(Reading time: 22 - 44 minutes)

காலை உணவு சாப்பிடும் போது தயங்கி தன் பெற்றோரிடம் சோழா ஹோட்டலுக்கு செக்ரட்டரி என்ற முறையில் எம் டி யுடன் செல்ல வேண்டியதையும் வருவதற்கு இரவு ஆகிவிடும் என்பதையும் கூறினாள்

அவள் கூறியதை கேட்ட பார்வதி இதுபோல் ஹோட்டலுக்கு போகவேண்டியிருந்தால் நீ ஒன்றும் அந்த வேளைக்குச் செல்ல வேண்டாம், என்று கறார் குரலில் சொல்லிவிட்டாள்

அதனைக்கேட்ட ஈஸ்வரன் நீ இந்த வேலையில் சேர்ந்ததில் இருந்து உன் முகம் தெளிவில்லாமல் இருக்கிறது ஆதலால் அம்மா சொல்வதைப்போல் உனக்கு கஷ்டமாக இருந்தால் நீ இந்தவேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினார்.

அதற்கு கவிழையா எனக்கும் இதுபோல் ஹோட்டலுக்கு எம் டி உடன் போக இஷ்டம் இல்லை ஆனால் என்ன செய்வது, கொட்டேசன் தயாரிப்பதற்கு செக்ரட்டரி என்ற முறையில் நான் தான் உதவி செய்தேன் அங்கு இக் கொட்டேசன் பற்றிய விளக்கத்தை தொகுத்து கொடுப்பது என்னுடைய வேலை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஏனெனில் அந்த விபரம் எனக்கும் எம் டிக்கு மட்டும் தான் தெரியும் நான் போகவில்லை எனில் ஏற்படும் நஷ்டத்திர்க்கு நான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றாள்.

கவி அவ்வாறு கூரியதைகேட்டு ஈஸ்வரன், என்ன கவி சொல்கிறாய்? என்று கேட்டதும். அப்பா நான் வேளையில் சேரும் போது போட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் மூன்று வருடங்கள் அவர்களிடம் வேலை செய்ய சம்மதித்திருக்கிறேன்.

அதன்பிறகு ஒரு நிமிட மௌனமாகி பின் கூறினாள், நான் இப்பொழுது சொல்வது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம் நான் வேலை பார்க்கும் இடத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளேன்.

இதில் என் நிறுவனத்தின் இரகசியங்களை பாதுகாப்பதும் என்னுடைய முக்கிய பங்கு இருக்கிறது ஆதலால் திடீர் என்று நானாக என் பொறுப்பில் இருந்து விலக முடியாது

அப்படி நானாக விலகி வேலையை விட்டு நின்றுவிட்டால் என் எம்.டீ மஹிந்தன் அவருக்கு ஐம்பது இலட்சம் நஷ்ட்டஈடு வழங்குவதாக என் ஒப்பந்தத்தில் உள்ளது என்றாள்.

என்னது ஐம்பது லட்சமா? என்று அதிர்ந்து கேட்டனர், அவளது பெற்றோர்

உடனே பார்வதி நீ ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் முன்னர் அதனை படித்து பறக்கவில்லையா? என்று கேட்டார் .

அம்மா திடீர் என்று அவர்கள் என்னை செக்ரட்டரி போஸ்ட்டிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று கூறியதில் எனக்கு ஏற்பட்ட குழப்பத்தில் நான் ஒப்பந்தத்தை சரியாக கவனிக்காமல் கையெழுத்து போட்டுவிட்டேன் பின்பு தான் இவ்விபரங்கள் தெரிந்துகொண்டேன் .

அதனால் தான் இத்தனை நாளாக நான் குழப்பத்துடனே இருந்தேன் மற்றபடி எனக்கு வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாள்.

ஈஸ்வரனுக்கு, மகள் தன்னிடம் மேலும் எதையோ மறைப்பதாக மனதிற்குப் பட்டது. இருந்தாலும் இப்பொழுது அவரும் அலுவலகம் புறப்படும் அவசரத்தில் இருந்ததால் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்.

உடனே பார்வதி அப்படியானால் நீ இன்று ஹோட்டல் சோழாவிற்கு சென்றுதான் ஆகவேண்டுமா கவி என்றார்.

பதில்சொல்ல முடியாமல் மகள் திணறுவதை பார்த்த ஈஸவரன் அதுதான் அவள் நிலைமையை கூறிவிட்டாளே, என்றவர் பார்த்து கவனமாக போய் வரவேண்டும் கவி அங்கு உனக்கு எதுவும் மனதிற்கு பிடிக்கவில்லை என்றால் உடனே எனக்கு போன் பன்னிவிடு என்றார்.

சரிப்பா என்றவள். அம்மா கொடுத்த டிப்பனை வாங்கிகொண்டு வெளியில் வருவதற்குள் கார் அவளுக்காக காத்திருந்தது.

காரில் அவள் ஏறுவதற்குள் பார்வதி ட்ரைவரிடம் தம்பி இரவு கொஞ்சம் சீக்கிரம் என் மகளை கூப்பிட்டு வந்துவிடுங்கள் அவள் வீடிற்கு வரும் வரை எனக்கு நிம்மதியாக இருக்காது என்றாள்.

அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பொதுவாக அவன் தலையை அசைத்தான் .

கார் கிளம்பியதும் கவி, “டிரைவர் அண்ணா” என் அம்மாவிற்கு என்னை தனியாக வெளியிடங்களுக்கு அனுப்பி பழக்கம் இல்லாததால் பயந்து அப்படி உங்களிடம் சொல்லிவிட்டார்கள் நீங்கள் அதை பெரிதாக நினைத்துக் கொள்ளவேண்டாம் என்றாள்.

மஹிந்தனே அவளுக்கு கார் கதவை திறந்துவிடும் அளவில் தன் முதலாளிக்கு முக்கியமானவள் தன்னை அண்ணா என்று அழைப்பதை பார்த்து மகிழ்ச்சியடைந்தவன், என்பெயர் மூர்த்தி அம்மா என்னை பெயர் சொல்லியே நீங்கள் கூப்பிடலாம் என்றான்.

அதற்க்கு கவி நீங்கள் என்னைவிட பெரியவர்கள் தானே பிறகு எப்படி உங்களை நான் பெயர் சொல்லி கூப்பிட முடியும் என்றாள்.

அதற்கு பின் அமைதியாக அலுவலகம் வந்ததும் எதிர்பட்டவர்கள் அவளுக்கு மரியாதையுடன் வணக்கம் வைத்ததை பார்க்கும் போதுதான் பதிலுக்கு வணக்கம் சொல்லி யோசித்தாள் கவிழையா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.