(Reading time: 14 - 27 minutes)

ரிப்பா... அப்படி இல்லாட்டாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா.... அவா பெரியவா என்ன சொல்றாளோ அதையே வாங்கிடுங்கோ..... வருஷத்துக்கு ஒரு வாட்டி கட்டிண்டா ஜாஸ்தி...... சப்போஸ் அவா அரக்குதான் வாங்கணும்ன்னு சொன்னாலும் வாங்கிடுங்கோ...... நான் அப்பறமா எனக்குப் பிடிச்ச கலர்ல இன்னொன்னு வாங்கிக்கறேன்....”

“ரொம்ப தேங்க்ஸ் குழந்த... சரி நாங்க எல்லாம் சாயங்காலம் இருக்க மாட்டோம்... நீயும் ஹரியும் எங்கயானும் போறதுன்னா போயிட்டு வாங்கோ....”

“என்னப்பா இது தேங்கஸ் எல்லாம் சொல்லிண்டு..... உங்க நிலைமை நேக்கு நன்னாப் புரியறது.... எங்கப்பாவும் இப்போ இதே நிலைலதான் இருக்கா..... அப்படி எல்லாம் இல்லைப்பா... நாங்கதான் ஃபோன்ல பேசிக்கறோமே..... அதே போறும்....”

“சரிம்மா நீ ஹரிக்கிட்ட பேசு.... எனக்கு வெளில போகவேண்டிய வேலை இருக்கு.....”

அதன்பின் ஹரி அம்மங்காப்பாட்டியின் அராஜகத்தைப் பற்றி கோவத்துடன் கத்த, ஸ்வேதா அவனை சமாதானப்படுத்த என்று நேரம் ஓடியது.   

மாலை ரெண்டு வீட்டிலும் தாத்தாக்களை பெண்ணிற்கும், பையனுக்கும் துணைக்கு வைத்துவிட்டு மற்ற அனைவரும் கிளம்பினார்கள்.  

அனைவரும் கிளம்பி பத்து நிமிடம் ஆன பின் அனந்து தாத்தா சோகமே உருவாக அமர்ந்திருந்த ஹரியின் பக்கம் வந்தார்.

“என்னடா கண்ணா.... ஏன் இப்படி அசோக வனத்து சீதை மாதிரி உக்கார்ந்துண்டு இருக்க....”

“ஹ்ம்ம் உங்க தாடகைதான் என்னை இப்படி உக்கார வச்சுட்டா.....  தாத்தா கடுப்ப கிளப்பாம போங்க... ஏற்கனவே உங்க பொண்டாட்டி என்னை வேண்டிய அளவுக்கு வெறுப்பேத்திட்டு கிளம்பியாச்சு.... உங்க பகுதிக்கு நீங்க வேற ஆரம்பிக்காதீங்கோ”

“டேய் அந்தக் கிழவி பத்தி பேசாதடா.... நானே அவ இல்லாம சித்த நாழி ஜாலியா என் ஜோலியப் பார்க்கலாம்ன்னு நினைச்சேன்...  டேய் கண்ணா... நீ ஒரு ஹெல்ப் பண்ணனுமே”

“உங்க பொண்டாட்டி பண்ணின வேலைக்கு நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு வேற நினைக்கறேளா..... நெவெர்.... என்னை ஸ்வேதாவை பாக்க விடாம பண்ணினா இல்லை.... உங்களுக்கு ஒரு ஹெல்ப்பும் கிடையாது”

“என்னடா லூசு மாதிரி பேசற..... உனக்கு லட்டு மாதிரி சான்ஸ் கொடுத்துட்டு போய் இருக்கா அம்பு.... இதை உனக்கு உபயோகப்படுத்தத் தெரியலைன்னு சொல்லு.....”

“என்னது  லட்டு மாதிரி சான்ஸா.... எது உங்க கூட என்னை விட்டுட்டு போனது லட்டு சான்ஸா.... போங்கோத் தாத்தா அப்பறம் ஏதானும் சொல்லிடப் போறேன்”

“டேய் அவ இங்க இல்லாம என்னை விட்டுட்டு போய் இருக்கா இல்லையா..... கண்டிப்பா லட்டு சான்ஸ்தான்.... நீ என்ன பண்ற.... ஸ்வேதாக்கு ஃபோன் பண்ணி ஒரு இடத்தை பிக்ஸ் பண்ற.... ரெண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்திட்டு வரேள்.....”

