(Reading time: 22 - 44 minutes)

வள் அழுகை சிறு வருத்தம் உண்டாக்கினாலும்...தான் கண்டிக்க நினைத்ததை ஆர்யமன் செய்து விட்டான் என்று அவன் மீது ஏற்கனவே உண்டாகியிருந்த  மரியாதையை இன்னும் கூட்டியது!  

“நீ வீடு திரும்பலைன்னதும்.. நான் பதறினது அந்த தம்பிக்கு தானே தெரியும்! உனக்கும் இப்படி ஒரு ஆள் வேணும்! அப்போ தான் சரி வருவே!”, என்றார் உணர்ந்து!  

இவள் பேசியது பவதாரிணிக்கு எத்தனை நிம்மதி அளித்ததோ.. அத்தனை ஆறுதல் அவளுக்கும் அவர் பேசுவதை கேட்க! அதனால் பேச்சை ஆரம்பித்த பொழுது இருந்த அழுகை எல்லாம் கற்பூரமாய் கரைந்து போக.

“எப்படி?? நான் சரி வருவேனா??? அது சரி.. நீங்க சப்போர்ட் பண்ற அந்த தொம்பியை சரியில்லாம செய்திடுவேனாக்கும்”, என்று சூளுரைத்தாள் ரியர் வியூ கண்ணாடியில் தெரிந்தவன் மீது ஒரு கண் வைத்து -  

செவியை மட்டும் இவள் பேச்சில் வைத்தவன்.. பார்வையை சாலையிலே வைத்திருந்தான் - சாலை சீரமைக்க என்று ஆங்காங்கே தோண்டி போட்டு கிடக்க... அதி கவனத்துடன் வண்டியை செலுத்த வேண்டியிருந்தது!  

அஞ்சனாவிற்கோ அவன் பாராமுகம் காட்டுவது போல தான் தோன்ற..   ‘குடிச்சிட்டு கூத்தாட’, என்றவனின் சாடலை அசை போட்டு..  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

‘ஒரு வேளை ஃபிலோமினா போல ஒழுக்கம் தவறுபவள் என்று ஒதுக்குகிறானோ’ என்று தோன்ற.. மனதில் அடி வாங்கிய வலி!  

அவளும் என்ன செய்வாள்? வண்டியில் ஏறியதில் இருந்து திட்டிக் கொண்டே வருகிறவனை அவளால் அப்படி தான் எண்ணத் தோன்றியது.

அதற்குள் பவதாரிணி ஏதோ கேட்டிருக்க... இவள் பதிலின்றி யோசனையில் ஆழ்ந்திருக்க...

“ஹலோ!!! ஹலோ!! குட்டி!!”, என்று மீண்டும் மீண்டும் அழைத்த பின்..

“எ...என்...ன?? என்ன பாவா!!!”, என்றாள் விழித்துக் கொண்டவளாக!!  

அதாவது பாவா என்று முதல் முறையாக அவன் அறிய விளித்திருந்தாள்! அதை கேட்காமல் இல்லை ஆர்யமன்! கேட்டான் தான்!!! ஆனால் தன் செவிகளை தன்னாலே நம்ப முடியவில்லை!

‘பாவா ன்னா சொன்னா??? இல்லை நமக்கு தான் அப்படி தோணுதா!!’,  

நம்புதலுக்கும்  நம்பாமைக்கும் இடைபட்ட நிச்சயமின்மையில்...

ஐயம் தீர்க்க அவன் பார்வை ரியர் வியூ கண்ணாடிக்கு செல்ல..  பெருந்தூறல் ஒன்று தொப்பென்று விழுந்தது அந்த  கண்ணாடியில்!  

உள்ளம் சோர்ந்திருந்த அஞ்சனாவோ  பவதாரிணியிடம், “ஆங்.... சரியா கேட்கலை பாவா! மழை வருது! வீட்டுக்கு வந்து பேசுறேன்”, என்று அதையே சொல்லி அலைபேசியை வைக்கப் போக அவரோ,  

“ஏன் டல்லா பேசுறே? ஏதாவது சாப்பிட்டியா இல்லையா?”, என்றார் அவள் குரலில் உள்ள சோர்வை கண்டு கொண்டவராக!

அவரிடம் அதை முயன்ற அஞ்சனா,  

“சாப்பாடை பத்தி கேட்டா சுத்தமா அஞ்சனா காதிலே விழாது பாவா!”, என்று மீண்டும் பாவாவென்று சொல்வதைக் கேட்டதுமே  ஆர்யமனின் ஜயம் நீங்கி...  

‘அம்மா தான் பாவாவா? நான் கூட என்னமோன்னு நினைச்சேன்!!!’,  

நினைக்கும் பொழுதே பேரானந்தம் அவனுக்கு!!!!  

நெஞ்சை நிறைக்கும் சந்தோஷமே என்றாலும்... சட்டென்று மனித மனம் அதை முழுமையாக அனுபவித்து விடாது! இந்த மகிழ்ச்சி நிலைக்குமா என்ற சந்தேகமும் சேர்ந்து வரும்! இவன் என்ன விதிவிலக்கா?

‘அன்னைக்கு மால்ல லவ் பண்றேன் சொன்னாளே?’, அவள் முன்னர் சொன்னதை நினைவில் வைத்து அலச ஆரம்பிக்க...  

‘பெல்லி பாய்ன்னு சாமியை சொன்ன மாதிரி.. பாவான்னு அம்மாவை சொன்னது மாதிரி.. காதல்ன்னு ஏதாவது கத்திரிக்காயை காமிப்பா! ஆபிஸ்ல பார்த்த அந்த திருநீறு பார்ட்டி கூட அண்ணனோ.. தம்பியோவா தான் இருக்கும்! இந்த  லூசு சொல்றதை நம்பி  மறுபடியும் லூசாகிடக் கூடாது!’,  

அவனே அவனுக்கு சாதகமான பதிலை தேர்ந்தெடுத்தானோ?

இத்தனை யோசனைகளும் இவன் கண்ணாடியில் திரையிட்ட மழைத் துளியை துடைப்பதற்குள் வந்து போக...  

அதே சமயம் அஞ்சனா, “அஞ்சு ஏன் டல்லா இருக்க போறா? எப்பவும் ஹேப்பி பேபி தான்! நீங்களும் ஹேப்பியாக இதோ ஒரு உம்மம்மா!” விடைபெறும் முன் அவர் உள்ளம் குளிர அலைபேசி திரையில் இதழ் குவித்து முத்தம் வைத்தாள்.

முத்தம் வைத்து பற்ற வைத்தாள் - அந்த காட்சியின் சாட்சியானுக்கு ஆசைத் தீயை!!

கண்ணாடியை பார்த்த படியே சித்தம் தொலைந்தவனின் பைக் கட்டுபாடின்றி பள்ளத்திற்குள் சென்றது.

பவதாரிணியிடம் பேசி முடித்திருத்த அஞ்சனா வண்டியின் குலுங்கலில் தடுமாறி கொடி போல் இவனை சுற்றிக் கொள்ள....

ஏற்கனவே ஆசைத் தீயில் மாட்டிக் கொண்டவன் மீது பஞ்சு பொதியென சரிந்ததில்..... நொடிக்குள் மோகம் கற்றான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.