(Reading time: 15 - 29 minutes)

னால், மறுநாளே பத்திரிக்கையாளர்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக,

“நான் இனி நடிக்க மாட்டேன்” என்று சொல்லியிருந்தார் அவர். தன் தந்தையின் அருகில் நின்ற சத்யன் அதிர்ந்து தான் போனான்.

நிருபரில் ஒருத்தர், “ சார் , ஏன் உங்க இடத்துக்கு உங்களுடைய பையன் வர போகிறாரா?”என்று கேட்க, சத்யனின் முகம் கடுமையானது. கௌரவோ,

“ நான் சராசரி அப்பா சார்! என் மகனுக்கு எது இஷ்டமோ அதைதான் அவன் செய்வான்.. சோ உங்க கேள்விக்கு என்னுடைய பதில் நோ தான்” என்றார்.

கௌரவின் இந்த முடிவு கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியடைய வைத்திருந்தது. இதுவரை கால்ஷீட் கொடுத்த படங்களை மட்டும் நடித்து கொடுத்து முடித்தவர், சினிமாவை விட்டு வெகு தூரம் போயிருக்கலாம்!

ஆனால் அதை செய்யவில்லை அவர். சினிமா ஒரு கலை.. கலைஞனுக்கு அது ஒரு போதை! அந்த போதை அவரை மீண்டும் இழுத்தது. இதுவரை சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு படம் ஒன்றை தயாரித்தார் கௌரவ்!

அவர் வாழ்க்கையின் மிகத் தவறான முடிவு அதுதான். அதுதான் அவரது உயிரையும் பறித்தது. நடிகனாக பல தோல்விகளை சந்தித்த போது கூட தைரியமாய் இருந்தவர், தயாரிப்பாளாராய் தோற்று போனதும் மொத்தமாய் உடைந்து விட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

தன் சாம்பத்தியம் அனைத்துமே அந்த அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படத்தில் போய்விட்டது. படமும் ஓடவில்லை! பணம் தான் ஓடி போனது! மாரடைப்பில் விழுந்தவர் இறுதியாய் மரணப்படுக்கையில் வீழ்ந்து போனார்.

மரணம் அவருக்கு நிரந்த அமைதி தந்துவிட சத்யனின் வாழ்வில் புயல் உருவானது. நஷ்ட ஈடு, கடன் என்று யார் யாரோ அவன் வீட்டு வாசலில் நின்றனர். யார் சொன்னது உண்மை, எது பொய் என்று கூட தெரியாது அவனுக்கு! வீட்டையும் விற்று அவன் சாதாரண வாழ்க்கையை வாழ நினைத்தான்! ஆனால் கடன் மட்டும் அடையாமல் இருந்தது.

அப்போதுதான் ஒரு பிரபல இயக்குனர் அவனை சினிமாவில் நடிக்க வற்புறுத்தினார். குடும்ப சூழ்நிலை, பணக்கஷ்டம் இது அனைத்தும் மீறி எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற வெறி அவனுக்குள் தீயாய் கிளம்பிட பிடிக்காத சினிமாவில் அடியெடுத்து வைத்தான் சத்யன்.

நடிகரின் வாரிசு என்ற இருள் நிழல் அவனையும் துரத்தியது! அன்று இறுகிய முகத்துடன் ஓட ஆர்ம்பித்தவன், இன்று வரை ஓடி கொண்டிருக்கிறான்.

னக்கு இந்த வாழ்க்கை முறையே பிடிக்க கண்ணம்மா.. என் அப்பா அவ்வளவு நல்லவர் தெரியுமா? அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.. அவர் என்கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பறிச்ச சினிமா, கடைசியாய் அவருடைய உயிரையே காவு வாங்கிருச்சு!

என் அப்பா மக்களுடைய சொத்துல வாழுறார்! ரசிகர்கள் இல்லன்னா எங்கப்பாவே இல்லைன்னு யார் யாரோ பேசினாங்க! எங்க காசில் வாழுறவன் நாட்டுக்காக என்ன செஞ்சான்னு எங்கப்பாவை பார்த்து கேட்டவங்களும் உண்டு! ஆனால் என் அப்பா இல்லாமல் என் குடும்பம் தவிச்சப்போ எந்த ரசிகனும் வந்து உதவி செய்யலையே? எவனும் எங்களை வாழ வைக்கலையே?

நடிகன் மட்டும் பெரிய தியாகி மாதிரி தன்னுடைய சொத்தை நாட்டுக்காக கொடுக்குமாம்.. ஆனா அதே நடிகன் விழுந்துட்டா அவனை ரசிகர் தூக்கி விடாமல் அவதூறு பேசுவாங்களாம்! என்ன கண்ணம்மா இது ?

எவ்வளவு வதந்திகள் தெரியுமா? அப்பாவின் படம் ப்லாப் ஆனதும் அந்த அவமானம் தாங்காமல் அவர் குடிச்சே செத்துட்டாராம்!” என்று சத்யன் சொல்லி அழுதது கண்மணிக்கு ஞாபகம் வந்தது.

“ என் அப்பா விட்ட காசை திருப்பி எடுக்க தான் நான் நடிக்க வந்தேன்! எப்போ வேணும்னாலும் இந்த சினிமாவை தூக்கி எரிஞ்சுட்டு நான் போயிருவேன்! அப்போ நீ எனக்காக இருக்கணும் கண்ணம்மா! இருப்பீயா?” என்று கேட்டான் சத்யன்.

“ இருக்கேன் இந்திரன்.. கண்டிப்பா இருக்கேன்” என்று இப்போது தனிமையில் வாய்விட்டு சொன்னாள் கண்மணி! சத்யனின் நினைவுகளிலேயே அவள் கண்ணுறங்கிட, மறுநாள் அவளுக்கு பெரியதொரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னனு அடுத்த வாரம் சொல்லுறேன்!

ஹாய் ப்ரண்ட்ஸ், சத்யனின் தந்தையின் கேரக்டர் மூலமாக நான் சொல்ல நினைச்சது ஒரு விஷயம் தான்! நாட்டின் முன்னேற்றம் நடிகர்கள் கையில் இல்லை! அது தலைவர்கள் கையில் இருக்கு! தலைவர்களிடம் கேள்வி கேட்கமால், ஒரு நடிகனை பார்த்து “ நீ எங்களுக்கு என்ன செஞ்சனு கேட்காதீங்க!” . நடிப்பும் ஒரு தொழில்தான். நடிகர்களுக்கு கிடைக்கும் பணம், அது அவர்களுடைய சொந்த சம்பளம். நம்ம வீட்டு சம்பளத்தை அப்படியே மத்தவங்களுக்கு கொடுப்போமா? மாட்டோம்ல? முதலில் நம்மை தானே நாம் கவனிப்போம்? நட்சத்திரங்களும் அப்படியே! அதிரடி அத்தியாயத்துடன் மீண்டும் சந்திக்கிறேன்.. பாய் பாய்!

 

-வீணை இசைந்திடும்-

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.