(Reading time: 22 - 44 minutes)

ந்த..... “, என்று வாயில் வந்த கெட்ட வார்த்தையை அடக்கி, “....... இடியாடிக்!!! அவள்ல்லாம் ஒரு ஆளு!!!!! அவகிட்ட போய் பழக்கம் வைச்சிருக்கே????”, என்று  கொந்தளிப்பாக கத்தியவனை கண்டவளுக்கு.. ஃபிலோமினாவை எண்ணி பரிதாபம் வந்தது!

“எவனோ மிஸ்பிகேவ் செய்ததுக்கு ஃபிலோவை ஏன் திட்டுறீங்க!”,

என்றாளே பார்க்கணும்! நெற்றி நரம்பு புடைக்க, “லூசா நீ!!!”, என்று கையை ஓங்கி அவளை நோக்கி பாய்ந்தவன்... மருண்டு பின்னெட்டு வைத்தவளை கண்ட பின் தான் நிதானத்திற்கு வந்தவனாக...

ஓங்கிய கையால் தலையை பிடித்து அழுத்தியவாறு... “ச்சே!!!!!!”, என்ற சலிப்புடன்.... பைக்கை உதைத்து கிளப்ப..

அவன் காட்டிய தீவிரம்... எங்கே விட்டு விட்டு போய் விடுவானோ என்ற பயத்தில் அவன் பின்னால் ஏறிக் கொண்டாள். அதை செய்யும் பொழுது அவன் தோளைப் பற்றியது தான் தாமதம்..

விலுக்கென்ற அவன் தோள் உலுக்கலும்.. முகம் காட்டிய கடினமும்.. “தள்ளி உட்கார்!”, என்ற உறுமலும்  அவள் கரத்தை தானாக பின் வாங்க வைத்தது!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

மறுபடியும் மலையேறி விட்டானே.. இவனை எப்படி சமாதானம் செய்ய என்ற கவலை வந்தாலும்.. அவனுக்கு இணக்கமாக நடக்க முயன்று சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தவாறே  

சற்றே மெல்லிய குரலில்...

“ஃ பிலோவிற்கு போதை பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா அவாய்ட் செய்திருப்பேன் ஆர்யா!”  

அவனை சமாதானம் படுத்த வேண்டும் என்பது நோக்கம் என்றாலும், தன்னிடம் நட்பாக பழகிய ஃபிலோமினாவை விட்டு தர மனம் ஒப்பாமல்,

“ பட், அந்த கெட்ட பழக்கத்தை தவிர்த்து பார்த்தா ஷி இஸ் குட் ஃப்ரண்ட்! ”, என்றாள் இறைஞ்சுதலாக!

அவளின் அருகாமை கொடுத்த இதமோ... இல்லை யாரையும் பழித்து பேச எண்ணாத குணமோ... இவனுக்கு கவலையை அதிகமாக்கியது. அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

“ஃப்ரண்ட்லியா பழகுறது வேற... ஃப்ரண்ட்ஷிப்ங்கிறது வேற.. நட்பா எல்லார் கூடவும் பழகலாம்! ஆனா, நம்பிக்கை சிலர்கிட்ட.. வெகு சிலர்கிட்ட மட்டும் வைக்கணும்!”

“ஃபிலோமினா பத்தி நான் விசாரிச்ச வரைக்கும் அவ போதைக்காக எந்த அளவுக்கும் இறங்குவா! அதுக்காக தான் அவளை அந்த கேங்கில் ‘யூஸ்’ பண்றாங்க! அவ கூட போனாதால உன்னையும்”,  

என்று சொல்ல ஆரம்பித்தவனுக்கு அந்த சம்பவம் மனதை அழுத்த.. அதை  அப்படியே நிறுத்திக் கொண்டான்.....

அவன் சொல்ல சொல்ல...  

அஞ்சனாவிற்கு ஃபிலோமினா பப்பில் நண்பர்களுடன் இருந்த காட்சி கண் முன்னே வர,

‘அந்த இன்டிமெஸி ஃபிரண்ட்ஷிப் இல்லையா?’,  

அந்த நெருக்கத்தின் தன்மை உணர்ந்தவளுக்கு அருவருப்பு தோன்ற.....  

‘ச்சே! இப்படி ஒரு கும்பலுடனா இருந்திருக்கிறோம்???’

திகைப்பும்..

‘இப்படி கூட இருப்பார்களா???’,  

மிரட்சியுமாக... அப்படியே சமைந்து விட்டாள்!

இவன் பேசாமல் நிறுத்தி கொண்டாலும்.. தனக்கே மனதை அழுத்தும் விஷயம்...பாதிக்கப்பட்ட இவளுக்கு எப்படி இருக்குமோ.. மனது கேட்காமல்...ரியர் வியூ கண்ணாடி வழியாக பார்க்க...  

அவள் கண்களில் தெரிந்த மிரட்சி பரிதாபத்தை கொடுத்தது என்றால்.. அந்த ஹரி பிரசாத் இவளை நெருங்கும் பொழுது கூட இப்படி தான் மிரட்சியில் இருந்தாள் என்ற  எரிச்சலையும் உண்டு செய்ய..  

“நல்லா கொட்ட கொட்ட முழிக்க மட்டும் தெரியது!!!! சின்ன்ன்ன பப்பாவாட்டம் ஒருத்தன் தப்பா அப்ரோச் பண்றது தெரிய மாட்டேங்குது!!!!

இதுக்கு பிறகாது வளரப் பாரு!!“, என்றான் ஆதங்கத்தோடு!

அதுவரை யோசனையில் ஆழ்ந்திருந்தவளுக்கு இவன் சொல்லவும் ரோஷம் உண்டானது!

“அல்ரெடி ஓவர் ஹைட்!!! அஞ்சே முக்காலடி வளர்ந்தாச்சு!!!”,  

ஆணித்தரமாக புள்ளி விவரம் சொன்னவளைக்  கண்டவனுக்கு சிரிப்பு தாளவே முடியவில்லை!  

“நீ வளர கூட சான்ஸ் இருக்கும் போல! வளர்த்துக்க சான்சே இல்லை!!”, என்று கிண்டலடிக்க அது பெருத்த அவமானமாகிப் போய் விட்டது அஞ்சனாவிற்கு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.