(Reading time: 17 - 33 minutes)

முதலில் அவளை தனியாக விட வேண்டாமென்று யோசித்த மைத்ரீ, சரயூ சொன்ன, ராகுலும் சஞ்சுவும் இங்க வரும்போது நாம இல்லைனா அவங்க டென்ஷனாகி நம்மளை தேடிராகுல் தன்னிடம் பேசியதை நினைத்தவளுக்கு மறுபடியும் கோபம் தலைக்கேற அவனை மனதில் திட்டியபடி, சரயூ சொல்வதும் சரிதான் என அமைதியானாள்.

சரயூ அந்த தளத்திற்கு வந்ததும் அவளைப் பார்த்த ஒரு ஜோடி கண்கள் மின்னின.  அப்போதிலிருந்து அவளை கவனித்து கொண்டிருந்த அந்த கண்கள் எங்கோ அவசரமாக செல்லும் அவளை பின்தொடர்ந்தன.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அதிசயமாக யாருமில்லாத ரெஸ்ட் ரூமினுள் நுழைந்த சரயூவிற்கு ஆச்சரியமாக இருந்தாலும் அந்த தனிமை அவளுக்கு தேவைபட்டது.  கண்ணாடியின் முன் கண்களை மூடி நின்றவள், ரவிகுமார் சொன்னதை நினைவுகூர்ந்தாள்.  “மனுஷங்க எல்லோருக்குமே ஏதாவது ஒரு பயமிருக்கும்.  சிலருக்கு தங்களோட பயம் எதுன்னு தெரிஞ்சிருக்கும், பலருக்கு தெரியாமலிருக்கும்.  நல்லது செய்து நல்வழியில் நடக்கும்போது எதைப் பார்த்தும் பயப்பட வேண்டாம்.  அதே சமயம், தப்பானவைகளை செய்யனும்னா பயப்படனும்…அப்போதான் நீ சரியான பாதையில் நடக்கிறன்னு அர்த்தம்.  நீ நல்வழியில் நடந்தும் ஏதாவது ஒரு பொருளோ, சூழ்நிலையோ உனக்கு பயத்தை கொடுத்தா அதை போக்க நீ போராடனும் இல்லனா அதுவே உன்னை பலவீனமாக்கிடும்.  பயத்தை போக்க, அந்த பயத்தை எதிர்கொள்வது தான் சிறந்த வழி. பயமிங்கிறது மனித மனசோட ஒரு நிலை.  முயற்சித்து அந்நிலையை கடந்துட்டா…இந்த உலகத்துல யாருக்குமே எதுமேலயுமே பயமே ஏற்படாது.  உனக்குள் இருக்கும் மொத்த தைரியத்தையும் திரட்டி உன்னோட பயத்தை ஃபேஸ் பண்ணும்போது அதை உன்னால சமாளிக்க முடியும்… உன்னால சமாளிக்க முடிஞ்ச ஒன்றுதானே அதுன்னு ஆழ்மனதுக்கு புரிஞ்சதும் பயம் காணாமல் போயிடும்.”

தந்தையின் வார்த்தைபடி தன் பயத்தை போக்க அந்த பயத்தையே எதிர்கொள்ள முடிவெடுத்தாள்.  தெளிந்த உறுதியான மனதோடு வெளிவந்தவளுக்காகவே காத்திருந்த கண்கள் அவளை மறுபடியும் தொடர்ந்தன.

Episode 06

Episode 08

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.