(Reading time: 12 - 24 minutes)

சுசீலா குணமாகி தில்லி திரும்பும் போது ராமச்சந்திரனுக்கு வேலை விஷயமாக ஒரு வருட ப்ராஜக்ட்டில் லண்டன் செல்ல வேண்டி இருந்தது.

"அம்மா நீங்க பத்மாவோட இங்கேயே இருங்க. அவ மாமியார் மாமனாரும் முடியாதவங்க. அவங்கள உதவிக்கு வர சொல்றது சரி வராது"

"நீ எப்படி சமாளிப்ப சுசி"

"நான் நல்லா தான் இருக்கேன்மா பார்த்துக்குறேன்"

"சரி சம்மர் லீவுக்கு வந்துருங்க"

"கண்டிப்பா மா நடுவில நாலு மாசம் தானே ஓடிப் போயிரும்"

தில்லி திரும்பியதும் வருத்தமான மனநிலையே நிலவியிருந்தது.. சிறிது  காலம் சென்றால் சரி ஆகிவிடும் என்றே முதலில் சுசீலா கிருஷ்ணமூர்த்தி நினைத்திருந்தனர்.

அந்த சம்மர் விடுமுறைக்கு மெட்ராஸ் போகலாம் என்று பேசிக்கொண்டிருக்கும் போது பிடிவாதமாக தான் வரவில்லை என்று சித்து அடம் பிடித்தான். சற்று துருவிக் கேட்கவே முதலில் பத்மா சொன்னது பின் காவ்யா  சொன்னது என அனைத்தையும் கொட்டித் தீர்த்தான்.

"காவ்யா தெரியாம சொல்லிருப்பா. சித்து வெரி குட் பாய்" எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் சித்து ஒத்துக் கொள்ளவே இல்லை. நாளடைவில் யாரிடமும் பேசாமல் ஒரு இறுகிய நிலைக்கு ஆளாகியிருந்தான்.

யாரைத் தவறென்று சொல்வது. நல்லது என்று நினைத்தே குழந்தைகளிடம் சொல்லிய ஒன்று வினையாய் ஆகிப் போனது. பத்மா நல்ல எண்ணத்தில் தான் அவ்வாறு சொல்லிருந்தார். சிறு குழந்தையான காவ்யாவும் அந்நேரத்தில் தாய் அழவே அறியாமல் சொல்லிவிட்டிருந்தாள். நடப்பவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு...வாழ்க்கையின் நியதியை புரிந்து கொள்ள காலம் தான் வழி காட்டும்.

"ன்னிக்கு அபி பத்தி அவன் சொல்லும் போது தான் அவன் முகத்திலே ஒரு வருஷம் பிறகு சிரிப்பையே பார்த்தோம்"

இந்தக் கதை முழுவதையும் சுசீலா சொல்லி முடிக்க ரத்னாவதி  கண்களும் குளமானது. இதையெல்லாம் அமைதியாகக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் அபூர்வா.

ப்ரண்ட்ஸ்... இந்த அத்தியாயம் எழுதும் போது என் மனதிலும் பாரம். இது போல ஒரு விபத்தும் இழப்பும் கதையில் மட்டுமே  நடப்பதாக இருக்கட்டும் என்றே பிரார்த்திக்கிறேன். அடுத்த அத்தியாயம் மிகவும் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாக இருக்கும். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.