(Reading time: 34 - 67 minutes)

வள் சிந்தனா சக்தி இவ்வாறு நானாவித திசைகளிலும் ஆரய்ந்து கொண்டிருக்க…..

இப்போது  மன்னருக்கு உரிய வகையில் நன்றி கூறி முடித்த மஞ்சிகை….. இவள் முன் மிகவும் பணிந்து கொண்டவள்….. “என் வாழ்வையும் என் மாமனையும் இரண்டாக பிரித்துப் பார்க்க அறியாதவள் நான்…..என் உலகமே அவர்தான்…. எது எப்படியாயினும் இன்று எனக்கு அவரை தந்தது என்வரையில் நீங்கள்தான் பெருமானே……புணர்ஜென்மம் கொடுத்துள்ளீர் எனக்கு….. ஆக என் ஜீவனுக்கு சமமாக நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிறுக்கிறேன்…… இதைவிட மேலான நன்றி காணிக்கை என்னிடம் ஏதுமில்லை….. மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்….” என்றபடி இவளிடம் கொண்டு வந்து நிறுத்தியது செல்லக்கிளி என்னும் காளையை….

ஸ்தம்பித்துப் போனாள் ருயம்மா….திகைத்தும்……கூடவே உருகியும்…..

பொன்னிவச்சானுக்கு அடுத்த இடம் மஞ்சிகை மனதில் இந்த வாயில்லா ஜீவனுக்குத்தான் என இவளுக்கு நன்றாகவே புரிந்திறுக்கிறது…. அப்படி இருக்க இதை ஏற்கவோ மஞ்சிகையையும் இந்த ஐந்தறிவு ஜீவனையும் பிரிக்கவோ ருயம்மா தேவிக்கு துளியும் மனதில்லை…..அதே சமயம் அத்தனை உணர்ந்து பரிசென தருவதை என்ன கூறி மறுக்க எனவும் தெரியவில்லை….

பரிசை மறுப்பதென்பது அப் பரிசு கொடுப்பவரை அவமதிப்பதாக பொருள் பட செய்யுமே….

பாண்டியத்தில் இச் சூழலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்…..? மானகவசரை ஒரு கணம் ஆலோசனைக்காக நோக்கினாள்…. அவர் நடக்கின்ற காட்சியை ரசனையாய் கண்டு நிற்பதாக தோன்றியதே தவிர இவளுக்கான ஆலோசனை எதுவும் அவள் விழியில் காணப்படுவதாகவே இல்லை…

இதற்குள் இவ்வாறு தாமதித்த சில கணங்களுக்குள் மஞ்சிகை முகம் கூம்பிக் கொண்டு செல்ல…. அவ் வேதனை பாங்கை கண்ட காகதீய பாவை….புன்சிரிப்புடன் அப்பரிசை ஏற்கலானாள்….

இப்பொழுது கண்களில் நீர் தளும்ப…. வதனம் இன்பத்தில் விகசிக்க…. மஞ்சிகை  செல்லக்கிளியின் திமிலை கட்டிக் கொண்டபடி அதன் காதில் எதையோ சற்று பேசியவள்….

ருயம்மாவை அதன் திமிலை ஆதூரமாக தடவ சொல்ல….. இதோ இப்போது ருயம்மாவை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது பரம சாதுவாய் அந்த செல்லக்கிளி…

ஆம் விடைபெற்று கிளம்பிய பராக்கிரமனுடன் ருயம்மா தேவி…. அவர்களுக்கு பின்னாக இந்த செல்லக்கிளி….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

த்தனையோ வகை உணர்வு கலவையில் கட்டுண்டு கிடந்தாள் காகதீய இளவரசி…. செவியில் செல்லக்கிளி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த  வெண்கல மணியின் டங்க் டங்க் ஓசை விழுந்து வர…..மௌனமாய் நடை பயின்று கொண்டிருந்தாள் அவள்….

 அருகில் அத்தனையும் கவனித்த வண்ணம் வந்து கொண்டிருந்த பராக்கிரமனின் பார்வையோ அவ்வப்பொழுது அவள் வதனம் புறம் பாய்வதும் பின் பாதையில் பதிவதுமாக பிரயாணப்படுகிறது…

வெகு நேரமாய் அவள் தன் மௌனக் கூட்டிற்குள் இருந்து வெளிவராததை கண்டு “ அப்படி என்ன பலத்த யோசனை ருயமரே?” என வாய்விட்டு கேட்கவும் செய்கிறான் அவன்.

