(Reading time: 15 - 29 minutes)

ண்மணியை ஆரத் தழுவி “ உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா” என்று சொல்ல நினைத்தான் சத்யேந்திரன். ஆனால், அவளுகென்று இருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைத்தான் அவன். தன் செயல் அவளது எண்ணத்தை குழப்பிட கூடாது என்று நினைத்தான்.

“ டேக் யுவர் டைம் மா” என்றான் சத்யன்.

“சரி, வெற்றி தேடுவான்.. நான் வரேன்!” என்று கண்மணி காரை விட்டு இறங்க முயற்சிக்கவும்,

“மறுபடியும் எப்போ தனியா பேச முடியும்?”என்று கேட்டான் சத்யன். கண்மணி அவனைக் கேள்வியாய் பார்க்க,

“ நான் நடிகன்மா.. நினைச்ச நேரத்தில் உன்னை பார்க்க முடியாது இல்லையா? ஏற்கனவே என்னோடு அர்ப்பணாவின் பெயரை சேர்த்து வெச்சு பேசுறாங்க. அந்த லிஸ்ட்டில் நீ வர வேண்டாம்.. தப்பா பேசுறவங்களோட நிழல்கூட உன்மேல பட விடமாட்டேன்” என்று தீர்மானமாய் சொன்னான் சத்யேந்திரன், நடக்கப்போகும் விபரிதத்தைப் பற்றி அறியாதவனாய்.

“ விதின்னு ஒன்னு இருக்கே இந்திரன்! அது இருக்கும்போது என்ன கவலை உங்களுக்கு? நாம அடிக்கனும் தனிமையில் சந்திக்கனும்னு விதியிருந்தால், நாளைக்கே கூட நீங்க என் கண் முன்னாடி நிற்பீங்க!” என்று சொன்னாள் கண்மணி. வசீகரமாய் புன்னகைத்தான் அவன்.

“வா.. உன்னை வெற்றி கிட்ட கொண்டு போயி விடுறேன்”என்றவன் காரை விட்டு இறங்க கண்மணியும் இறங்கினாள். இன்னும் சத்யனின் கோட்டை தான் அணிந்திருந்தாள் அவள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

கார்பார்க்கிங்கில் கண்மணியைத் தேடிக் கொண்டு வந்த வெற்றி அவளைக் கண்டதும் ஓடி வந்தான். கண்மணியின் அருகில் சத்யனா? அதிர்ச்சியுடன் அவர்களை நெருங்கினான். தன் தோழிக்கு தான் அவனை பிடிக்காதே? ஒரு வேளை படத்தை  பற்றி பேசி இருப்பாளோ? சத்யனின் கோட்டை ஏன் கண்மணி அணிந்திருக்கிறாள்? என்று பல கேள்விகள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் பாய்ந்திட சற்று வேகமாகவே அவர்களை நெருங்கினான் அவன்.

“ கண்ணு என்னாச்சு உனக்கு ? ஏதாவது பிரச்சனையா?” என்று அவன் கேட்க,

“ அய்யோ அதெல்லாம் ஒன்னுமே இல்லைடா.. மழையில் நனைஜிட்டே இருந்தேன குளிர் வந்துடுச்சு.. நடக்கவே முடியல.. சத்யன் ஹெல்ப் பண்ணார்.. வேற ஒன்னுமில்லை … வா போகலாம்!”என்றாள் அவள்.

சத்யனை ஆராயும் பார்வையாய் பார்த்து வைத்தான் வெற்றி.

“ ச.. சரி.. வா .. தேங்க்ஸ் மிஸ்டர் சத்யன்.. குட் நைட்!” என்றுவிட்டு கண்மணியை அழைத்துச் சென்றான் அவன். தன்னை நண்பன் கவனிக்கிறான் என்பதை உணராத கண்மணி அங்கிருந்து செல்வதற்குள் ஓரிரு முறை சத்யனின் உருவத்தை விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டாள்.

“நீயும் இங்கயே தங்கிடு வெற்றி..மணியாச்சு பாரு!” . வீட்டில் தன்னை இறக்கிவிட்ட நண்பனிடம் கூறினாள் கண்மணி.

“நோ கண்ணு .. நான்தான் சொல்லியிருக்கேன்ல? என்னால் உனக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது!” என்றான் அவன். வெற்றியின் வார்த்தைகளைக் கேட்டதும், “ தப்பா பேசுறவங்க நிழல்கூட உன்மேல பட விடமாட்டேன்!” என்று சத்யன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு அசரீரியாய் கேட்டது.

“கண்ணூ…!!” என்று அதட்டியிருந்தான் வெற்றி.

“ஆ.. ஆங்? என்னடா?”

“ கனவு காணுறியா? ஆர் யூ ஓகேன்னு கேட்டேன்? சத்யன் ஏதாச்சும் சொன்னாரா?”

“ப்ச்ச்.. காரிலேயே நீ ஆயிரம் தடவை கேட்டுட்ட வெற்றி.. நான்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லுறேன்ல? அப்பறம் என்ன?”

“நீ பொய் சொல்லுறன்னு எனக்கு தோணுது கண்ணு! ஒன்னும் இல்லன்னா நீ இப்படி கனவு கண்டுட்டு இருக்க மாட்ட! அதே மாதிரி, சத்யன் கிட்ட என்ன பேசினன்னு நீ வாயே திறக்கலயே!”

“..”

“சாதாரண பேச்சுன்னா நீயே என்கிட்ட இப்படி பேசினான் அந்த சிடுமூஞ்சுன்னு என்கிட்ட சொல்லி இருப்ப! சோ என்னவோ இருக்கு!”

“ டைரக்டர் ஆகுற வேலையை விட்டுட்டு லாயர் ஆகிடுறியா டா?”

“ பார்த்தியா? இப்போ கூட நீ என் கேள்விக்கு பதில் சொல்லல!” என்றான் வெற்றி.

“ டேய்!! உன்கிட்ட மறைச்சு நான் என்ன பண்ண போறேன்.. அப்படியே மறைச்சாலும் அது தற்காலிகம் தான்! எதுவா இருந்தாலும் நான் உன்கிட்ட தானே ஷேர் பண்ணுவேன் வெற்றி?” என்று அவள் சமாதானப்படுத்தும் குரலில் சொல்லவும்,

“ஓகே ! உன் இஷ்டம்.. ஐ எம் வெயிட்டிங்”என்றான் வெற்றி .

“ கண்மணி சத்யனிடம் வெற்றியின் படத்தைப் பற்றி பேசியிருக்க வேண்டும்! அவன் முதலில் மறுத்துவிட்டு பின்பு யோசிப்பதாய் சொல்லியிருக்க வேண்டும்! சத்யன் சரி சொல்லவேண்டுமே என்ற கவலையில் தான் கண்மணி இப்போது இருக்கிறாள்!” . இதுதான் வெற்றியின் கணிப்பு.

ஆனால் அது தவறென்று அவனுக்கு எப்போது தெரியவரும்? பொறுத்திருந்து பார்ப்போம்!

ராகவனின் காரை படம் எடுத்துக் கொண்ட நிரூபணா, அர்ப்பணாவைத் தேடிச் சென்றாள்.

“அபி.. அபி..!” என்று தோழியை உலுக்கினாள் அவள்.

“ ஆங்.. நிரூ.. வினய்.. வினய் வந்தான்.. அவன் என் மேல ஏசிட் “ என்று வார்த்தைகளை சொல்ல முடியாமல் தவித்தாள் அர்ப்பணா. கைகள் சில்லிட்டு அவள் நடுங்குவதை நிரூபணாவால் உணர முடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.