(Reading time: 22 - 44 minutes)

விட மாட்டாங்க போலவே!’, என்று எண்ணும் பொழுதே... மகளுக்காக அவர்   அலைமோதுவது கண்டு பாவமாக இருக்க... எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊத்தியது போல அதுவும் கோபமாகி அவளிடமே திரும்ப...  சினத்துடன் கண்ணாடியைத் தழுவியது அவன் பார்வை! அவள் முக்கால்வாசி முகத்தை இவன் தோள் மறைத்து விட....  

இமை கொட்டாமல் மலங்க மலங்க தன்னையே பார்த்துக்  கொண்டிருந்த அந்த கண்கள் அவனை.... அவன் சினத்தை அசைக்கவே இல்லை! வெகு நேரமாக மனதோரம் அரித்தக் கேள்வியை வைத்தான் அவளிடம்!

“பார்ட்டிக்கு போறேன்னு வீட்டில் ஏன் சொல்லலை????”,  

தன்னையே கூர்மையாக நோக்கி அதிகாரமாக அவன் கேட்ட விதத்தில்.. அதில் இருந்த தீவிரத்தில்..

‘சொன்னா விட மாட்டாங்களே!!’  

மனதில் தோன்றியதை.. விளையாட்டு போல சொல்ல முடியாமல் திணறிப் போனாள். அவனிடம் உண்மையை மறைக்கவோ... சமாளிக்கவோ முயலாது...

தயக்கத்துடன் பார்வையும் கூடவே  தன் சிரத்தையும் தாழ்த்தி

ஒப்பு கொண்டாள்! தன் தவறை ஒப்புக் கொண்டாள்!!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

தனக்கு ஒரு ஒரு நிழல் கிடைக்காதா என்று ஏங்கிய காலங்களை கடந்து வந்தாலோ என்னவோ.. அந்த கொடுப்பினையை அலட்சியபடுத்தி இருக்கிறாள் என்பதும்.. அவரிடம் உண்மை சொல்லியிருந்தால் இவ்வளவு சங்கட பட்டிருக்க மாட்டாளே என்ற ஆதங்கமும் சேர்ந்து கொள்ள..  

“குடிச்சிட்டு கூத்தாட போறதை மறைக்க மட்டும் புத்தி நல்லா வேலை பார்க்குதுல்ல???!!!!”,  

கூரிய வார்த்தை அம்புகளால் அவளைத் தைக்க.. வலித்தது! குனிந்தவாறு ஏற்றுக் கொண்டாள் - தான் செய்தது தவறு தான்! எதிர்த்து பேசவில்லை அவள்!

அவனோ அதோடு விடவில்லை... சிக்னல் போடும் வரை சரமாரியாக அவளை வறுத்தெடுத்தவன் முடிவில்,

“மழையில் மாட்டிகிட்டேன்னு  நான் சொன்ன பொய்யை நம்பி.... இந்த நிமிஷம் வரை உன் குரலை கேட்கணும்ன்னு  காத்துகிட்டு இருக்கிறவங்களை நினைச்சுக் கூட பார்க்கணும் தோணுலை! ச்சே!!! என்ன பொண்ணோ!!!“  

என்று  எரிச்சலாய் சலிப்பை உமிழ்ந்து விட்டு அலைபேசி எண்களை அழுத்தினான்..

அத்தனை குற்றச்சாட்டையும் அமைதியாய் ஏற்றவளுக்கு.. கடைசியில் அவன் சொன்னதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை - பவதாரிணி பற்றி கவலை அவளுக்கு இல்லை என்று சொல்வதா?

‘பாவாகிட்ட பேசணும்னு ஃபோன் கேட்டேன் தானே!’’, என்று தவித்தவளாக தன் தரப்பு நியாயத்தை சொல்ல வருவதற்குள்..  

அவன் கை மட்டும் அவள் பக்கம் நீண்டு அலைபேசியை நீட்டியது!!!  

சன்னமாக ரிங் போகும் சத்தம் கேட்க.. ‘யாருக்கு கால் போகுது?’, என்ற யோசனையோடு அதை வாங்கும் பொழுது மறுமுனையில் அழைப்பு எடுக்கப்பட்டு  

“ஹலோ...”, என்று சன்னமாக ஒலித்த பவதாரிணியின் குரலில்... வேகமாக அதை வாங்கி காதோடு அணைத்தவளுக்கு ஏனோ அழுகை பிரவாகமாய் பொங்கி வந்தது...  

அதே சமயம் அந்த பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்லும் கிளைச் சாலையில் வண்டியை செலுத்தியவாறு,

“இங்கே இருந்து செகன்ட் ரைட் தானே??”, என்று எந்திரத்தனமாக கேட்டு வைத்தவனிடம்.....  

“ம்ம்ம்.. செகன்ட் ரைட்..”, என்றாள் தழுதழுக்கும் குரலில்!  

வண்டி இரைச்சலுக்கு இடையில் இவள் குரலில் இருந்த மாற்றம் பவதாரிணிக்கும் அழுகிறாளோ என்ற சந்தேகத்தை கிளப்ப... உண்டான ஒரு பதைபதைப்பில்  

“குட்டி! என்ன ஆச்சு? அழுதுகிட்டா இருக்க? எதுவும் பிரச்சனையா??? வீட்டுக்கு இன்னும் போகலையா..”,  

பதறிய படி விசாரிக்க.... அவர் பதட்டத்தைக் கண்டதும் அழுகையை கட்டுபடுத்த முயன்றவளாக..

“பிரச்சனைலாம் இல்லை! வீட்டு பக்கத்தில் வந்திட்டோம்.. ஆனா.. ஆனா....”, என்று ஏங்கியவாறு...  

“நான் உங்ககிட்ட சொல்லாம ஆபிஸ்லே இருந்து கிளம்புனேன்ல... ஆர்யா ரொம்ப திட்டிகிட்டே இருக்கார்! அதான் அழுகை அழுகையா வந்துடுச்சு!”,

என்று முடிக்கும் பொழுதே இன்னும் கண்ணீர் திரண்டது.

‘செய்றதை எல்லாம் செய்துட்டு இந்த லூசு எப்படி போட்டு கொடுக்குது!’, என்று அவளை மனதிற்குள் திட்டியவனுக்கு பவதாரிணி தன்னை எப்படி நினைத்தாலும் பரவாயில்லை என்ற இறுமாப்பில் தான் வண்டியை செலுத்தினான்.

வேறு ஏதும் பிரச்சனையோ என்று பயந்த பவதாரிணிக்கு அவள் சொன்னதும், ‘அட.. இதுக்கு தான் அழுதுகிட்டு இருக்கிறாளா?’, என்ற பதட்டம் குறைந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.