(Reading time: 29 - 58 minutes)

ங்க வீட்டுக்காரி ஏன்.. உங்க வீட்டு வேலைக்காரி கூட இந்த பாத்ரூம் வாடையை தாங்கிட்டு இவ்வளோ நேரம் வெயிட் பண்ண மாட்டா!!!!”, என்று சொல்லிக் காண்பித்து..

“ஹூம்!!”, என்று உதட்டை சுழித்து பழிப்பு காட்ட..

‘ஏற்கனவே காயமாகி போய் இருக்கே.. இதை ஏன் இந்த பாடு படுத்துறா’, அவன் பார்வை அதை வருட செல்வதற்குள்... அவன் முகத்தில் அறைவது போல வேண்டுமென்றே ஓங்கி அறைந்திருந்தாள் கதவை!

தன்னுடன் போரிட முயலும் அந்த சிறு பிள்ளை செய்கையில் அவன் கோபம் எல்லாம் பஸ்பமானது! 

‘என்னைப் போலவே செய்றாளாம்!’, என்று அவன் முகத்தில் சிறு கீற்று புன்னகையை வரவழைக்க.... ‘அப்படி எல்லாம் உன்னை சந்தோஷமாக விடுவேனா’, என்பது போல அலைபேசியின் சிணுங்கல்! அழைத்தது கமிஷினர்!!!

“அஞ்சனாவை நீங்க தான் கூப்பிட்டு வர்றீங்க? எங்கே இருக்கீங்க?”, என்று விசாரித்தவருக்கு பதிலளித்து விட்டு....

“பப்லே ஒருத்தன் அஞ்சனாவை வீடியோ எடுக்க ட்ரை பண்ணான் ஸார்.. மறந்துடாம அதையும் என்னன்னு”, என்று அவரிடமும் அதைப் பற்றி நினைவு படுத்த விழைந்தவனிடம்,

“ஸ்ரீவாசன் அதெல்லாம் கிளீன்னா செய்துட்டார்! ஏதோ ஒரு ஃபோன் தான் மிஸ்ஸிங்! அதையும் ட்ராக் பண்ணிடுவோம்ன்னு சொல்லி இருக்காங்க!”

“என்ன அரெஸ்ட் செய்துட்டோம்! ஆனா, இவங்க மேலே கேஸ் ஃபைல் செய்ய முடியாது! பொலிடிகல் ப்ரஷர் இப்பவே வர ஆரம்பிச்சிடுச்சு! அதுவும் நாங்க சாரி சொல்லி ரிலீஸ் பண்ணனுமா அவங்களை!!”,

அதை சொல்லும் பொழுது அதில் இழையோடிய ஆதங்கம் ஆர்யமனுக்கு அப்படியே புரிந்தது! இவரே இப்படி சொன்னா மத்தவங்க நிலை என்ன? மக்களாட்சியே சாபமாகி போய் விட்டதோ என்று தான் தோன்றியது!

அவன் மவுனத்தில் என்ன புரிந்து கொண்டாரோ அந்த கமிஷனர்

“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை!”, என்று கர்வத்துடன் சொன்னவர்,

“நம்ம வீட்டு பொண்ணு பேரும் சேர்ந்து வரும்! வீட்டில் தீவிரமா மாப்பிள்ளை பார்த்துகிட்டு  இருக்கிற நேரம் வேண்டாம்ன்னு பார்க்கிறேன்! குட்டிகிட்ட ஃபோனை கொடுங்க”, என்று கேட்ட பொழுது..

அஞ்சனாவும் உடை மாற்றி அங்கு வந்து விட.. கமிஷினர் என்று  அலைபேசியை அவளிடம் கொடுத்து விட்டு இங்கிதமாக நகர்ந்து இருந்தான்.. அலைபேசியை வாங்கியவளிடம்,

“என்ன குட்டி? ரொம்ப பிரச்சனை பண்ணிட்டாங்களா?”, கேட்கும் பொழுதே ஒரு பதைபதைப்பு அவரிடம் ஓடியது! இவளை பாதுகாப்பாக பார்த்து கொள்வது அவர் கடமை அல்லவா? கண்டிக்கும் உரிமையை விட பாதுகாக்கும் பொறுப்பை தான் அதிகமாக உணர்ந்தார்!

இந்த ஒரு மாதமாக தான் அவளைப் பார்க்கிறாரே.. வெகுளித்தனமான குறும்புக்கார பெண்! ஏதோ ப்ளான் செய்து கூட்டி போயிருக்கிறர்கள் என்று ஆர்யமன் சொல்லி இருந்ததை அவர் நம்பியும் இருந்தார்! 

“ஏன் போனேன்னு திட்டுவீங்கன்னு நினைச்சா.. இப்படி பயந்து போய் கேட்கிறீங்க! அதெல்லாம் ஒண்ணுமே இல்லை அங்கிள்! நான் தான் உங்ககிட்ட சொல்லாம போயிட்டேன்! அதான் ஆர்யா சேவ் பண்ணிட்டார்ல!  ப்ளீஸ் இது வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாமே! ரொம்ப வருத்தபடுவாங்க!”, என்று மனதில் இருந்ததை அப்படியே சொல்லி விட்டு இறைஞ்சுதலாக கேட்டாள்.

கமிஷனரைப் பொறுத்தவரை.. இதை சொல்லவும் முடியாத.. மெல்லவும் முடியாத நிலை..

‘எடுத்தேன் கவுத்தேன்னும் சொல்ல முடியாது! பெரியவர் இவ மேல உயிரையே வைச்சிருக்கார்! நேரம் பார்த்து மெதுவா சொல்லிடணும்’, என்று எண்ணிக் கொண்டவராக..

“சரி! அதை நான் பார்த்துக்கிறேன்! நீ சைலுகிட்ட கூட எதுவும் சொல்லாதே! அவ இந்த நேரம் வீட்டுக்கு வந்திருப்பா! நீயும் வீடு போய் சேர்ந்ததும் மெசேஜ் பண்ணிடு!”,

என்று அவரே சொல்லி விட.. அஞ்சனா மனதில் அலைப்புற்ற கவலை தீர்ந்ததென்று நிம்மதி பெருமூச்சு விட்டவள்.. அலைபெசியைக் கொடுக்க ஆர்யமனிடம் வர... அவன் பின்னே சுவற்றில் பதித்திருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைக் கண்டதும்.. வலி நினைவுக்கு வர கை அனிச்சையாக அதை தடவிக் கொடுத்தது!

உண்மையில் அந்த தடத்தை பார்க்கும் பொழுது வலி இன்னுமே கூடியது போல தோன்ற கூடவே,

‘ஹய்யோ... இது சைலு ஆண்ட்டிக்கு தெரியக் கூடாதே’, என்ற பயமும்  சேர்ந்து கொள்ள... அப்பொழுது தான் ஆர்யமன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.. அவன் கண்ணில் என்ன கண்டாளோ...

வேகமாக அவனிடம் திரும்ப, அதற்குள் அவனே அவளருகில் வந்து விட்டான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.