(Reading time: 22 - 44 minutes)

தனைகேட்ட பார்வதி அதுஎப்படி உனக்கு அதற்க்குள் கார் தருவார்கள்? என்று சந்தேகமாக கேட்கவும் அம்மா என்னுடைய சம்பளம் எவ்வளவு தெறியுமா என்றுகேட்டாள்

அதற்கு பார்வதி முப்பதாயிரம் என்று நீ காம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆனதுமே சொல்லிவிட்டார்களே என்று கூறியதும் கவிழையா மறுப்பாக தலையை அசைத்து அதைப்போல் மூன்றுமடங்கு அதிகம் என்று கூறினாள்

ஆச்சரியத்துடன் எப்படி கவி? என்று கேட்டாள் பார்வதி. அதற்கு கவிழையா முதலில் தான் சென்றதுமுதல் கையெளுத்துப்போடும் வரை நடந்ததை மட்டும் தன் அம்மாவிடம் கூறினாள்.

கையெழுத்துப் போட்டபின் பின் நடந்த அத்தனையும் கூறாமல் மறைத்துவிட்டாள் இப்போதைக்கு மற்ற எதையும் சொல்லவேண்டாம் என்று மறைத்துவிட்டாள்

அவள் சொன்னதைகேட்டு பார்வதி, உன்னால் இவவளவு பெரிய பொறுப்பை சுமக்கமுடியுமா கவி என்று யோசனையுடன் கேட்டாள். அதெல்லாம் நான் பார்த்துக்கொள்வேன் நீங்கள் இப்பொழுது எனக்கு கொஞ்சம் காபி போட்டுக்கொடுங்கள் அம்மா தலை வலிக்கிறது நான் குடித்துவிட்டு கொஞ்சநேரம் படுத்துக்கொள்கிறேன் என்று கூறினாள்

இன்னும் சிறிது நேரம் தன் அம்மாவிடம் பேசினால் அழுது உண்மையை சொல்லிவிடுவோம் என்று உணர்ந்து தன் அறைக்குள் சென்று குளியலறைக்குள் தாழ்பாள் போட்டு கொஞ்சநேரம் கடவுளே என்னை இந்த சூழ்நிலையில் இருந்து காப்பாற்று என்று கூறி சத்தம் வராமல் அழுதாள். பின் அழுதது தெரியாமலிருக்க முகத்தினை நன்கு நீரினால் கழுவி வேறு உடை மாற்றிவந்தவள் தன் படுக்கையில் விழுந்தாள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

றுநாள் காலை கவிழையாவிற்கு, ஏன்தான் விடிகிறதோ, என்று நினைத்துக்கொண்டு எழுந்து ஆபீஸ் கிளம்பினாள்.

தான் உடுத்தும் உடைமுதல் பேசும் வார்த்தைவரை கண்ணியமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவளுக்கு தன்னைபபார்த்து அவன் எப்படி இந்தவார்த்தையை கேட்கலாம் என்று நினைத்து இரவு முழுவதும் அவளுக்கு தூக்கம் வரவில்லை

மேலும் இவ்வாறு தன்னை கேட்டவனிடம் வேலைபார்க்கும் சூழ்நிலையில் இருப்பதை நினைத்து அழுகையை அடக்க முடியவில்லை

அப்பாவிடம் கூறி பணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாமா என்று நினைக்கையில் ஒரு ஐந்துலட்சம் என்றாள் தன் தந்தையால் ஏற்பாடு செய்துகொடுக்க முடியும். ஐம்பதுலட்சம் கண்டிப்பாக தன் அப்பாவால் முடியாது என்று உணர்ந்தவாளால் கேட்பதற்கும் தைரியம் வரவில்லை.

சாப்பாட்டு அறைக்குள் வந்தவளை பார்த்து பார்வதி, என்ன கவி, உன் முகம் டல்லாக இருக்கு என்று கேட்டவளிடம் கொஞ்சம் ஜலதோஷம் பிடித்துள்ளது அதனால்தான் .என்று கூறியவள் சாப்பிட்டுவிட்டு தன் டிபன்பாக்ஸ்சை எடுத்துக்கொண்டு வாசல் வந்தாள்

கார் வாசலில் காத்துக்கொண்டு இருந்தது. காரில் அவள் ஏறிச்செல்லும்வ்ரை வாசலில் நின்று மகளுக்கு கை அசைத்து உள்ளே வந்த பார்வதி ஈஸ்வரனிடம் கூறினாள், கவி நேற்று ஆபீஸ் போய் வந்ததில் இருந்து ஏதோ குழப்பத்துடனும் கலக்கத்துடனும் இருப்பதுபோல் தெரிகிறது.

என் மகளுக்கு ஏதோ பிரச்சனை என்று என் உள்மனதிற்கு தோன்றுகிறது இன்று இரவு அவளிடம் நீங்கள் பேசி என்னவென்று கேளுங்கள் என்று கலக்கத்துடன் கூறினாள் .

தன் மணைவி கூறியதை கேட்டு நீ ஒன்று பயப்படாதே நான் என்னவென்று இன்று இரவு கவியிடம் கேட்கிறேன் என்று கூறியவர் யோசனையுடன் தன் அலுவலகம் புறப்பட்டுச் சென்றார்.

விழையாவிற்கு வேலையின் அடிப்படையில் இருந்து கற்றுத்தர ஆரம்பித்த உமாவின் திறமையை கண்டு முதலில் பயந்து தன்னால் இப்பணியை செய்யமுடியுமா? என்ற சந்தேகம் வந்தது

அதனை உணர்ந்த உமா ஆதரவாக கவிழையாவின் கையை பிடித்து நான் இந்த பணிக்கு வந்து நான்குவருடம் ஆகிவிட்டது. நான் படித்தது செக்ரட்டரி வேலைக்கான படிப்பு என்றாலும் முதலில் நானும் உண்னை போலதான் இருந்தேன். போகபோக என்னைப்போல் எல்லாம் தெரிந்து கொள்வாய் என்று கூறினாள்.

கவிழையாவிற்கும் தன் மனச்சுமையைக் குறைக்க இவ்வேலையில் கவனத்தை செலுத்த முடிவு செய்து வெற்றியும் கண்டாள் மஹிந்தன் வரும் வரை.

மஹிந்தன் அன்று மதியம் இரண்டு மணிக்கு தன் அலுவலகம் வந்தவன் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டான்

அன்று காலை அவனுக்கு தான் மிகவும் எதிர் பார்த்த கிளையன்டிடம் இருந்து மிகப் பெரிய ஆடர் கிடைபதைப்பற்றி உடன்படிக்கை மேற்கொள்ள திட்டம் தயாரித்து வரும்படியும் நாளை அதற்க்கான உடன்படிக்கை மேற்கொள்ள அழைப்பு வந்திருந்தது.

எனவே மஹிந்தன் அதற்க்கான முடிவுகளை எடுப்பதற்கு தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தான். அங்கு கவிழையா என்று ஒருத்தி இருப்பதயே மஹிந்தனும் உமாவும் மறந்ததுபோல் இருந்தது அவன் செயல்கள் .

அவனுக்கு இதுபோல் வேலைசெய்யும் போது அடிக்கடி குடிக்க தண்ணீர் மற்றும் ஜூஸ் தேவைப்படும். அந்தநேரத்தில் மட்டும் ழையா தண்ணீர் என்றும் ழையா ஜூஸ் என்றுகேட்டு வாங்கி குடிப்பான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.