(Reading time: 16 - 32 minutes)

ன் எண்ணத்திற்கு அணைபோடுவது எப்படி என்று அவள் தவித்துக்கொண்டிருக்க, அதற்கு அவசியமே இல்லை என்பதுபோல் அவள் அருகே வந்து அமர்ந்தான் யாதவ் “ஹலோ” என்றவாறு. வர்ஷினியும் “ஹலோ” என்று பதிலுரைத்தாள். இருவரும் அப்போது சிந்திய அந்தப் புன்னகையில் ஒரு அற்புதமான காதலின் இனிய தொடக்கம் தெரிந்தது. அவர்களைத் தூரத்தே இருந்து பார்த்து புன்னகைத்துக் கொண்டாள் ப்ரியா.

தன் முன்னால் போடப்பட்ட சொடுக்கால் நிகழ்காலத்திற்கு வந்தாள் வர்ஷினி. எதிரே நின்றிருந்த ப்ரியா “உன் கனவு முடிந்தால், அவர்கள் இருவருக்கும் சாப்பிடுவதற்கு எடுத்துவரச் சொன்னார் அம்மா” என்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

சமையலறையில் ரவா லட்டு செய்வதற்கான வேலைகள் மீதமிருக்க, அதனை செய்தாள் வர்ஷினி. ப்ரியாவோ, அங்கு இருந்த ஸ்லாபில் அமர்ந்து ஏதேதோ முனங்கிக்கொண்டிருந்தாள்.

“ப்ரீ, உன் பின்னால் இருக்கும் அலமாரியிலிருந்து ஏலக்காயை எடுத்து கொடும்மா” என்று வர்ஷினி ப்ரியாவின் நிலையை அறியாமல் கேட்டாள்.

“உன்னை யாருடி அவன இங்க கூப்பிட சொன்னது?” என்று ஏலக்காயை வர்ஷினியிடம் தந்துகொண்டே தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேட்டாள் ப்ரியா.

“யாரை?” என எதிர்கேள்வி கேட்டாள் வர்ஷினி.

“உனக்குத் தெரியாது?” (உங்க ரெண்டு பேருக்கும் பதில் பேசவே தெரியாதா? கேள்வியா கேக்குறீங்க??)

“வேற யாரு? அண்ணா கூட வந்துருக்கானே, அவன் தான்”

“ப்ரனிஷ் அண்ணாவா? அவரு வந்தா என்ன உனக்கு?” என ரவையை வறுத்துக்கொண்டிருந்த வர்ஷினி கேட்டாள்.

“அவன்கூட நான் சண்டைடி” என ஆசிரியையிடம் குற்றம் சொல்லும் பிள்ளை போல சொன்னாள் ப்ரியா.

ஆனால், ப்ரியாவின் பதில் காதிலேயே விழாதவாறு தன் வேலையில் மீண்டும் முனைப்பானாள் வர்ஷினி. இதுவே ப்ரியாவை இன்னும் கோபமடைய செய்தது.

“இங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன செய்துட்டு இருக்க?”

“பாத்தா தெரியல? உருண்டை பிடிக்குறேன்”

“நக்கலு? என்னை கடுப்பேத்திப் பார்க்கவே எல்லாரும் இருக்கீங்க” என்று கூறிக்கொண்டு அந்த லட்டுகளை கிண்ணங்களில் அடுக்க ஆரம்பித்தாள் ப்ரியா.

முழுவதும் செய்து முடித்திருக்க, வர்ஷினியை நோக்கி, “அப்பா எங்கேடா?” என வினவினாள்.

“அச்சச்சோ! மறந்தே போய்ட்டேன். யாதவ் வந்ததும் எழுப்பி விட சொல்லிட்டு தூங்க போனாரு. நான் போய் அவர கூப்பிடறேன். நீ இது எல்லாம் வைத்து எடுத்து வா” என்று கூறிவிட்டு மாடியை நோக்கி விரைந்தாள் வர்ஷினி. வர்ஷினியின் சொல்படி எல்லாவற்றையும் ஹாலுக்கு எடுத்துவந்தாள் ப்ரியா.

