(Reading time: 16 - 32 minutes)

நான் என்னவாவோ இருந்துட்டு போறேன். நீ இப்போ எனக்கு ப்ரூவ் செய்துகாட்டு” என்றான் ப்ரனிஷ்.

தன் நேராக பேசாத விரதத்தை கைவிட்டு, “என்ன செய்யனும்?” என்று தைரியமாக கேட்டாள் ப்ரியா.

“நீயே சாப்பிடு பார்ப்போம்” என தன் கையில் இருந்ததை அவளிடம் நீட்டினான் ப்ரனிஷ்.

“நானா?” என திருடனுக்கு தேள் கொட்டியது போல விழித்தாள் ப்ரியா.

“நீயேதான். நீ சாப்ட்டு எதுவும் ஆகலைன்னா நான் சாப்பிடுகிறேன்” எனக் கூறி அவள் கைகளில் திணித்தான்.

‘ஒன்று சாப்பிடுவதால் என்னவாகப்போகிறது’ என நினைத்துக்கொண்டு ஒரு ரவா லட்டை எடுத்து உண்டாள் ப்ரியா.

“எனக்கு ஒன்னும் ஆகலை. இப்போ சாப்பிடு” என்று அவனிடம் திரும்ப கொடுத்தாள் ப்ரியா.

“உன்னை நம்ப முடியாது. இதையும் சாப்பிடு” என இரண்டாவதைத் தந்தான் ப்ரனிஷ்.

சரி என்று அதனையும் உண்டாள். இவ்வாறே அவன் தந்த அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, கடைசியில் ஒன்று மட்டும் இருக்கையில் “இதை நீயே சாப்பிடு. என்னால் முடியாது” என மறுத்துவிட்டாள் ப்ரியா.

“இந்த ஒன்னு மட்டும் எனக்கெதுக்கு” என்று கூறி தன் இருக்கையில் இருந்து எழுந்துவந்து ப்ரியாவின் வாயிலேயே மீதி இருந்த ஒன்றையும் திணித்தான் ப்ரனிஷ். ப்ரியா சுதாரிப்பதற்குள் தான் நினைத்ததை செய்தே முடித்துவிட்டான் ப்ரனிஷ்.

‘கரெக்ட்டா இதையே ஊட்டிட்டானே’ என்று அவனை திட்டிக்கொண்டே மிக எச்சரிக்கையாக உண்டாள். அவ்வாறிருந்தும், அவள் எண்ணம் நிறைவேறவில்லை என்பது ப்ரனிஷின் சிரிப்பு சத்தம் தொடர, சமையலறையை நோக்கி அவள் வாயால் சைக்கிளுக்கு காற்றடித்துக்கொண்டு ஓடியதிலேயே தெரிந்தது.

ப்ரியாவைப் பின்தொடர்ந்து என்னவாயிற்றோ என்று வர்ஷினியும் ஓடினாள். அங்கு அவள் கண்டது, இனிப்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டிருந்த ப்ரியாவை.

“என்னடி? என்ன நடந்துச்சு?” என சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்த ப்ரியாவிடம் வினவினாள்.

“மிளகாயை கடிச்சுட்டேன்” என பகர்ந்தாள் ப்ரியா. ரவா லட்டில் எப்படி மிளகாய் முளைத்தது என எண்ணிப்பார்த்த வர்ஷினி அது யாருடைய கைங்காரியத்தால் என்று விரைவில் அறிந்துகொண்டாள். இருவரும் ஹாலில் நடந்துகொண்ட விதமே உரைத்ததே, இவள் ஏதோ செய்திருந்தாள் என்று.

இந்த திண்பண்டமானது, மிதமான இனிப்புடையதானதால், மிளகாயைக் கடித்தவுடன் காரமே ஆகாத ப்ரியாவிற்கு ஏறியுள்ளது. ஆனால், ப்ரியா ஒன்றை அறியவில்லை. ப்ரனிஷிற்கு காரம் மிகுந்த உணவுகள் மிகவும் பிடிக்கும் என்பது தான் அது. (மொத்தத்தில் அவன் சாப்பிட்டிருந்தாலும் ப்ளான் ஃப்லாப் தான்).

