(Reading time: 34 - 67 minutes)

பின் மீண்டுமாய் ஒரு மணவினை துவக்கம்…… மணமகனாய் மலர்மாலை கழுத்தனாய்  தன் இல்ல கூடத்தில் வீற்றிருந்த பொன்னிவச்சான் அருகில் வந்து நிமிரா தலையுடன் அமர்ந்தாள் மஞ்சிகை…. கழுத்தில் புத்தம் புது மங்கல நாணுடன் அவள்….

“நேற்று இரவு வரை என்னை தனிமையில் சந்தித்தவளடி நீ…...இன்று என்ன தலை நிமிரா கோலம்…” தன்னவளை சீண்டினான் அவன்…

“போ மாமா…. நீ கொடுத்தனுப்பிய பூக்களின் கணம் அவ்வளவு….நெஞ்சம் நிறைய ஆசி கூறும் நம்மவர்களை காண ஆவலாகத்தான் உள்ளது…..கழுத்தை நிமிர்த்த வகையில்லை…” நாணமிருந்தாலும் தன்னை விட்டுகொடுக்காமல் வாயாடினாள் மஞ்சிகை…..

அத்தனை உச்ச சந்தோஷத்தில் அவள்…

சற்று தொலைவில் நின்று இக்காட்சியை கண்டு கொண்டிருந்த தன் வேந்தனையும் அவரோடு இணைந்து நின்று தங்களுக்கு உதபுவரையும் இப்போது பார்த்துக் கொண்டான் பொன்னிவச்சான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவர்கள் இருவர் வதனத்திலும் இருக்கும் பூரிப்பும் ஆசியும் இவன் இதயத்தையும் நிறைக்க……இம்முறை பெண்கள் மங்கல ஒலி எழுப்ப……தன்னவள் கழுத்தில் மங்கல நாண் பூட்டியது பொன்னிவச்சானின் கரங்களே… இது மணமக்கள் மற்றும் அவர்களது உற்றம் சுற்றத்திற்காக….

பார்த்திருந்த ருயம்மாவின் நெஞ்சத்தில் அத்தனை நெகிழ்வு…. இதய சாரத்தில் தாய்மை ஸ்வர சஞ்சாரங்கள்…...சமய சந்தர்ப்பமின்றி கண்ணில் நீர் துளிர்க்கிறது….

இதே நிறைவோடு தன் விவாஹம் மானகவசருடன் நடந்தேற…..இத்தனை இத்தனை இன்பமாய் அவரும் என்னை ஏற்றுக் கொண்டால் எவ்வாறிருக்குமாம் என்ற ஒரு ஏக்கம் அவளை மீறி எழுகின்றது அவளது இதயத்தில்….

‘மஞ்சிகை அவள் தகப்பன் அறியாமல் தன் மாமனை சந்தித்தற்கே இத்தனை சினம் கொண்டவர்……இவள் செய்திருக்கும் காரியத்திற்கு இவளை என்னவெல்லாம் சொல்லக் கூடும்…..’ என்ற எண்ணம் ஏக்கமுற்ற இதயத்தை இடித்து நொறுக்கவென இப்போது இணைந்தே எழும்ப….

அதுவரையும் இருந்த அனைத்து மகிழ்வுமே மறைய சரேலென ஒரு பெரும் சோர்வு ருயம்மா தேவியை பீடிக்கிறது….

மஞ்சிகை பொன்னிவச்சான் விஷயத்தில் மானகவசர் தீர்ப்பிட்ட சமயத்திலிருந்து அவ் விவாஹத்தை எவ்வாறு நடத்துவது என்பதிலும்…… அதன் நிமித்தம்  தன்னவன் மேல் ஏற்பட்டிருந்த சினத்திலும்……அதையும் மீறி அவர்  மீது வளர்ந்து கொண்டு போன  அபிமான  சிலாகிப்புகளிலும் மட்டுமாய் ஊடாடிக் கொண்டிருந்த அவள் மனம், இப்போதுதான் மீண்டுமாய் தனக்கு மானகவசர் கிடைப்பதற்கில்லை என்ற நினைவிற்குள் புக….. மனதளவில் பெரிதுமே வாதிக்கப்பட்டாள் ருயம்மா தேவி….

