் போய் நின்றான்!

“ப்ச்.. கடையை மூடுற நேரத்திலே வந்துகிட்டு...”, என்ற சலிப்புடன் முனங்கி கொண்டு அதைத் தேட ஆரம்பித்த நேரம் பார்த்து பவதாரிணியின் அழைப்பு!

‘அடுத்து இவங்களா?’, என்று இவனிடமும் அதே சலிப்பு தொற்றியது!

அஞ்சனா வந்த பின் பேசிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட நினைத்தாலும்.. ‘பொண்ணைப் பெத்தவங்க ஒவ்வொரு செகன்ட்டும் பதறிகிட்டு இருப்பாங்க!’ என்று மனது கேட்காமல் அழைப்பை எடுத்தவன்.. அவர் எதுவும் கேட்பதற்கு  முன்பே,

“ம்மா! நான் சொன்னது போல மழையில் தான் மாட்டிட்டியிருந்தாங்க! அவங்களைப் பார்த்து வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிட்டு இருக்கேன்! வீட்டுக்கு வந்ததும் அவங்களே பேசுவாங்க! நீங்க நிம்மதியா இருங்க! ஓகே வா?”

என்று ஒரு குறும்படத்தையே ஓட்டி முடிக்க....

தன் மனம் உழண்டதற்கு எல்லாவாற்றிற்கும் பதில் கிடைத்து விட்டது என்று நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன பவதாரிணிக்கு.... மகளின் குரலை கேட்டால் தான் முழு நிம்மதி கிடைக்கும் என்று தோன்ற, “மறக்காம அவளை பேசச் சொல்லுங்க தம்பி!!”,

என்று கேட்டதும் அதில் வெளிப்பட்ட தாய்மையை கண்டவனாக.. கடமைக்கு சரி என்றெல்லாம் சொல்லாமல், “கண்டிப்பா ம்மா!”, என்று உறுதியாக சொன்ன விதமே அவர் தேடிய நிம்மதியை கொடுத்தது!

‘ஒரு வார்த்தை தான் சொன்னேன்! அதுக்குள்ளே அவனே எல்லாம் பார்த்துட்டானே! பொறுப்பான பையன்’, என்று மனதிற்குள் மெச்சினார் அவனை!

அவனோ, ‘பாவம் பயந்து போய் இருக்காங்க! இவ என்னடான்னா  அந்த பாவாகிட்ட பேச துடிக்கிறா’, என்று அவர் மகளை எண்ணி கொதித்துக் கொண்டிருந்தான்! [ஹலோ ஐ. க்யூ ஸார்... அவளும் அவங்ககிட்ட தான் பேச துடிக்கிறா .. நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு துடிக்கிறீங்க!]

அந்த கடைக்கார பெண், “ஸ்மால்ல இந்த ஒரு கலர் தான் இருக்கு! எடுக்கிறதுன்னா சீக்கிரமா சொல்லுங்க!’, என்றவள் முகமே கிளம்பும் அவசரத்தில் இருக்கிறாள் என்பதை காட்ட... மேலே எதுவும் பேசாது,

மறுபடியும் அலைந்திடக் கூடாதென்று மிகக் கவனமாக சைஸ்சை  சரி பார்த்து விட்டு அஞ்சனாவிடம்  கொடுக்க..

அவளோ கண்ணைப் பறிக்கும் அந்த வாடாமல்லி நிறத்தைக் கண்டதும் அரண்டே போனவளாக....

“என்ன இது? பச்சைக் கலர் டாப்பிறகு பர்பிள் கலர் லெக்கிங்கா? வேற கலர் எடுத்துட்டு வாங்க ஆர்யா!!”, என்று முகத்தை சுழித்து அதை வாங்கவே மறுத்தாள்..

இரண்டு முறை அலைந்து விட்டவனுக்கு... முகத்தை காட்டிய அந்த கடைக்கார பெண்ணிடம் போய் நிற்பது தன்மானத்தை சுட...அது எல்லாம் இவளிடமே திரும்ப..

‘அவசரத்துக்கு ஒரு டிரஸ்சை போடுறதுக்கு ஆயிரத்தெட்டு நொள்ளை சொல்றா!’, என்று கெட்ட எரிச்சல் மூண்டது...

ஆம், திருமணமான ஆண்களுக்கு மட்டுமே தெரியும் - மனைவிக்கு பிடித்தது போல உடை எடுத்து கொடுப்பது எவ்வளவு சிரமம் என்று!

அவனுக்கு இதெல்லாம் புது அனுபவமாக இருக்க...

“உன் இஷ்டத்துக்கு எடுத்து கொடுக்க நீ வச்ச வேலைக்காரனோ.. இல்லை  உனக்கு வாச்ச வீட்டுக்காரனோ  இல்லை நான்!”, என்று அதை அவள் மீது  வீச..

இவள் தான் பியர் பாட்டிலையே லாவகமாக பிடித்தவளாயிற்றே! எளிதாக ‘கேட்ச்’ செய்தவளுக்கு... 

பொறுத்து போக வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை! அவளுடன் சண்டையிட முழு வீச்சில் நின்றவள் அவனை எதிர்பார்வை பார்த்து...

அவனைப் போலவே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.