“தாத்தா நிஜமாத்தான் சொல்றேளா..... கண்டிப்பா அம்பு பாட்டி வந்தா போட்டுக் கொடுக்க மாட்டேளே...”

“ச்சே ச்சே என்னடா இப்படி சொல்லிட்ட..... நான் போய் அப்படி பண்ணுவேனா... இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு த்ரில்டா..... நினைச்சாலும் அப்பறம் கிடைக்காது.... அந்தக் கிழவிக்கு இதெல்லாம் புரியாது விடு.....”

“ரொம்பத் தேங்க்ஸ் தாத்தா.... ஆனா நாங்க வர்ற வரைக்கும் நீங்கத் தனியா இருக்கணுமே.... அம்மா வேற உங்களுக்கு சரியா ஏழு மணிக்கு பலகாரம் பண்ணிக் கொடுக்க சொல்லி இருக்கா”

“யாருடா தனியா இருக்கப் போறது.... நானும் பரமுவும் இன்னக்கு அவுட்டிங் போறோம்..... நாரத கான சபால கிரேஸி மோகனோட கூகிள் கடோத்கஜன் போலாம்ன்னு பிளான் போட்டு இருக்கோம்... அப்படியே அந்தக் கான்டீன்ல டிஃபன் சூப்பரா இருக்குமாம்..... ஸோ எங்களுக்கு டின்னர் அங்கதான்....”

“ஓ நீங்க ரெண்டு பெரும் ஊர் சுத்ததான் நைஸா என்னை ஸ்வேதாவோட வெளில போக சொல்றேளா... நல்ல விவரம்தான் போங்கோ.....”

“டேய் உன் கல்யாணம் வரைக்கும்தாண்டா நான் கொஞ்சம் வெளிய சுத்த முடியும்..... அப்பறம் அம்பு என்னை ஹவுஸ் அர்ரெஸ்ட்ல வச்சுடுவா....  அதுவும் பரமுவும், நானும் என்ன பக்கத்துலையா இருக்கோம்...   நினைச்சாக் கூட பார்த்துக்க முடியாது”

“எல்லாம் சரி... ஆனா கடைசி நேரத்துல டிக்கெட் எப்படி கிடைக்கும்....”

“அதெல்லாம் நாங்க அன்னைக்கே பிளான் போட்டுட்டோம்..... பரமுவோட ஃபிரெட்ன்ஸ் இங்க ரெண்டு மூணு பேர் இருக்கா... அவாக்கிட்ட சொல்லி வாங்கிட்டான்...... நான், பரமு அப்பறம் அவனோட ஃபிரெட்ன்ஸ் எல்லாருமா போகப்போறோம்.....”

“அது எப்படி தாத்தா.... இன்னைக்கு கார்த்தாலதான் அம்பு பாட்டி நானும், ஸ்வேதாவும் கடைக்கு வரக்கூடாதுன்னு சொன்னா.... நீங்க எப்படி அன்னைக்கே பிளான் போட்டேள்”

“அம்பத்தஞ்சு வருஷமா அவளோட குப்பைக்கொட்டறேனே.... அவ எப்போ எப்படி பேசுவான்னு தெரியாதா.....  அவ இதத்தான் சொல்லப்போறான்னு எனக்கு அன்னைக்கேத் தெரியும்”

“பிளானிங் எல்லாம் செம்மயாத்தான் இருக்கு...... திடீர்ன்னு அம்பு பாட்டி ஃபோன் பண்ணினா என்ன பண்ணுவேள்.....”

“நான்தான் உன்னோட நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகப்போறதா அவக்கிட்ட சொல்லிட்டேனே..... அங்க ஏதோ உபன்யாசம் நடக்கறது.... அதையும் கேட்டுட்டுத்தான் வருவோம்ன்னு சொல்லிட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.