(Reading time: 34 - 67 minutes)

டுத்ததாய் விடைபெற இருக்கும் ருயம்மாதேவியையும் பாண்டிய பராக்கிரமரையும் மஞ்சிகையின் இல்லத்தின் பக்கவாட்டு பரப்பில் தனிமையில் சந்திக்கின்றனர் மணமக்கள்…

உணர்ந்து நன்றி நவின்றான் பொன்னிவச்சான்……

 பாண்டிய வேந்தன் தன் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் போதோ அருளையை காண்பித்துக் கொடுக்கும்படி கட்டளையிட்ட போதோ ஏதோ புரியவில்லை என்ற நிலையில் இருந்த அவன்….. ருயம்மா  மஞ்சிகையை துகில் கொண்டு மூடாமலும் இவனது கண்களை மறைத்து கட்டாமலும் இவ் விவாஹம் நடை பெறும் என அறிவிக்கவும்…..அதற்கு பாண்டிய பராக்கிரமன் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றதும் ….இவை அனைத்தையும் வேந்தன் எதோ காரணமாகவே செயல்படுத்துகிறான் என புரிந்து கொண்டிருந்தான்.

ஒவ்வொரு குலத்தவரும் அவர்களுக்கு என நியமிக்கபட்ட வகையில்தான் மணவினை செய்ய வேண்டும் என்பது  முந்தைய பல ஆட்சியாளர்களால் அங்கு தொடர்ந்து கடைபிடிக்கப் பட்டு வரும் சட்டம்….  அது வேந்தர் தீர்ப்பு மீறி திருமணம் நடத்த துணியும் பெருமானுக்கு  தெரியவில்லை என்பதால் அவர் இப்பகுதிக்கு புதியவராய் இருப்பார் என ஊகித்திருந்த பொன்னிவச்சான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

சில விஷயங்களில்தான் ஆதி கால நிலையை மீட்டெடுக்க விளைகின்றேனே தவிர,  விவாஹ காரியங்களில்  தற்போதைய சட்டங்கள் புழக்கத்தில் இருக்கட்டும் என குறிப்பிட்ட மன்னர்…. இம் மணவினை மாற்றத்தை…… அதும் அவரது தீர்ப்பை உடைப்பதற்காகவே செய்யும் இச் செயலை அவர் சற்றும் மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொள்ளவும்……

மன்னர் உண்மையில் இவ்விவாஹத்தை தடுக்க விரும்பவில்லை…..அதே  சமயம் தன்னை எதற்காகவோ பரிசோதித்துப் பார்க்க முயல்கிறார் என புரிந்து கொண்டிருந்தான்…

 அவை அனைத்தும் தேச பாதுகாப்பை தன் கையில் கொடுக்கும் முன் செய்யப்பட்ட தேர்வு சோதனை என்பதை இப்போது இந்த ஏனாதிபதி அறிவிப்பில் அவன் புரிந்து கொள்ள….. அனைத்தையும் குறிப்பிட்டு நன்றி நவின்றான் அவன்…

 “ஏனாதிபதி என்பது  அடுத்த செயல் வச்சனாரே…. அரசனாகிய நான் என் தேசத்தில் நடைபெறும் அனைத்து விவாஹங்களிலும் தலையிட இயலாது…… ஆனால் என் கண் முன் நடை பெறும் ஒன்று….அதுவும் ஒரு பெண்ணும் ஆடவனும் தன் உற்றம் சுற்றம் தொழில் என எல்லாவற்றையுமே தியாகம் செய்தாவது செய்து கொள்ள விளையும் ஒரு விவாஹம்…..

அதற்கு நான் இரக்கம் கொள்கிறேன் என்றால்….. உண்மையில் அவ்விவாஹம் அவர்களுக்கு ஏற்றதுதானா என சோதித்தறிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது….  அதனால்தான் அருளையை காட்டிக் கொடுக்க கேட்டேன்…… உமது சுய நலத்துக்காக அருளையை விட்டுக் கொடுக்காத நீங்கள் இருவரும்  எச் சூழலிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டீர் என்ற உறுதி அதில் ஏற்படவும் எனக்கு இவ்விவாஹத்தில் பரிபூரண சம்மதமே….

மற்றவற்றை என் உறவினர் செய்து முடித்திடுவார் என்பது எனக்கு உறுதி….

வளர்ந்து வரும் தேசத்திற்கு உம் போன்ற இள நெஞ்சங்களின் அறிவும் பலமும் அவசியம் தேவை என்பதால், அதன் பின் உங்களது திறமை சுபாவம் இவைகளை சிந்தித்து கொடுக்கபட்டதே  இந்த  பதவிகள்….”  விளக்கினான் பாண்டிய வேந்தன் தன் பக்க கண்ணோட்டத்தை….

அருகிலிருந்து இதை கேட்டிருந்த ருயம்மாவுக்கு எப்படி இருக்கிறதாம்?  அனைத்தும் நாடகமாமா? இவளையும் அதில் அங்கமாக்கி ஆட்டி வைத்தாராமா?

பனை ஓலை சருகில் பிடித்தேறிய பசுந்தீ போல  சர சரவென ஒரு கோபம் அவளுக்குள் ஏறுகிறது என்றால்….

எங்கோ ஒரு விடுதலை காற்று உதயமாகி அந்த அக்கினிக்கு மேலாக…..அசைந்தாடி சுகமாக விளையாடுகின்றது….

நாடகம் பொன்னிவச்சான் மனதை கண்டறிய மட்டும்தானாமா? இல்லை இவள் மனதை இவளையே கண்டறிய செய்யும் முயற்சியுமா இது…??

இந்நாடகம் இல்லையெனில் இவள் பாண்டியத்தை வெறுப்பதாக இன்னும் கூட எண்ணி இருப்பாளோ??

மஞ்சிகை தன் தந்தையை ஏய்த்ததைகூட உண்மையில் இவர் பெரிதாய் எதிர்த்ததாக இல்லையே..!!!!

அத்தனை அத்தனை முறை இவர் முன்னிலையில் இவள் அறிய மாறுவேடமேற்றிருக்கிறார் மானகவசர்….

ராஜ்ய காரியங்களில் அது தவறில்லை என இவளையே கூறவும் வைத்திருக்கிறார்….

இவர்களது விவாஹத்தின் துவக்கமும் நோக்கமும் ராஜ்யமேதானே…. அவ்வாறெனில் இவள் அதன் நிமித்தம் மாறுவேடமிட்டதை தான் சரியென ஒப்புவேன் என்கிறாரோ??

இவள் மன குழப்பத்தை அப்படியே அறிந்து அதற்கேற்றபடி காய் நகர்த்துகிறாராமா இந்த மானகவசர்…?

அது சாத்தியமா????

மாறுவேடமிட்டு தந்தையை ஏய்த்ததையும் இத்தனையாய் இவ்வாறு சுற்றி அலைவதையும் இலகுவாக சரி என ஏற்றுக் கொள்வாராமா?

அவ்வாறெல்லாம் நம்பிக்கையுற்று இவரிடம் தன்னைப் பற்றிய உண்மையை வெளி இட கூடுமா என்ன??

மானகவசர் இவ்வாறெல்லாம் எண்ணுகிறார் என இவள் நினைப்பதெல்லாம் இவளது காதல் மனதின் கற்பனையாய் இருந்தால்???

உண்மையில் இவள்தான் ருயம்மா தேவி என தெரிந்தால் அவர் ஏன் இவளிடம் அதை நேரடியாக கேட்டுவிடவில்லையாம்???????????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.