(Reading time: 34 - 67 minutes)

வ்வளவுதான் முயன்று சாதாரணமாக இருக்க நினைத்தாலும்…… ஸ்கேன்காக படுத்திருந்த அந்த நொடி எப்படியெல்லாமோ வருகிறது ரியாவுக்கு…..ஏன் என்று புரியாத ஒரு மறுகல்……ஏதோ உள் மனதிற்குள்ளும் உயிருக்குள்ளும் கூக்குரல் இடுவது போல் பிரமை…..

முட்டி மோதிக் கொண்டு வருகிறது மனதிற்குள்…..

ஸ்கேன்காக இவளது டர்ன் வரும் வரை காத்திருந்த அத்தனை நேரத்திலும் இவள் அருகில் இருந்து இவளுக்கு என்ன வேண்டும் என பார்த்து பார்த்து தான் செய்திருக்கிறான் விவன்…. “சும்மா தண்ணிய தண்ணிய குடிக்காத…” என  இவளுக்கு பிடிச்ச் செவ்விளனியை தேடி வாங்கி கொண்டு வந்து கொடுத்ததிலிருந்து …..

ஒரு ஸ்டேஜில்  இவள் முகம் போற போக்கை பார்த்திருந்தவன்…..நேத்து இவளுக்கு பிடிக்கும் என சொல்லியிருந்த புக்கை….. இப்போது இவளுக்கு மட்டும் கேட்கும்படி வாசித்து காண்பிப்பது வரை அனைத்திலும் இவள ரிலாக்‌ செய்ய எவ்வளவோ செய்திறுக்கிறான்…

அதுபோல அவன் கூட இல்லனா நிச்சயமா அந்த டைம்ம சமாளிச்சிறுக்கவும் முடியாது இவளால….

ஆனால் இப்ப இவளது வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் ஜெல் அப்ளை செய்ய சல்வார் டாப்ஸை சற்றாய் விலக்கவும் இவளுக்கு தெரியும் இனி விவன் இந்த பக்கம் திரும்ப கூட மாட்டான் என…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

முன்பானால் இவளுக்கு லேடி நர்ஸிடம் கூட இடுப்பில் இஞ்செக்க்ஷன் வாங்க வராது…. கூசும்….. ஆனால் இப்போது டாக்டர், ஒரு லேடி அட்டென்டர்…அதோடு இந்த விவன்…..இவர்கள் முன்னிலையில் இப்படி உடையை தளர்த்துவது என்பதெல்லாம் தாண்டி…… இப்போது அது எதையும் விட….என்ன செய்கிறதென்றே புரியாத இந்த தத்தளிப்பில்… விவன் அருகில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று மட்டும்தான் தோன்றுகிறது….

முயன்று அவன் புறமாக திரும்பிப் பார்த்தால்….இவள் தப்பிதவறி கூட கண்ணில் விழுந்துவிட கூடாது என்ற கடும் முயற்சியில் இப்பொழுதிருந்தே ஸ்கேன் மெஷின் மானிடரை மட்டுமாக பார்த்தபடி அவன் நிற்பது இவளுக்கு தெரிகிறது….

சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள்….ப்ரொசீசர் ஆரம்பித்து டாக்டர் எதோ சொல்ல தொடங்கவும் தாங்க முடியாமல் அவளே கூப்பிட்டுவிட்டாள்…. “விவன் ப்ளீஸ்…”

இரண்டே வார்த்தைகள் தான்…..இதில் அவன் என்ன புரிந்தான் என்றெல்லாம் இவளுக்கு தெரியாது….. சட்டென இவள் பக்கவாட்டில் வந்து முழங்காலிட்டு….. இவள் முகம் அருகில் அவன் முகம் வர அமர்ந்து…

 அடுத்து டாக்டர்  கறுப்பும் கறுப்பு பக்கத்தில் வர்ற ஆஷ் கலரிலுமாக டபக் டபக் என ஆடிக் கொண்டிருந்த எதையோ காண்பித்து என்னமோ எல்லாம் இவளுக்கு தெளிவா தெரியுறது போல சொன்ன  ஒன்னொன்னையும்

“ஹே இது நம்ம பேபியாம்…. இங்க பார் எல்லாம் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க…... இப்ப நம்ம பாப்பாவோட ஃபர்ஸ்ட் ஸ்னாப் எடுத்துட்டாங்க….” என ஒவ்வொன்றையும் இவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்….

 இவளுக்குள் முட்டி மோதிக் கொண்டு வந்த எதோ ஒன்று இப்போது மெல்ல மெல்ல ஏனோ அடங்கிக் கொண்டு வருகிறது…..

“பாப்பாவா…? அதெப்டி சொல்றீங்க…?” என கூட கேட்க முடிகிறது இவளால்…

“பாப்பான்னா என்ன பொறுத்தவரை  பேபி…….கேர்ல்னாலும் பாய்னாலும் பேபிதான்…..சோ ரியுக்குள்ள இருக்றது  பாப்பாதான்…. “ அவனோட பதில் இது….

மெல்ல மெல்ல இவளுக்கு ஒன்று தோன்றுகிறது…… நீ என்ன லவ் பண்ணாம போனா என்னடா…? நான் உன்ன லவ் பண்ணுவேன்….  என்ன இருந்தாலும் we are married….

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.