(Reading time: 34 - 67 minutes)

ல்லாம் ஆம் எல்லா எல்லாவற்றையும் இவள் சிறப்பாகவே திட்டமிருக்கிறாள்…..அதன்படி எக்குறையும் இன்றி நடந்தேறிவிடும் இன்று திருமணம் என்பது ருயம்மா தேவியின் நம்பிக்கை….

மரகலத்தில் முன்பு ஒரு வீரன் தயாரித்த உணவை உட்கொண்டு அவனுக்கு வரிவிலக்கு வாங்கி கொடுத்தாளே…. அதன் பின் அவ்வீர்ன் இவளிடம் அதிகமாகவே நன்றி பராட்டுவது உண்டு…

.”தங்களுக்கு அன்றும் உணவருந்த மனமில்லை என்றாலும் என் வரிவிலக்குகாகத்தான்  நீங்கள் முயன்று உண்டீர் என எனக்கு அப்போதே புரிந்தது…...எப்போதும் சற்று எங்களிடமிருந்து விலகி இருந்தாலும் எங்கள் நலனில் தங்களுக்கு அக்கறை உண்டென்பது எங்களுக்கு தெரியும்…அதை மேலும் ஒரு முறை  செயல்படுத்தி இருக்கிறீர்…. என் நன்றியை ஏற்றுக் கொள்ளும்படியாகவாவது  உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என சொல்லுங்கள்…. நான்  என்னால் முடிந்தவரை முயன்று பார்க்கிறேன்…” என அவ்வீரன் இவளிடம் துவங்கிய நன்றி பாராட்டல்….

தினமும் இவளது விருப்ப உணவாக மட்டுமல்ல….அவனது உபசார வார்த்தைகளாகவும் வெளிப்பட…..ஒருகட்டத்தில் அவனோடான சம்பாஷணைகள் வழியாகவே பாண்டிய தேசத்தின் இவ் உள்ளாட்சி முறை…. நடபடிகள்… பழக்க வழக்கங்களை இவள் அறிந்து கொண்டது….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அப்போது அவன் குறிப்பிட்ட ஒரு விவாஹ முறையை கொண்டுதான் இவள் மஞ்சிகை பொன்னிவச்சான் விவாஹத்தை நடத்திவிட நினைந்திருந்தாள்….

அதன் படி, இங்கு பொன்னிவச்சான் இல்லத்தில் தமையன் தம்பி முறைவரும் அனைவரும் மணமகனுக்கு சகோதர முறைமை செய்து கொண்டிருக்க…..

பொன்னிவச்சானின் சகோதரி மற்றும் சில பெண்கள் மணவினைக்கான மங்கலப் பொருட்கள் நிரம்பிய தட்டுகளுடன் மஞ்சிகை இல்லத்தை நோக்கி விவாஹ விழாவிற்கென செல்லத் துவங்கினர்.

வழக்கமான முறைப்படி….. சகோதர முறைமைகள் முடிய….தாய் மாமனிடம் மண அனுமதி வாங்கும் பிரகாரமாக அவருக்கு சபையில் வைத்து செய்ய வேண்டிய  கண மரியதைகளை கை கொண்ட பின்…..

 அவர் சூட்டும் மண மாலை அணிந்தே பொன்னிவச்சான் தன் சகோதரி மற்றும் குடும்ப பெண்கள் முன் செல்ல மணமகள் இல்லம் நோக்கி திருமண ஊர்வலம் துவக்க வேண்டும்…..

ஆனால் இங்கு பொன்னிவச்சானுக்கு சகோதர முறைமை நடந்து கொண்டிருக்க…..அதிலும் வெறுப்பில் விம்மிக் கொண்டிருந்த வில்லவனும்  “நல்லதிலும் கெட்டதிலும் பகை பாராட்டுவது நம் வழக்கம் இல்லை….” என உறவினர் வருந்தி  அழைத்ததன் காரணமாக பொன்னிவச்சானுக்கு சகோதர முறைமை செய்ய வந்திருக்க….

சற்று நேரம் சினமும் சிணுக்கமுமாய் அவன் கூட்டத்தினரிடமிருந்து விலகியே அமர்ந்திருக்க…..

அவை நடுவில் நடுநாயகமாய் வீற்றிருந்து சகோதர முறைமைகள ஏற்றுக் கொண்டிருந்த பொன்னிவச்சான்….ஒரு சமயத்தில் எழுந்து சென்று வில்லவனின் இரு கைகளையும் பற்றி…..

”எனக்கு சகோதரன் நீ…… கனி மீதோ உனக்கு அதீத பாசம் உண்டு…..நீ வாழ்த்தாமல் எங்களது வாழ்வு எவ்வாறு மலரும்…? அருளையின் மீதிருந்த பாசத்தால் நான் செய்த செயல் உன் மனதை வருத்தியதற்காக என்னை மன்னித்துவிடு…..” என அழைக்க…

முழு சினம் வடியவில்லை என்றாலும் ஓரளவு இயல்பாகி அவன் வந்து முறைமகள் செய்ய….அந்த செயலின் இறுதிக்குள் அவன் மொத்த மனமுமே இளகி விட….

ஆம் ஓடிப் பிடித்து…. ஓரே வட்டிலில் உணவுண்டு…. உருண்டெழுந்த காயங்களை ஒருவர் பெற்றோரிடம் மற்றவர் மறைத்து….. ஒன்றாக சுனை மீன் பிடித்து….விழாவில் ஒருவர் தொலைந்ததாக மற்றவர் அழுது என…. அடுத்தடுத்த வீட்டில் சிற்றப்பன் பெரியப்பன் பிள்ளைகளாய் வளர்ந்த உறவல்லவா……? ரத்த பாசம் என்பது சாதாரணமானதல்லவே……. மாலையும் கழுத்துமாக தம்பியை இப்படிக் காண…..வில்லவன் மனமும் கனிந்து போக…..முழு மனதாகவே இளையவனை அவன் வாழ்த்த…..

அதற்குள் அங்கு மஞ்சிகை இல்லம் சேர்ந்திருந்த பெண்டு பிள்ளைகள் மணவினையை துவங்கி இருந்தனர்……

ஆம் அத்தனை முறையுடனும் மஞ்சிகையின் இல்ல கூடத்தில் வைத்து சிறப்புற நிறைவேறியது திருமணம்…..பொன்னிவச்சான் சார்பாக மங்கல நாண் மஞ்சிகைக்கு அணிவித்தது அவனது சகோதரி…. இப்பொழுது மஞ்சிகை பொன்னிவச்சான் மனைவி….

இவளுக்கு உணவு வழங்கிய வீரன் மூலம் இம் முறை பற்றி கேள்வியுற்றிருந்த ருயம்மா இதை இங்கு பயன்படுத்திக் கொண்டாள். அது பராக்கிரமரின் தீர்ப்பை தாண்டுவதற்காய் மட்டும்.

மஞ்சிகை இல்லத்தில் இச்சம்பிராதயங்கள் நிறைவேற……அதே நேரம்……தன் தாய் மாமன் அணிவித்த மலர் மாலையுடனும்…. உறவின ஆண்கள் புடை சூழ…. நட்புகளின் சந்தோஷ சத்தங்களுடன் மஞ்சிகை இல்லத்தை நோக்கி ஊர்வலமாய் வரதுவங்கி இருந்தான் பொன்னிவச்சான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.