(Reading time: 15 - 30 minutes)

போலீசார், வசந்தின் கார் கண்ணாடியை தட்டி கீழே இறக்குமாறு பணித்தனர். அவரது இன்னொரு கை இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கி உரையின் மீது இருந்தது.

கார் கண்ணாடி இறக்கப்பட்டது. "உங்க லைசென்ஸ், கார் டாக்குமெண்ட்ஸ் காட்ட முடியுமா சார்"

வசந்த் அவர் கேட்டதை எடுத்துக் கொடுத்தான். அதைப் பெற்றுக்கொண்ட போலீஸ் தங்கள் காரில் இருந்த வாக்கி டாக்கியில் கண்ட்ரோல் ரூமில் உள்ள அதிகாரியை தொடர்புகொண்டு ஆவணங்கள் எல்லாம் சரி தானா என்று சரி பார்த்தார்.

பின்பு, வசந்தின் காரை நோக்கி வந்தவர், வசந்தையும் ஜானையும் பார்த்தார். ஜான் பயந்தபடி திருட்டுப் பார்வை பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டு அவருக்கு சந்தேகம் வலுத்தது.

"நீங்க எதுக்கு வேகமாய் கார் ஒட்டுனீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"என் நண்பனுக்கு அதிகப்படியான குளிர் ஜுரம், அதான் சார்

அவசரமா மருத்துவமனைக்கு போயிட்டு இருக்கோம்"

போலிஸாரின் கண்கள் ஜானின் மேல் விழுந்தன, ஏற்கனவே நடுங்கிக்கொண்டிருந்தவன், அவரைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான்.

"குளிருதுனு சொல்றிங்க. கோட் எடுத்து மேல போட்டுக்கலாமே? எதுக்கு மடில வச்சிருக்கீங்க?"

"எனக்கு இடுப்புக்கு கீழ தான் ரொம்ப அதிகமா குளிருது சார் . தயவு செஞ்சி நான் சாகுறதுக்குள்ள வழியை விட்டிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்"

"சரி, நீங்க போகலாம்"

"நன்றி சார்"

கார் புறப்பட்டது.

போலிஸாரின் கண்கள் காரின் மீதே இருந்தன.

"என்ன சார் பலமான யோசனைல இருக்கீங்க?" சக போலீஸ்காரர் கேட்டார்.

"நேத்துல இருந்தே வித்யாசமான கேரக்டர்ஸ் பாத்துட்டு இருக்கேன். ஹாலோவீன் விழாவுல ஒரு பொண்ணு. இப்போ இவனுங்க" என்றபடி சந்தேகக் கண்களோடு கார் சென்ற பாதையைப் பார்த்தார் போலீஸ்.

தொடரும்...

Episode # 10

Episode # 12

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.