“எதுக்குடி வீணா இந்த காரியத்தை செய்தே?” என கேட்டாள் வர்ஷினி.

“அவன் என்னை ஓட்டுனான்”

“நீ அவரை ஓட்டுவதே இல்லாதமாதிரி சொல்லு. எப்படியும் நீ தான் முதலில் ஆரம்பித்திருப்பாய். அதை அண்ணா கண்டினியூ செய்திருப்பார்” என்றாள்.

‘நம்மல பத்தி எல்லாரும் கரெக்ட்டா கெஸ் பண்ணிடறாங்களே!’ என யோசித்துக்கொண்டே, “நீ எனக்கு ஃப்ரெண்ட்டா அவனுக்கா? அவனுக்கு சப்போர்ட் சியறியே, என்ன செய்தான்னு நீயே பாத்து தெரிஞ்சுக்கோ” என்றுவிட்டு, தன் கைப்பேசியில் ஒரு மெசேஜைத் திறந்து வர்ஷினியிடம் காண்பித்தாள்.

அதனைப் படித்த வர்ஷினி சிரிக்க ஆரம்பித்தாள். “உண்மையை தானே சொல்லியிருக்கார். எப்பவுமே அவரை வதம் செய்பவள் நீயே தானே. அதனால் தான் வதனி என்று கூப்பிடுகிறார்.”

“அவன் பாட்டாக மெசேஜ் அனுப்பினால், நீ ஊருக்கே கேட்குமாறு சொல்ற?” என வர்ஷினியை நோக்கிப் பாய, வர்ஷினி தன்னை காப்பாற்றிக்கொள்ள ஹாலை அடைந்து யாதவிடம் தஞ்சமடைந்தாள்.

சோஃபாவில் இருந்த தலையனையை எடுத்து இருவரையும் நோக்கி எறிந்துவிட்டு, அதனை யாதவ் சரியாக கேட்ச் செய்து இவளிடம் வருவதைப் பார்க்காமல், ப்ரனிஷை மற்றொரு தலையணையுடன் துரத்த ஆரம்பித்திருந்தாள் ப்ரியா. சில நிமிடங்களில் அங்கு நால்வரும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் நால்வரும் சந்தோசமுடன் இருப்பதைப் பார்த்து விஷ்வநாதனும் வைதேகியும் கடவுளிடம் வேண்டிக்கொண்டனர், இதைப்போல இவர்கள் எப்பொழுதும் இவ்வாறே இருக்க வேண்டும் என.

வாழ்வின் சுவாரசியமே எப்போது என்ன நடக்கும் என்றே வரையறுக்க முடியாது. முடியவே முடியாது என்று நாம் நினைத்து சோர்ந்துவிட்ட தருணத்தில் அந்த சிக்கல் சுலபமாய் முடிவுக்கு வருவதும், எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று எண்ணும்போது புது பிரச்சனை முளைப்பதும் உண்டல்லவோ?

பலருக்கு ஆசையுண்டு, தான் நினைத்தது போலவே வாழ்வு அமையவேண்டும் என்று. ஆனால், நாம் நினைப்பதெல்லாம் எப்பொழுதுமே நடந்துவிடுவதில்லையே! விதி என்று ஒன்று இருக்கிறதே. அவ்விதியானது, தன் எண்ணம் ஈடேற ஒவ்வொரு காய்களாக நகர்த்த ஆரம்பித்தது. அதன் முதல் கட்டம், அந்த சிறு கிராமத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.

“என் இனிய தோழிகளே/தோழர்களே! சென்ற அத்தியாயத்திற்கு கமெண்ட் செய்ததற்கு நன்றி. அடுத்த பகுதியில் ஒரு புது லொகேஷனில் புது மனிதர்களை சந்திக்கலாம். நன்றி!!!”

தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:1075}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.