குறிக்கோள் நிறைவேறவும் தன்னிலை உணரும் தருணம்….

அந்தரத்தில் பவனி வந்தவள் அலை கடலுக்குள் விழுந்தார் போன்ற நிலை…. தத்தளித்தாள்….

  ஏதோ என்னை பெண்ணென்று உணர்ந்து அவர் பேசியதாய் எப்போதோ தோன்றினவே…. அவசர கதியில் அவ் வகை உரையாடலை இழுத்து வந்து சிந்தித்து தன்னை ஆசுவாசப் படுத்த இவள் முயல……

இந் நேரம் இவள் செவியில் விழுகின்றன அந்த சொற்கள்….. இவள் அருகில் நின்றுகொண்டிருந்த மானகவசரின்  வார்த்தைகள்தான்….

“நீ மட்டும் பெண்ணாயிருந்தால்…உன்னைத் தவிர வேறொரு பெண்ணை நான் ஒருகாலும் விவாஹம் புரியமாட்டேன்…”

விக்கித்தும் விதிர்விதிர்த்தும் சொல்லொணா உணர்வு பிரளயத்தோடும் இப்போது இவள் அருகில் நின்றவனை நிமிர்ந்து பார்க்கிறாள்…..

மானகவசரின் கண்களில் மின்னிய சீண்டலும் இடக்கும் இவள் கண்ணில் பட்டாலுமே….. ஏனோ அதை வெறும் வாயாடல் என எடுக்க முடியவில்லை இவளுக்கு….

“என்ன பிதற்றலிது….” இடக்கு என தெரிந்தும் அதில் சரியும் தன் மனதை அடக்கவே மானகவசரிடம்  சீறினாள் இவள்….

அதில் அவர் கண்களிலிருந்த குறும்பும் விஷமும் மறைய அங்கு வந்து கவிழ்கிறது காருண்யம் எனும் வான் மேகம்……இல்லை கனிவோ அது?..... நெகிழ்வா?....அல்லது நெக்குருகலா?

“தந்தையாய் இக் குடிகளை நான் நேசிக்கிறேன் என்றால்…..இன்று தாய் அன்போடு என்னை கூட எதிர்த்து இவ்விவாஹத்தை நீ செய்து வைத்த முறைமைக்கு…. “ என உணர்வு ததும்ப இவள் குவளை விழிகளை நோக்கி கூறி நிறுத்திய  பாண்டிய பராக்கிரமன்..... “உம்மில் பாதியளவு ருயம்மா இருந்தாலும் நான் பாக்யமுள்ளவன்….” என முடிக்கின்றான்.

இவர் என்ன சொல்கிறார்??!!! என  பிரமித்து நிற்கின்றாள் ருயம்மா தேவி…..

 ‘பாண்டியர்களை நான் நேசிக்கவில்லை…… அவர்களுக்கு அரசியாகும் தகுதி எனக்கில்லை…..’ என இவள் உழன்று கொண்டிருந்த ஒவ்வொரு நினைவும் தற்போது இவள் எண்ணத்தில் எழுந்து அவை எத்தனை பிழையானவை என்ற புரிதலுடன்…. தடமின்றி மறைகின்ற இவள் மனதில்….

இவள் மாறுவேடமிட்ட உண்மையை  அறிய நேரிட்டாலுமே, மானகவசரும் இனி ஒரு போதும் இவள் பாண்டியத்தை நேசிக்கவில்லை என எண்ணமாட்டார்…. இப்படி ஒரு நினைவும் இட்ஷணம் தோன்ற….எங்கிருந்தோ பீறி அடிக்கிறது பெரு நிம்மதி நீர் வீழ்ச்சி ஒன்று பெண்ணவள் உள்ளத்தில்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.