(Reading time: 15 - 29 minutes)

ரி சரி… எதற்கு கூப்பிட சொன்ன? வெளியே இருந்தேண்ணா.  அதான் பேச முடியல்ல” என்று வினவினாள் ப்ரியா.

அருள்மொழியின் சிற்றப்பா மகள் ப்ரியாம்வதா.  இருவரும் தினந்தோறும் வெப்கேம்மில் பேசிக்கொள்வது வழக்கம்.  அன்று எது நடந்தாலும் அதை அருளிடம் கூறாமல் ஓயமாட்டாள் ப்ரியா.  பள்ளியின் குறைந்த மதிப்பெண் எடுத்து அழுதுகொண்டிருந்தவளுக்கு ஆறுதல் சொல்லி, சித்தியிடம் அவளுக்காக பேசியதற்காக திட்டு வாங்கியவன் அவன்.  அருளுக்காகவும், அவன் தனக்காக அன்று நம்பிக்கையுடன் பேசியதற்காகவும் அடுத்த தேர்வில் தொடங்கி கல்லூரி வரை அனைத்து தேர்வுகளிலுமே முதல் மதிப்பெண் எடுத்தாள் ப்ரியா.  அண்ணன் என்றால் அவ்வளவு பிரியம் அவளுக்கு.

அதேபோல், அருளுக்கும் ப்ரியா இன்னும் வளர்ந்த குழந்தைதான்.  அவளுக்கு தமையனாக மட்டுமல்லாது, நண்பனாக, வழிகாட்டியாக, அரணாக எப்போதும் நிற்பவன்.  ப்ரியாவை யாரேனும் சுடுசொல் சொன்னால், அவர்கள் முதலில் எதிர்க்கவேண்டியது அருளைத்தான்.  ஆனால், இவனும் ப்ரியாவைப் பாதுகாக்க முடியாதுபோனது, அவளது தந்தையிடமிருந்து.

முதலில் அவர் ப்ரியாவை வெறுப்பது கண்டு அவரை வெறுத்தவன், அதன் காரணம் தெரிந்ததும் பெரிதும் வருத்தப்பட்டான், தன் தங்கைக்காக.  அவரின் செய்கையைக் கண்டு சிறு கோபமும் எழுந்தது அவனுக்கு.  என்ன செய்வது?  பெரியவரான சிற்றப்பாவிடம் அதுபற்றி பேசவும் முடியவில்லை; தானாக சரி செய்ய ஏதேனும் முயற்சி செய்து பார்த்தாலும் அது தோல்வியிலேயே முடிந்தது.  அதனால், ப்ரியாவுக்கு தமையனாய் மட்டுமல்லாது, தந்தையாகவும் பாசம் காட்டினான் அருள்.  இப்பொழுது கதைக்கு வருவோம்.

ப்ரியாவை பல வழிகளில் தனது ruined romantic moment-ற்காக அழைக்கழித்துவிட்டு, அவழது வழக்கமான “ப்ளீஸ் அண்ணா” என்ற கெஞ்சலில் மனம் மாறி, “நமது ப்ரியம்வதா என்னும் ப்ரியாவை வீடுகடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று டண்டோரா போடாத குறையாக அறிவித்தான் அருள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“வீடுகடத்தவா???” என்று புரியாமல் கேட்டாள் ப்ரியா.

“யெஸ் மை டியர்.  உன் தொல்லை தாங்காமல், குடும்பமே சேர்ந்து உன்னை திருமணம் என்னும் பெயரில் வீடுகடத்த முடிவு செய்துள்ளனர்” என்றான்.

“என்னது??? கல்யாணமா??? என்ன விளையாடுறியா??” என்று கோபம் மற்றும் குழப்பம் அடங்கிய கலவையாக இருந்தாள் ப்ரியா.

“ஹேய்… நீ தான இரண்டு வருடம் வொர்க் செய்யறேன், அதுக்கு அப்புறம் நீங்க சொல்ற பையனை திருமணம் செய்துக்கறேன்னு நான் சொல்ல சொல்ல கேட்காம சத்தியம் செய்தே.”

“அது ஏதோ ஒரு வேகத்தில் சொன்னது.  இன்னுமா அதை புடிச்சு தொங்கறாங்க?”

“நீ மறக்கலாம்.  சித்தப்பா மறக்காம இன்னைக்கு வந்துட்டாரு, ஒரு வரன் பார்த்துட்டு” என்று அருள் கூற, “என்னடா சொல்ற?? விளக்கமா சொல்லு” என்று ப்ரியா கேட்க, விவரிக்க ஆரம்பித்தான் அருள்.

காலை பதினோரு மணி,

அந்த வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.  அதிலிருந்து ஒரு தம்பதி இறங்கி உள்ளே வந்தனர்.  அவர்களது வரவை எதிர்பார்த்தே காத்திருந்தாற்போல மற்றுமொரு தம்பதி உள்ளிருந்து வந்து வரவேற்க, அனைவரும் சென்று சோபாவில் அமர்ந்தனர்.

காரில் வந்தவர்கள் ப்ரியாவின் தந்தை கைலாசநாதன் மற்றும் தாயார் பவானி.  உள்ளிருந்து வந்து வரவேற்றவர்கள், அருளின் தந்தையும் கைலாசநாதனின் அண்ணனுமான விஷ்வநாதன்.  அவருடன் வந்தது அவரது மனைவி மீனாட்சி.

“என்ன அண்ணா இது?  நம்ம வீட்டுக்கு வந்ததற்கு இந்த வரவேற்பெல்லாம் வேண்டுமா?” என்று கேட்டார் வந்தவர், மற்றவரைப் பார்த்து.

“நிலா தினமும் வந்தாலும் பௌர்ணமி தனித்துவம் வாய்ந்தது தானே.  அதேபோல தான், நீ எப்போதும் வந்தாலும், இருவரும் சேர்ந்து வருவது ஸ்பெஷல்” என்று சொல்லி சிரித்தார் அவர்.

“நான் வந்ததும் ஸ்பெஷலா பேசத்தான்ணா” என்று தன் அண்ணனிடம் தான் பேச வந்த விஷயத்திற்கு அடித்தளம் போட ஆரம்பித்தார் அவர்.

“அப்படி என்ன விஷயம் சொல்லனும் கைலாசம்?” என்று கேட்டார் விஷ்வநாதன்.

“நான் ப்ரியா காலேஜ் முடிச்சப்போவே இதப்பத்தி பேசுனேன்.  அப்போ நீங்க, அம்மா எல்லாரும் சேர்ந்து என்னை தடுத்துட்டீங்க.  ப்ரியா வேலைக்கு போகனும்னு கேட்ட ரெண்டு வருஷமும் முடிஞ்சுருச்சு.  இனி எனக்கு மறுக்க மாட்டீங்கன்னு நெனைக்குறேன்”

“கைலாசம், எதுக்கும் நாம” என்று விஷ்வநாதன் கூற வர, “குறுக்கே பேசறேன்னு நினைக்காதீங்கண்ணா.  நீங்க ஏதாவது சொல்லி, அதை நான் மறுத்தேன்னு இருக்க வேண்டாம்” என்றார் கைலாசநாதன்.

அவர் கூறிய விதமே ‘யார் எதிர்த்தாலும் இது நடந்தே தீரும்’ என்று தீவிரமாக கூறியது.  அதற்குமேல் எதுவும் கூற முடியாமல், “சரி கைலாசம்.  உன் இஷ்டம்” என்று உடன்பட்ட விஷ்வநாதன், “மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.