(Reading time: 22 - 44 minutes)

தற்கிடையில் எப்படி வண்டியை நிலைப்படுத்தினான்? எப்படி சீரான பாதையில் திருப்பினான் என்பது கடவுளுக்கே வெளிச்சம்!!!

வண்டியை சீர் செய்யும் வேளைக்குள் இவளுமே.. மின்னல் வேகத்தில் தன்னை நிலை படுத்திக் கொண்டு அவனிடமிருந்து விலகிப் போக....  

தவித்தான்!!!  

அவள் அருகாமை - தொடும் தூரத்தில் தானே இருக்கிறாள் என்ற சலனம் - “இன்னும் வேணும்... இன்னும் வேணும்’, என்ற பேரிரைச்சலுடன் ஓயாத அலைகளாய் மனதை அலைகழிக்க..   

கண்கள் தானாக பாதையில் அடுத்து தென்பட்ட பள்ளம் தேடி அதை நோக்கி வேகமாக வண்டியை செலுத்த....

“நிறுத்துங்க ஆர்யா!!!! நிறுத்துங்க!! வீடு வந்துடுச்சு!!!”, - பரபரத்தாள் அஞ்சனா!!!!

காற்றில் அலைப்புறும் கடலை போல... உணர்ச்சிகளின் வேகத்தில் அலைப்புற்று இருந்தவனை வேகத்தடையிட்டு நிறுத்தியது இவள் குரல்!  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

சுதாரித்தான்!!!! சற்று தாமதமாக!! தன்னிலை பெறுவதும்.. செய முனைந்த காரியம் கருத்தில் வருவதுமாக... அதிர்ந்தே போனான்.  

‘எதை நோக்கி போகிறோம்?’,  

திகைத்த கரங்கள் தானாக ப்ரேகிட்டது!  

சொல்ல சொல்ல கேட்காமல் போகிறானே என துணுக்குற்ற அஞ்சனா அவன் திடீர் ப்ரேக்கை எதிர்பார்க்கவில்லை! மீண்டும் சரிந்தாள் அவன் மீது...

சில நொடிக்கு முன் அவன் வேண்டுமென்றே செய்ய நினைத்தது! இப்பொழுது வேண்டுமென்றே செய்யவில்லை தான்!!!! சிந்தை தெளிந்தவனாக வேண்டாமென்றாலும், விடுகிறதா அவள் ஸ்பரிசம்???!!!  

ஒருவித பரவசத்துடன் உடலின் ஒவ்வொரு அணுவும் உணர்ந்ததை உள்ளமும் உள்வாங்க துவங்க......

‘நான் உனக்கு இல்லைன்னதும்.. என் இடத்திலே அவளை வச்சு பார்க்கிறியோ??’,  

இத்தனை ஆண்டுகள் மனதோடு உறவாடிய மர்ம ராணியின் கேள்வி அத்தனைக்கும் மதிலிட்டது!!! பளாரென்று அரை வாங்கிய வேதனை!   

தன் மரணம் மட்டுமே பப்பியை அவனிடம் இருந்து விலக்கும் என்பதை சர்வ நிச்சயமாக உணர்ந்தவனால் அந்த குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை!! கண்களை இறுக மூடி...

‘பப்பியை தவிர வேற யாரையும்... எப்போதுமே என்னாலே முடியாது!’

தீர்மானத்துடன் அழுத்தமாக தலையை உலுக்கி கண் திறந்த மறுகணமே...

எதையோ இழந்த பரிதவிப்பு!  

அவனை விட்டு விலகி பைக்கில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்!!!  

எங்கே தன் எண்ணம் போல அத்துமீறி விடக் கூடாது பார்வையை அவளிடம் இருந்து மீட்டவனுக்கு புரிந்தது - பிரிக்கவே முடியாத விதத்தில் மனதில் இருப்பவளையும் மீறி இவள் பால் பிரவாகமெடுப்பது வெறுமனே மெய் சார்ந்த தேடல்!!!!  

‘எத்தனை கீழ்த்தரமா இருக்கிறேன்!!!!’ - வெட்கி்னான்!  

‘நான் உங்க பாய் ஃப்ரண்ட்’, சினேக பாவத்தோடு  சொல்லி அதே  நம்பிகையிலே வந்தவளை நான் அப்படி பார்த்தேனா?’  

புழுங்க ஆரம்பித்த மனது,

‘ப்ச்.. ஆர்வமா கூட பார்க்க கூடாதுன்னு தானே  ஒதுங்கி போனேன். அப்படியே இருந்திருக்கணும்!!!’, மறு புறம் சலித்தது!!!  

ஆனால் குற்ற உணர்வு அவனை விடவில்லை!

‘வெறும் ஆர்வம் மட்டும் இருந்தா அப்படியே தான் இருந்திருப்பேன்!!! இது ஆர்வமில்லை! ஆசை! கேவலமான ஆசை!!! அவகிட்ட எல்லாரையும் நம்பாதேன்னு அட்வைஸ பண்ணி கடைசியில் நானே.. பப்ல மிஸ்பிகேவ் பண்ணவனை விட மோசமா...... சை’  

தன்னை மன்னிக்க முடியாது இவன் தவித்துக் கொண்டிருக்க...

பைக்கில் இருந்து இறங்கிய வேகத்திலே திடுமென அவன் முன்னே வந்து நின்றாள் அஞ்சனா!!!  

அவள் வந்த வேகமும், தன்னை நேர் கொண்டு பார்த்த அந்த கண்களில் இருந்த கலக்கமும்!!!!

‘தெரிஞ்சிருச்சா?? என் ஈன புத்தி தெரிஞ்சிருச்சா?’

மனம் பதறிப் போனான்! அதிர்ச்சியும் கவலையும் ஆட்கொள்ள அவளையே பார்த்த படி நிற்க....  

“ஆர்யா!! நான் உங்களோட ஃப்ரண்ட்ஷிப் மட்டும் தான் எதிர்பார்த்தேன்! ஆனா, நீங்க தப்பா...”

வேதனையோடு பேச ஆரம்பித்தவளுக்கு.... அதற்கு மேலே வார்த்தை வராமல் தொண்டை அடைக்க.. அழுகை தான் முந்திக் கொண்டு வந்தது!!!

அவள் உதிர்த்த மொழியும்.. சிந்தும் கண்ணீரும்.. இவன் ஊனை துளைத்து உயிரைக் கொல்லும் வலியை கொடுத்தது!!!!

காதல் என்பது மாய வலை!

சிக்காமல் போனவன் யாருமில்லை!!

சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை!!!

தொடரும்

Episode 21

Episode 23

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.