(Reading time: 22 - 44 minutes)

ஹே.. ஸ்டாப்! ஸ்டாப்!!! என்னமோ ஒன்னும் தெரியாத பேபி மாதிரிலே பேசிகிட்டு போறீங்க! அட் தி ஏஜ் ஆஃப் ஃபோர்ட்டீன் நான் பிக் கேர்ள் ஆனேன்!!!”,

என்று இவள் சொல்ல..  

‘நீ எப்போ ஆனா எனக்கு என்ன?? எதுக்கு என்கிட்ட சொல்றே?’, என்று மனதில் எழுந்த கேள்வியை வாய் விட்டு கேட்க முடியாது.. பார்வையில்  கண்ணாடி வழியாக வெளிப்படுத்த....  

அவள் அவனைப் பார்த்தால் தானே? தான் பேசுவதிலே குறியாக இருந்தவள்..

“நான் பிக் கேர்ள் ஆனதுமே எங்க சுகி அத்தை மனுஷங்களோட பாடி பயாலஜி, கெமிஸ்டரி...  எல்லாம்  படம் போட்டு விளக்கிட்டாங்க! சோ, யு நோ... எனக்கு பேட் டச் ன்னா என்னன்னும் தெரியும்! அவங்களை அவாய்ட்  செய்யணும்னு தெரியும்!”

என்று தன் பெருமையை பீற்றிய பின் தான் அவனிடம் பார்வையை.. அதாவது கண்ணாடியில் அவள் பார்வையை பதிக்க..  

இவள் சொல்லும் பொழுதே, ‘‘படம் போட்டு விளக்கினாங்களா?????!!!!!’, என்று அவனுக்குள் தலை தூக்கிய ஆர்வத்தை.. இது நமக்கு  தேவையில்லாத ஆராய்ச்சி என்று ஒதுக்கி தள்ளி இருந்தவன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

“என்ன எழவோ!! தெரிஞ்சா  கூட அவனுக்கு பாவம் பார்த்திட்டு நின்னிருப்பே!”, என்று ஏதோ பேச்சுவாக்கில் சொன்னவனை  

“ப்ச்... அது என்னவோ உண்மை தான்!!!”, என்று அதிர வைத்தவள்.. மேலும்,

“நான் டேக்வான்டோ ல ப்ளாக் பெல்ட்! என்னோட ப்ளஸ்சே என்னோட கிக்ஸ்!!! பயங்கர ஸ்ட்ராங்! அந்த ஹரிபிரசாத் என்னை முழுக்க கவர் செய்ததாலே அவனோட சென்சிடிவ் பாயிண்ட்ஸ்சை கிக் செய்தா தான் வெளியே வர முடியும்!”,  

என்று சொல்லும் வரை வீராப்பாக பேசி வந்தவள்...

“அது அவனுக்கு வலி உயிர் போகிடுமேன்னு தான் சாஃப்ட்டா...”, என்ற பொழுது  அவள் உடலோ அவன் கை தன் மீது ஊர்ந்ததை நினைவு கூறி... அருவருப்பாய் உணர வைக்க... அவளையுமறியாமல் குரல் கம்மியது!!

இவள் கெஞ்சலை பொருட்படுத்தாத அந்த செய்கையை நினைவில் கூட சகிக்க முடியாது கண்களை இறுக மூடி.... பின் பெருமூச்சொன்றை விட்டு அதை நினைவலையில் ஒதுக்கித் தள்ள முயன்றாள்.

வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாலும்.. ஒரு கண் கண்ணாடியில் வைத்திருந்தவனை... அத்தனை நேரம் துள்ளலும்.. துறுதுறுப்புமாக பேசி வந்தவள் முகம் நொடிக்குள் கசங்கிய பூவாய் மாறுவதும் அது வெளிப்படுத்திய அத்தனை அசெளகரியமும் ரணமாக்கியது!!!  

‘இப்படி ஒரு கஷ்டத்தை இழுத்து வைச்சிட்டாளே!’, சூரியனை மறைக்கும் மேகமாக.... அவன் புத்தியை அந்த கோபம் மறைத்து போட...   

“என்னத்தை சாஃப்ட்டா கிழிச்சே??!!! எல்லாத்தையும் அவன்கிட்ட கொடுத்துட்டு மூலையில் உட்கார்ந்து அழுறதுக்கா??”,  

என்று அடிக்குரலில் சீற.. அவள் நெஞ்சில் அம்பாக பாய்ந்தது அவன் கேள்வி!!!  

அவனுக்கோ... அந்த பாதகனுக்கு உதவ ஓடிய காட்சியே மனதிற்கு வந்து நின்று... காயத்தை கீறி விடுது போல அவனை மேலும் வேதனைப் படுத்த..

“அதுக்கு பிறகும் அடங்காம அந்த நாய்க்கு உதவ துள்ளிகிட்டு ஓடுற! உன்னை!!!!!”

பல்லைக் கடித்துக் கொண்டு சீறியவனின் வாயில் இருந்து அடுத்து வார்த்தைகள் வெளிப்படவில்லை!!!!

அவன் சீற்றத்தின் தாக்கம் வெளியிட்ட வார்த்தைகளை விட.. அவன் இறுக்கத்தில் அழுத்தமாக வெளிப்பட..

அது அவள் கசந்த மனதை கனக்க வைத்தது! அதன் பின் எவ்வளவு முயன்றும் இயல்புக்கு வர இவளால் முடியவில்லை! இவனால் என்னை மன்னிக்கவே முடியவில்லையே என்று அழக் கூடத் தோன்றாமல் சோர்ந்தாள்.

ஆர்யமனுக்கோ ஃபிலோமினா விஷயத்தில் அவளுக்கு அறிவுரை சொன்ன இலகுத்தன்மை ஹரிபிரசாத் விஷயத்தில் வரவே இல்லை! பாம்பிற்கு பாலை வார்க்க நினைத்த வெகுளித்தனத்தை என்ன சொல்ல?  

இவளை பற்றிய கவலையே கோபமாக விஸ்வரூபம் எடுத்து நிற்க இயந்திரத்தனமாக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்!  

சிறிது நேரம் சென்றிருக்கும்.. இருவருக்கும் இடையே இருந்த அமைதியாய் கிழித்துக் கொண்டு வந்தது இவன் அலைபேசி சிணுங்கல்!  

அவனிருந்த நிலையில் அதை எடுக்க தோன்றாமல்... தொடர்ந்து வண்டியை செலுத்த நினைக்கும் பொழுதே சிக்னலில் சிகப்பு விழ... வேறு வழியின்றி வண்டியை நிறுத்தியவன் அதற்குள் அதுவும் சிணுங்கி ஓய்ந்திருந்த அலைபேசியை எடுத்து பார்த்தான்..  

அழைத்தது பவதாரிணி தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.