 அது வரையுமே சாந்த சாயலுடன்  தென்பட்ட இளவரசியிடமிருந்து “ம்… விவாஹத்திற்கு முன் மணமகனை சோதிக்கும் வழக்கம் போலும்  பாண்டிய வேந்தருக்கு……இது தெரியாமல் எந்த சோதனையும் இல்லாமல் எங்கள் இளவரசிக்கு மணம் நிச்சயித்துவிட்டோமே என வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன்…..” என வெட்டலுக்கும் குத்தலுக்கும் இடையில் நையாண்டியாய் வந்து விழுகிறது விடை ஒன்று….

பொன்னிவச்சார் மஞ்சிகை விஷயத்தில் மானகவசர்  ஆடிய நாடகத்திற்கான இவள் பக்க எதிரொலி இது….

அவள் பேசிய பாவத்தை திரும்பிப் பார்த்து  சற்றே சற்றாய் நகைத்தான் பாண்டிய வேந்தன்…..

“வருத்தப்படுவானேன்…. இனி சோதித்துவிட வேண்டியதுதானே…..” என எடுத்தும் கொடுத்தான்.

“ஏது உங்கள் தேசத்தில் வைத்துக் கொண்டு இதை சொல்ல இலகுவாய்த்தான் இருக்கும்…” குறைபட்டுக் கொண்ட ருயம்மா தேவி…..”உங்களது தேசத்தில் தனியொரு ஜீவனாய் நிற்கும் நான்  என்ன சோதித்துவிட முடியுமாம்….?” எனவும் அங்கலாய்த்தாள்…

என்னதான் அவள் அப்பொருளில்  கூறவில்லை எனப் புரிந்தாலும் அவளது - தனியொரு ஜீவனாய் நிற்கும் நான்-  என்ற பதங்கள் அவனை பதம் பார்க்க……

ஆம் வேற்று தேசத்திலிருந்து இத்தனையாய் பயணம் செய்து….இங்கும் சுற்றி சூழ அனைத்திலும் அந்நியரே எனும் நிலையில் எந்த ஒரு மனு ஜீவனுக்கும் தனிமை தோன்றக் கூடும்தானே….

அவசர கதியில் அன்னிச்சையாய் தன் விருந்தினரின் பக்கம் திரும்பிய  மானகவசன் பார்வை அவர்களை பின் தொடரும் செல்லக்கிளியின் மீது விழுகிறது..….

அடுத்த ஸ்வாரஸ்யத்தை துவக்க ஒரு திட்டம் உதயமாகிட்டு அவனுக்கு….. அஃதோடு அந்த தனியொரு ஜீவனாய் நான் என்ற நினைவை துடைத்தெறியவும் தான்…..

ஆக அதன் துவக்க படலமாக “மணமகனை பரிசோதிக்க எங்கள்  பக்கம் ஒரு தொன்று தொட்ட  வழமை இருக்கிறது ருயமரே….. ஆனால் அதில் நான்  ஜெயம் எடுத்தால்…” என விஷமமாக சம்பாஷணையை நீட்டினான் அவன்….

“ஜெயம் எடுத்தால்…?” பராக்கிரமர் எதை சொல்ல வருகின்றார் என யூகிக்க முடியாமல்……   அவர் பதத்தையே ருயம்மா தேவி தற்போது விகற்பமின்றி வினாவாக்க……

“பெரிதாக ஒன்றுமில்லை….. என்ன எனது பரிச பொருளை நீர் ருயம்மா தேவி சார்பாக ஏற்க வேண்டி இருக்கும்….”  நிபந்தனையை நிர்பந்திக்காத தோரணையில் வெளியிட்டான் மானகவசன். “பாண்டிய பாரம்பரியம் அது….” காரணமும் தெரிவித்தான்.

பொருள் விளங்காமல் கேள்வியாய் நோக்கினாள் காகதீய இளவரசி….  “பரிசமிடல் பாண்டிய தேசத்தில் விளையாட்டா?” வினாவும் தொடுத்தாள்….

“பரிசமிடல் இங்கு விளையாட்டில்லை ருயமரே….. ஆனால் மணப்பெண்ணிற்காய் மணவாளனை சோதனைகுட்படுத்துவது இங்கு வீர விளையாட்டு….”

வீர விளையாட்டு!!! இந்த பதமே அவளை வியப்பில் ஆழ்த்த…..

வாள் வீச்சுகளை ஆசிப்பவள் அல்லவா….. இந்த வீரவிளையாட்டை ஆடித்தான் பார்ப்போமே என்ற ஒரு வாஞ்சையை அது உண்டாக்க…..

சம்மதமாய் தலையசைத்து வைத்தாள் ருயம்மாதேவி…..

புலி சிக்கிற்று....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.