(Reading time: 14 - 27 minutes)

மாம்டா அம்பி நேக்குக்கூட மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டுல ஒரு பச்சைக் கலர் புடவை கட்டிண்டு இருப்பா..... அது இருக்காப் பாரு”, உனக்கு நான் சளைத்தவளா என்று பங்கஜம் கூற கௌஷிக்  கடுப்பாகிவிட்டான்.

“பாட்டிஸ்  அந்தப்புடவை இன்னும் பத்மினிக்கிட்டதான் இருக்காம்...... உங்க பையன் அமெரிக்காலதானே இருக்கார்.... பத்மினியும் அங்கதான் இருக்கா..... வேண்ணா கேட்டுப்பாக்க சொல்லுங்கோ”,என்று கூற கடைப்பையனே சிரித்து விட்டான்.

“என்னடா சிரிப்பு..... அந்தக் காலத்துல குப்புஸ்வாமி எங்காத்துக்கே புடவை எடுத்துண்டு வந்து தருவார்... தெரியுமா...... நீ என்னடான்னா இங்க எடுத்துப்போட இத்தனை சலிச்சுக்கற.....”

“பாட்டி நீங்க யாரை சொல்றேள்.....”,கௌரி அதிர்ச்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தபடியே கேட்க......

“ஏன் நல்லி குப்புஸ்வாமியைத்தான் சொல்றேன்.... அந்தக்காலத்துல அவப்பா கடையப் பார்த்துப்பார்.... இவர்தான் எங்காத்துக்கு எடுத்துண்டு வந்து தருவார்..... என்ன ஒரு அடக்கம் தெரியுமோ..... நாங்க எத்தனை வாட்டி பிரிச்சுக்காட்ட சொன்னாலும் சலிக்காம காட்டுவார்..... ”, அம்பு மாமி கூற இன்று நாம் அடி வாங்காமால் போகப்போவதில்லை என்ற முடிவிற்கு வந்தார்கள் பத்துவும், ராமனும்.

“ஏம்ப்பா உங்க  கனவுல அப்படியே இந்த பாட்டிகளுக்கும் என்ன புடவை எடுக்கணும்ன்னு பாட்டி சொல்லி இருக்கான்னு சொல்லி இருக்கலாம் இல்லை.... பிரச்சனையே இல்லாம முடிஞ்சு இருக்கும்”, கௌரி அங்கலாய்க்க இந்த முறை பத்து ஹெல்பிற்கு வந்தார்.

“அத்தங்கா நீங்க மீண்டும் கோகிலா படம் பார்த்திருக்கேளா.... அந்தப் படம் முழுக்க ஸ்ரீதேவி ஒம்பது கஜத்துலதான் வருவா.... அசப்புல நீங்க ரெண்டு பேருமே ஸ்ரீதேவி மாதிரிதான் இருக்கேள்.... ஸோ நீங்க அந்த அரக்கு, பச்சை இல்லை ப்ளூ இதுல ஏதானும் ஒண்ணை எடுத்துக்கோங்கோ”, என்று ஐஸ் ஃபாக்டரியையே அவர்கள் தலையில் வைக்க.... அவர் ஸ்ரீதேவி என்று சொன்னதிற்காகவே மறு பேச்சு பேசாமல் ஆளுக்கு ஒரு புடவையை எடுத்துக் கொண்டார்கள்.  கடைப்பையன் மாமிகளிடமிருந்து காப்பாற்றியதற்காக பத்துவிற்கு தனியாக இரண்டு கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து ஸ்பெஷல் கவனிப்பு கவனித்தான்.

ஒரு வழியாக புடவை பர்ச்சேஸ் முடிஞ்சு அனைவரும் நாதெள்ளாவை நோக்கி சென்றார்கள். 

“ஏண்டிம்மா லக்ஷ்மி.... ஸ்வேதாக்கு இந்த பிச்சோடா, சந்த்ரபிரபை, சூர்ய பிரபை, ஜடை பில்லை, நெத்திச்சுட்டி  அப்பறம் இந்த வங்கி ஒட்டியாணம் எல்லாம் வாங்கிட்டியா.... அப்படி இல்லைனா நாதெள்ளால செட்டா வச்சிருக்கா.... அங்க வாங்கிடலாம்..... இப்போ எடுத்த புடவைக்கு மேட்ச்சா வாங்கிடலாம்..... என்ன சொல்ற...... என்னோட ஒன்னு விட்ட சித்தப்பாவோட ரெண்டாவது பொண்ணோட பேத்திக்கு இங்கதான் வாங்கினா....”, என்று அம்புஜம் கேட்க பத்துவிற்கு மயக்கம் வராத குறை.... அவர் பாவமாக ராமனைப் பார்க்க..... கௌஷிக் ஸ்வேதா ஏதானும் ஸ்பெஷல் டான்ஸ் performance கல்யாணத்தன்னைக்கு  பண்ணப்போறாளா என்று யோசிக்க..... கௌரி இதெல்லாம் என்ன ஐட்டம் என்று யோசித்தாள்.

“அம்மங்கா  நான்தான் அதெல்லாம் வாங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்..... அன்னைக்கு ஒரு நாள் நாள் போட்டுக்கப் போறா... இதுக்குப் போய் யாரானும் காசை வேஸ்ட் பண்ணுவாளா.... இப்போதான் முக்குக்கு முக்கு வாடகைக்குத் தராளே...... அது வாங்கிண்டா போறும்ன்னு சொல்லிட்டேன்”, என்று கூற அம்புஜமும் முணுமுணுத்தபடியே திருமாங்கல்ய செக்ஷனிற்குள் நுழைந்தாள்.

நல்லவேளையாக ஏற்கனவே அங்கே திருமாங்கல்யம் ஆர்டர் கொடுத்திருந்ததால் மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அதை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

அத்தனையும் வாங்கி முடித்து இரு குடும்பத்தாரும் அடுத்து கல்யாண மண்டபத்தில் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.