(Reading time: 22 - 44 minutes)

விழையா முதலில் ‘ழையா’ என்ற அழைப்புக்கு செவி சாய்க்கவில்லை.

மஹிந்தன் கூப்பிடுவதை காதில் வாங்காமல் இருப்பதைக் கண்டு கோபமாக தன் பக்கத்தில் வைத்திருந்த பேப்பர்வெயிட்டரை தூக்கி கோபத்துடன் விட்டெறிந்தான் அது தூள்தூளாக தரையில் மோதி சிதறியது.

அதில் பயந்து தான் உட்கார்ந்த ஆசனத்தை விட்டு எழுந்து நின்று தன் கண்களில் பயத்தினை காண்பித்து வார்த்தைவராமல் இருந்தவளின் கண்களைப் பார்த்தவன், அக்கண்களின் பயத்தினை கண்டு தன் கோபத்தினை மட்டுப்படுத்தி உமாவைப் பார்த்தான்.

அவளும் அதிர்ந்திருந்தாலும், அவன் தன்னைப் பார்த்தவுடன் வாய் தானாக எஸ் பாஸ் என்று கூறி பெல் அடித்து. வரவழைத்த ப்யூனிடம் தரையில் கிடந்த சிதறல்களை உடனே சுத்தம் செய்யுமாறு கூறினாள்.

அவன் ஐந்து நிமிடத்திற்குள் சுத்தம் செய்து போனான் அதற்குள் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கவிழையாவைப் பார்த்து நான் கூப்பிடுவதற்கு எப்படி உன்னால் செவிசாய்க்காமல் இருக்கமுடிந்தது என்றுகேட்டான் .

அதற்கு கவிழையா தன் நடுக்கத்தை மறைத்து கூறினாள், என் பெயர் ழையா கிடையாது கவிழையா என்று கூறினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அதற்கு மஹிந்தன் நான் அப்படித்தான் கூப்பிடுவேன் நீ திரும்ப இதுபோல் நடந்து, என்னைக் கோபப்பட வைப்பது உனக்கு நல்லதல்ல என்று கூறியவனின் கண்களில் கண்ட கோபத்தில் கவியின் தலை தானாக சரி என்று அசைந்தது.

மஹிந்தன் கவிழையாவை அவனுக்கு ஸ்பெஷல் ஆனவள் என்பதையும் அவள் அவனுடையவள் என்பதையும் எல்லோரையும் உணரச்செய்ய நினைத்தான்.

எனவே அவனுடைய கார் ஒன்றினையும் அவனுடைய டிரைவரையும் கவிழையாவை ஆபீஸ் கூட்டிவரும் பணியை செய்யவைத்தான்.

அக் கார் தங்கள் எம்.டி உடையது என்றும் அதை ஓட்டும் டிரைவர் தங்கள் எம்.டி காண விசுவாசி என்பதையும் அங்கு வேலைபார்க்கும் பெரும்பான்மையானவர்கள் அறிந்த விஷயம்.

மேலும் அதனால் அங்குள்ள பணியாளர்கள் யாரும் கவிழையாவிடம் ஒரு மரியாதையுடன் ஒதுங்கி இருந்தனர்

முதல்நாளில் அவளிடம் சாதாரணமாக பேசிய பிரசாத் ,ராம் போன்றவர்கள் மறுநாள் அவளை எதிரில் பார்த்து மரியாதையாக காலை வணக்கம் செய்து ஒதுங்கிச் சென்ன்றனர். இந்தவிபரங்கள் எதுவும் கவிழையா அறியவில்லை.

அதற்குபின் மஹிந்தனின் ழையா தண்ணீர், ழையா ஜூஸ் போன்ற வார்த்தைகளுக்கு அவள் கட்டுப்பட்டு நடந்தபோதும் அவனின் அப்பெயர் சுருக்கம் கவிழையாவிற்கு எரிச்சலை கொடுத்தது.

நேரம் செல்லச்செல்ல அவனின் தொழில் அறிவைக் கண்டவளுக்கு சிறிது மரியாதை அவன்மேல் வந்தது.

டெக்னிக்கலாக சில ஆலோசனைகளை கவிழையா அவர்களின் உரையாடல்களை கவனித்ததின் அடிப்படையில் தானாகவே முன்வந்து ஆர்வத்துடன் சொன்னாள்.

அவள் கல்லூரியில் பயிலும் போது அவள் ஒரு ப்ரொஜெக்ட் செய்து அதனை சமர்பிக்கும் நாள் வந்தபோது வந்த கடுமையான வயிற்றுபோக்கால் அவ்ளால் அதை சமர்பிக்க முடியாமல் போனது.

தற்போதிய மஹிந்தனின் தொழில் திட்டத்திற்கு அவள் செய்த ப்ரொஜெக்ட் பொருந்திவருவதை கண்ட கவிழையா தன்னை மறந்து ஆர்வத்தில் அதை கூறினாள்

அவள் கூறியதைகேட்டு யோசனையுடன் புருவம் உயர்த்திய மஹிந்தன் சில சந்தேகங்களை கேட்டான்

அதற்கு கவிழையாவின் விளக்கத்தை பார்த்தவன் மெச்சுதளுடன் நோக்கி அதன் பின் அவளையும் தங்கள் பணியில் அவள் அறியாமல் இணைத்துக் கொண்டான்.

அதன்பிறகு அவன் பருக ஜூஸ் தயாரிப்பதை உமா மேற்கொண்டாள். .

அவர்கள் திட்டம் தயாரித்து முடிக்க ஐந்தரை மணியாகிவிட்டது. அப்பொழுது கவிழையாவின் தொலைபேசி சத்தமிட்டது அதனை எடுத்துப் பார்த்தவள் காதில்கொடுத்து இதோ கிளம்பிவிட்டேன் அம்மா கொஞ்சம் வேலை அதிகம் அதனால் தான். என்று சொல்லிவிட்டு மணியைப்பார்த்தவள் 5:5௦௦3 ஆனதை பார்த்தவள் கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.

அப்பொழுது மஹிந்தன் நாளைக்கு இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஹோட்டல் சோழாவிற்கு செல்ல வேண்டும் அதற்கு ஏற்றார்போல் உடையணிந்து வா ழையா என்றான்.

அதனை கேட்ட கவிழையா நானா? என்று கேட்டாள். “நீயேதான்” இக்கொட்டேசனை பற்றிய விபரங்கள் அங்கு அலசப்படும்போது என்சார்பாக விளக்கங்களை சொல்ல நீ என்னுடன் அங்கு இருக்கவேண்டும். மாலை மூன்று மணிக்கு அங்கு செல்ல வேண்டும் நம் வேலை முடிந்து நீ வீட்டிற்க்குச்செல்ல இரவு ஆகிவிடும். என்று கூறினான்.

அதற்கு கவிழையா, நான் இரவு வெளியிடங்களுக்கு செல்வதற்கு என் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.