ப்ரியா வருவதற்குள் விஷ்வநாதனை (வர்ஷினியின் அப்பா) வர்ஷினி அழைத்து வந்திருந்தாள். அனைவருக்கும் தன் கைப்படவே கிண்ணங்களைத் தந்து பரிமாறினாள் ப்ரியா. (அவ்வளவு நல்லவளா நீ?? எங்கேயோ இடிக்குதே!)

கடைசியாக ப்ரனிஷிடம் வந்தபோது, ‘அவனுக்கு சந்தேகம் வர கூடாதுடா. முறைச்சுட்டே கொடு’ என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு ஒரு வழியாக லேசாக முறைத்தவண்ணமே அவனிடம் அதனை சமர்ப்பித்துவிட்டு தன் இடத்தில் அமர்ந்தாள்.

ப்ரனிஷோ, இவளது செயலையும், முறைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தான். தான் வந்தபோது முறைத்த விதத்திற்கும் இதற்கும் ஏதோ வேறுபாடு உள்ளதுபோல தோன்றியது அவனுக்கு.

ப்ரியா என்ன செய்திருப்பாள் என்பது புரிபடவில்லையென்றாலும், எதில் செய்திருப்பாள் என்பது புரிபட்டது ப்ரனிஷுக்கு. தன் சந்தேகத்தை போக்கிக்கொள்ள ப்ரியாவின் பக்கம் அவள் அறியாதவாறு பார்வையை ஓட்டினான்.

ப்ரனிஷினை நன்றாக பார்க்கும் வகையில் தான் ப்ரியா எதிர் சோஃபாவில் அமர்ந்திருந்தாள்; அனைவரிடம் பேசுவதும் புசிப்பதுமாகவே இருந்தாலும், அவளது கவனம் முழுவதும் ப்ரனிஷிடமும் அவனது கிண்ணத்திலுமே இருந்தது.

“ஓஓஓ… மேடம் நான் நினைத்தது போல இதில் ஏதோ கலந்திருக்கிறாள். நான் உனக்கு சளைத்தவன் இல்லை என்று இப்போது காட்டுகிறேன்” என மனத்துள் நினைத்துக்கொண்டு அந்த உணவை அப்படியே மேசையில் வைத்தான்; ப்ரியாவின் முகம் மாறுவதுகண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

“என்னப்பா, சாப்பிடாம வைச்சுட்ட?” அவனது அருகில் இருந்த விஷ்வநாதன் தான் முதலில் கேட்டார்.

“அது சித்தப்பா, நம்ம வர்ஷினி மட்டும் செய்தால் உண்ணலாம். ஆனால், சமையலே தெரியாதவர்களுக்கு எலியாக மாட்டி நான் அவதிபட விரும்பலை” என்றான் ப்ரியாவை நோக்கி கிண்டலாக.

ப்ரியாவிற்கு ப்ரனிஷ் ஓட்டுவதனால் கோபம் வந்தாலும், இப்போது காரியம் முக்கியமானதால் அதனை வெளிகாட்டாமல், “நான் எடுத்துட்டு மட்டும்தான் வந்தேன். செய்யலைன்னு சொல்லுங்கப்பா” என்று கூறினாள்; சொன்னது விஷ்வநாதனிடமிருந்தாலும், கண்கள் பார்த்தது ப்ரனிஷைத்தான். (பேசமாட்டாங்களாமா)

“”நீ செய்யலைன்னாலும் ஏதாவது கலந்திருந்தால்?”

“ஆமாம், இவரு பெரிய இவரு… ஏதாவது பண்ணுவதற்காக கலந்து வைத்திருக்கோம்” என்றாள் எகத்தாளமாக. ஆனால், அவளது மனம் மட்டும் “பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது ப்ரீ” என எடுத்துரைத்தது. அதனை “பரவாயில்லை. நான் பிட்ஸா சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்லி அடக்கினாள். (உம்ம அறிவைக் கண்டு நான் வியக்கேன்!)

அங்கு இருந்த மற்றவர்களோ, ‘இது எப்போதும் நடப்பதுதானே’ என்பதுபோல பார்த்திருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.