(Reading time: 22 - 44 minutes)

தான் முதல் நாள் பார்த்தபோது மற்றவர்கள் தன்னை நட்புடன் பார்த்ததிற்கும் இப்பொழுது தன்னை பார்த்து மரியாதையாக நடந்துகொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தையும் பார்த்தவள் அது தன் செக்ரட்டரி பதவிக்கு வந்த மரியாதையோ? என யோசிக்க ஆரம்பித்தாள்.

அன்று மஹிந்தன் சீக்கிரம் வந்திருந்தான். நேற்றைய வேலைகளை சற்று அரேன்ஞ் செய்ய வேண்டியிருந்ததால் வேகமாக வந்துவிட்டான்.

கவிழையா கதவைத் திறந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவள் அழகில் ஒரு சிலநிமிடம் இமைக்க மறந்தான். இதுவே புடவை உடுத்தி அவளை பார்ப்பது முதல்முறை .

கவிழையா’.மஹிந்தனை பார்த்து ‘குட் மோர்னிங் பாஸ்’ என்றான் உடனே புன்னகைத்துக்கொண்டே ‘குட் மார்னிங், யு லுக் வெரி ப்யூட்டிபுல் டுடே’ என்றான்.

கவிழையாவிற்கு இன்று காலையில் தன் பெற்றோரை இவனால் வருந்தவைக்கும் சூழ்நிலையில் விட்டுவிட்டோமே என்று அவன் மேல் மிகுந்த எரிச்சலில் இருந்தாள். இதில் அவன் தன்னை மேலிருந்து கீழ்வரை கண்களால் ரசிர்த்து புன்னகைத்துக்கொண்டே பேசியதும் கவிழையாவின் முகம் அவள் எரிச்சலை அப்படியே பிரதிபலித்தது.

அதன் பின் நேரம் வேலையின் காரணமாக வேகமாகச் சென்றுவிட்டது மதியம் 2:3௦3 ஆனதிற்கு பின்தான் மதியம் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்த மஹிந்தன், மூர்த்திக்கு கால் பண்ணி அவனுக்கு தேவையான சாப்படை வரவழைக்கச் சொல்லிவிட்டு நீங்கள் இரண்டு பெறும் சாப்பிட்டு வாருங்கள் என்று கூறினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

எஸ் பாஸ் என்ற உமா கவிழையாவை பார்த்து இன்னைக்கும் நீ மதியச்சாப்பாடு வீட்டில் இருந்து கொண்டுவந்துவிட்டாயா? என்று கேட்டாள்.

அதற்கு கவிழையா நான் எப்பொளுதுமே வீட்டில் இருந்துதான் கொண்டு வருவேன் எனக்கு என் அம்மாவின் சாப்பாடுதான் பிடிக்கும். என்றைக்காவது ஒரு நாள் வேண்டுமானால் வெளியில் சாப்பிடலாம் தினமும் சாப்பிட்டால் வயிறு கெட்டுவிடும் என்று புன்னகையோடு உமாவிடம் கூறினாள்.

மஹிந்தன் கொஞ்சம் தள்ளிநின்றதில் சற்று இயல்பாக உமாவிடம் சிரித்து பேசிய கவிழையாவை பார்த்தவன் அவளின் பெண்மையின் அழகும் அவள் சிரித்துபேசிய விதத்தையும் கண்டவனுக்கு கோபம் வந்தது .

ழையா அவனிடம் மட்டும் இதுபோல் சிரித்து பேசாமல் உமாவிடம் பேசியதை கண்டவனுக்கு மனம் பொருமியது தன்னுடைய டிபன் பாக்ஸ்யை எடுத்துக்கொண்டு சிரித்துபேசியபடி உமாவுடன் வெளியே செல்லப் போனவளை ழையா என்று அழைத்தான்.

அவன் கூப்பிட்டதும் கவி முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது . அவளுக்கு பசி தாங்க முடியாது. இப்பொழுதே சாப்பிட நேரம் ஆகிவிட்டது என்ற கடுப்புடன் இருந்தவள் எரிச்சலுடன் சொல்லுங்கள் பாஸ் என்றாள்.

உமா செல்லாமல் கவிழையாவிற்காக நிற்பதைப்பார்த்து மஹிந்தன் நீங்கள் போய் சாப்பிடுங்கள் உமா. கவிழையா தன் சாப்பாட்டை என்னுடனே சாப்பிடட்டும். சாப்பிடும் போது கிளையன்டிடம் அவள் எப்படி பேசவேண்டும் என்பதை நான் கேட்டு ஏதேனும் மாற்றம் இருந்தால் சரிசெய்ய வேண்டும் என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மூர்த்தி மஹிந்தனின் சாப்பாட்டுடன் வரவும் உமா கவிழையாவிடம் ஒரு தலையசைவுடன் வெளியேறிவிட்டாள்.

மஹிந்தன் மூர்த்தியைப் பார்த்து என்னுடைய சாப்பாட்டை ழையாவிடம் தந்துவிட்டு நீ போ மூர்த்தி என்று சொல்லிவிட்டு ழையா வா என்று கூறி அந்த அறையின் உள்ளிருந்த ரூமிற்குள் செல்ல கதவினருகில் போனவன் கவிழையா வராமல் அங்கேயே நிற்பதைப்பார்த்து ஏன்? அங்கேயே நிற்கிறாய் என்று கேட்டான்.

நாம் இங்கேயே சாப்பிடலாம் பாஸ். என்று தன் கண்களில் பயத்துடன் கூறியவளை கண்டு மஹிந்தன் ஏன் என்னுடன் தனியாக அங்கே உட்கார்ந்து சாப்பிட பயமாக உள்ளதா? அப்படி பயம் உள்ளவள் முதல் நாள் வேலையில் சேரும்போது சொன்னது எல்லாம் பொய்யா? என்று கேட்டான்.

அவன் எதைச் சொல்கிறான் என்று யோசனையுடன் நான் அப்படி என்ன பொய் சொன்னேன் என்று கேட்டாள்.

அதற்கு மஹிந்தன் அன்று கவிழையா கூறியதுபோல் “அழுவதுபோல் நடித்துக்கொண்டே ஆனால் அத்துமீறி நீ என்னிடன் நடக்க முயன்றால் ஒற்று உன் உயிர் போகும் இல்லை எனதுயிர் போகும்” என்று கவிழையா சொன்னதுபோல் பேசிக்காண்பித்தான்.

அவன் தான் பேசியதுபோல் நடித்து காட்டியதை பார்த்து ரோஷத்துடன் எனக்கு பொய் சொல்லி பழக்கமில்லை எனக்கு ஒன்றும் பயமில்லை என்று கூறி இருவருடைய சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு அவன் பின்னால் அந்த அறைக்குச் சென்றாள்.

Episode # 04

Episode # 06

தொடரும்

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.