(Reading time: 6 - 12 minutes)

தியை நீ இதுவரை காப்பாத்தினது எப்படி விதியோ, அதுபோல இனி சந்திக்கப்போகும் அந்த நிகழ்வு நடக்கவிருப்பதும் விதி தான்… அன்னைக்கு உனக்குள்ள எரிஞ்சிட்டிருக்குற நெருப்பு தானாகவே அணையும்…”

“தாத்தா…. நீங்க சொல்லுறது எனக்கு புரியலை…”

“புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட, தெரிந்து கொள்ள முயற்சி செய் சிவா…”

“என்ன தெரிஞ்சிக்கணும்னு சொல்லுறீங்க தாத்தா?....”

அவன் கேட்டதும், சற்று நேரம் அமைதியாக இருந்தார் அவர்…

“என்ன நடக்கப்போகுது?... நான் என்ன தெரிஞ்சிக்கணும் தாத்தா?...”

“………………..”

“இதுவரை நீங்க இலைமறைகாயா சொன்னதெல்லாம் நடந்துருக்கு… ஏன் இன்னைக்கு இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட, எதுவா இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டுடாதன்னு சொன்னீங்களே தாத்தா… அதே போல அந்த நம்பிக்கையை கெட்டியா பிடிச்சிட்டு தான் கீழ விழுந்த நான் மேல வந்தேன்…”

“தெரியும் சிவா… இனி நடக்கப்போவதை எதிர்கொள்ள தயாரா இரு…”

“ஆயிரமே பிரச்சினை வரட்டும்… அதை நான் எதிர்கொள்ள தயாரா இருக்குறேன்… ஆனா சதிக்கு எதுவும் பிரச்சினை வரக்கூடாது தாத்தா…”

“அவ உயிருக்கு வந்த ஆபத்து எல்லாம் முடியுற நிலைக்கு வந்துட்டு சிவா… உன்னை நாகம் தீண்டினப்போ, உங்கிட்ட நான் சொன்ன இரண்டு விஷப்பரீட்சையில ஒன்னு இப்போ முடிஞ்சிட்டு… இனி அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை… கவலைப்படாத…”

அவரின் பதில் அவனின் முகத்தில் சந்தோஷத்தை கொடுத்தது இனிதே…

ஆனால் அதை கலைப்பதை போல் அவர் அடுத்து சொன்ன விஷயம் அவனை கொஞ்சமும் கலங்கடிக்கவில்லை சிறிதும்… மாறாக, அப்போது எதேச்சையாக அங்கே வந்த சதிக்கு தான் அது பேரிடியாய் அமைந்தது…

“உன் உயிருக்கு ஒரு சோதனை இருக்கு சிவா… வெகு சீக்கிரமே….”

அவர் சொன்னதை உள்வாங்கியவன், அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டான்…

“அப்போ இன்னும் ஒன்னு காத்திட்டிருக்கு அவளைக் காயப்படுத்த?...அப்படித்தான?...”

“…………….”

“நீங்க பதில் சொல்லமாட்டீங்கன்னும் எனக்கு தெரியும் தாத்தா…”

“………………”

“நீங்க சொல்லுற சோதனை மூலமா எனக்கு மரணம் நேரும்னு விதி இருந்தா அதை தடுக்க நான் யாரு?..”

எந்த பிசிறும் இல்லாமல் வெளிவந்தது அவன் குரல்…

“என் மரணம் தான் அவளுக்கு காயத்தைக்கொடுக்கும்னா, நிஜமாவே அந்த மரணத்தை நான் எதிர்க்கணும்னு நினைக்குறேன் தாத்தா… ஆனா, அதெல்லாம் விதியை மீறிய செயல்னு எனக்கும் புரியுது தாத்தா…”

புன்னகையுடன் சொல்லிக்கொண்டே, அவரைப்பார்த்தவன், “அவ என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும் தாத்தா… எனக்கு அது ஒன்னே போதும்…” என்றான் கண்மூடி அவள் முகத்தினை நெஞ்சுக்குள் கொண்டு வந்து…..

அவர் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு, “அவளுக்காக எத்தனை தடவைன்னாலும் சாக நான் தயார்…” என்றபடி அவன் அங்கிருந்து சென்றதும்,

அவன் போன திசையையேப் பார்த்துக்கொண்டிருந்த சதியின் உதடுகள்,

“அது நான் உயிரோட இருக்குற வரை நடக்காது…” என்றன பரிதவிப்புடன்…

சதியின் வார்த்தைகளும், அவளும், பிரம்மரிஷியின் கண்களுக்கு புலப்பட, அவரின் விழிகளோ மூடிக்கொண்டது சட்டென…

அனைவருக்கும் முன் வீட்டுக்கு வந்தான் ஜெய்… அவனைப் பின் தொடர்ந்தான் இஷானும்…

ஜெய்யின் மனதில் கேள்விகள் மலை போல் உயர்ந்த நேரத்தில், அவனது எண்ணங்களும் நினைவுகளை மீண்டும் ஒடவிட்டது நெஞ்சில்…

விழப்போகும் அளவு அவன் அந்த நுனிப்பகுதியில் கால்வைக்கவில்லை… அது அவனுக்கே நன்றாக தெரியும்….

எனில் தன் மீது வந்து மோதியவன் யார்?... அவனை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேனே…. எங்கே?.....

யோசனையில் மூழ்கி இருந்தவனின் மனக்கண்ணில் அவனை எங்கே பார்த்தோம் என்ற ஆராய்ச்சி ஒடிக்கொண்டிருக்க,

சட்டென அவனுக்குள் மின்னல் அடித்தது…

தன்னை அன்று பின் தொடர்ந்த திவாகரின் ஆட்களில் ஒருவன் தானே அவன்?!!!!!!!!!!!......

“திவாகர்………………”

சத்தமிட்டுக்கொண்டே ஜெய் திரும்ப, அந்நேரம் அவனின் முன் வந்து நின்றான் இஷான்…

Episode 24

Episode 26

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.