(Reading time: 12 - 24 minutes)

ன்னொரு புறம்!

“உன் வீட்டுக்கு போகாமல் ஏன்டா என்னோடு வரேன்னு சொல்லுற?” காரோட்டிக் கொண்டே கௌதமைக் கேட்டாள் சதீரஞ்சனி.

“ சும்மாத்தான் மச்சி! வீட்டில் நான் தனியாக தானே இருப்பேன்? உன்னை பார்த்ததும் உன்கூட இருக்கணும்னு தோணிச்சு டா!” என்றான் அவன். அவனது குரலில் இருந்த அன்பு முதன்முறையாய் ரஞ்சனிக்கு கசந்தது!

இன்னும் எத்தனை நாட்கள் நட்பு என்ற உறவினுள் தனது உள்ளத்தின் காதலை மறைப்பது? நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருந்தது அவளுக்கு! எதுவாக இருந்தாலும் இன்று சொல்லிவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள் அவள்.

“ போதும்டா.. இந்த மாதிரி பாசமா பேசி பேசி என்னை கொல்லாதே!” என்று கூறியிருந்தாள் ரஞ்சனி.

“ ஹேய் என்ன மச்சி ? ஏதும் ப்ரச்சனையா?”

“ப்ரச்சனை தான்! சின்ன ப்ரச்சனை இல்லை! பெரிய ப்ரச்சனை. உன்கிட்ட சொல்லவா வேணாமான்னு யோசிச்சு யோசிச்சு நான் பைத்தியம் ஆகிடுவேன் போல!’ என்றவளை விநோதமாய் பார்த்தான் கௌதம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ ஹேய் எதுவா இருந்தாலும் சொல்லேன்டா! நான் உன் நண்பன் தானே ..? என்கிட்ட என்ன தயக்கம் ?”

“தயக்கமே நீ என் நண்பன் என்பதால்தான்!” என்று பீடிகை போட்டவளை கௌதம் முறைக்க,

“வீட்டுக்கு போயிட்டு சொல்லுறேன்டா” என கூறி வானொலியை உயிர்பித்தாள் சதீரஞ்சனி.

பூவென்ன சொல்லுமென்று காற்றறியும்

காற்றென்ன சொல்லமென்று பூவறியும்

நான் என்ன சொல்ல வந்தேன்

நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்

ஒரு நெஞ்சம் தான் அறியும்!

வானவில் என்ன சொல்ல வந்ததென்று

மேகமே உனக்கென்ன தெரியாதா?

அள்ளிப்பூ மலர்ந்தது! ஏன் என்று வெண்ணிலவே

உனக்கென்ன தெரியாதா?

வலியா சுகமா தெரியவில்லை!

சிறகா சிறையா புரியவில்லை!

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் ..

நான் சொல்லாமல் தவிக்கின்றேன்!

வானொலியில் ஒலித்த பாடலில் தன்னையே மறந்திருந்தாள் சதீரஞ்சனி. அவளின் வீட்டினுள் நுழைந்ததுமே ரஞ்சனியின் கையைப் பிடித்துகொண்டான் கௌதம்.

“முடியல டீ.. மண்டை காயுது! என்னன்னு சொல்லு!” என்றான் அவன் சோர்ந்த குரலில். சற்றுமுன் அவள்பேசிய ஓரிரு வசனங்களும் அந்த பாட்டும் அவனை என்னவோ செய்தது. உண்மை தெரியாவிடில் மண்டையேவெடித்து விடும்போல ஓர் உணர்வு தோன்றியதும், அதை வாய்விட்டேகூறினான் கௌதம்.

ஏதோ ஒரு வகையில், அவனது பதட்டம் ரஞ்சனிக்கு இதமாய் இருந்தது. அதை மறைத்து கொண்டு,

“ இரு ஜூஸ்கொண்டு வரேன்” என்று அசால்ட்டாய் கையை உதறிக்கொண்டு நடந்தாள் சதீரஞ்சனி.  ஜூஸ் கொண்டு வந்தவள், கௌதமின் எதிரே அமர்ந்து பேச தொடங்கினான்.

“ கௌதம், நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். என் தூரத்து உறவில ஒரு மாமா இருக்காரு. அவரோட பையனைத்தான்!” என்று இலகுவாய் கூறினாள் ரஞ்சனி.

ஏமாற்றம்! சொல்ல முடியாத ஏமாற்றம் அவனுக்குள் பரவியது! இதுவரை உணர்ந்திடாத வலியொன்று உள்ளத்தில் வியாபித்தது. தன்னுடைய பொம்மையை யாரேனும் பிடுங்கி கொண்டால் கோபப்படும் சிறுவன் போல.சுர்ரென கோபம் வந்தது.

“ என்ன பேசுற நீ?கல்யாணம்ன்னு ஈசியா சொல்லுற?என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா நீ? எப்பவும்  என் கூடவே இருக்குற.. திடீர்னு எவனோ உன்னை கல்யாணம் பண்ணிக்க போறான்னு நீ சொன்னதும் கைபிடிச்சு கொடுப்பேன் நினைச்சியா?” என்றான் அவன்.  எதற்கும் எளிதில் உணர்ச்சிவசப்படும் கௌதம்,நிச்சயமாய் இதற்கு கோபப்படுவான் என்று ரஞ்சனி அறிந்து வைத்திருந்தாள்.

எனவே இயல்பான குரலில், “ டேய் உன் பெஸ்ட் ப்ரண்டுக்கு கல்யாணம்னு சொன்னா சந்தோஷப்படாம கோபப்படுறியே! எவ்வளவு நாள் இவ்வளவு பெரிய வீட்டில் நான் தனியா இருப்பேன் கௌதம்?” என்று வலியுடன் வினவினாள்.

“இதுக்குத்தான் அப்போவே சொன்னேன் என் வீட்டுக்கு வான்னு..நீதான் கேட்கல.. நான் இருக்கேன்..அப்பா இருக்காரு…நீ இவ்வளவு தனிமையா ஃபீல்பண்ணுறன்னு தெரிஞ்சா அப்பாவே இங்க வந்துடுவார்.. இதுக்காக நீ கல்யாணம் பண்ணிக்கனுமா?” சிறுபிள்ளை போல வாதம் புரிந்தான் கௌதம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.