(Reading time: 34 - 67 minutes)

மெல்ல மெல்ல விழித்துக் கொண்டாள் ரியா…. தூங்குறதுக்கே நேத்து செம்ம சந்தோஷமா  போன ரியாவுக்கு இப்படி ஒரு தேன்மிட்டாய் கனவு வேறு….. கண்ட கனவை சற்று நேரம் மீண்டும் மீண்டுமாய் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவள்….. ஒரு ஜாலி மூடிலேயே அந்த நாளை துவக்கினாள்…

குளிச்சு ஃப்ரெஷ்ஷா இவள் தன் ரூமை விட்டு வெளிய வந்தா……தினமுமே இவள் எழும்புறதுக்கு முன்னமே எழுந்துடுற விவன் இன்னைக்கு அவனோட ரூம் பெட்டில் இன்னும் படுத்திறுப்பது கண்ணில் படுகிறது….

‘ஓ தூங்குறப்ப ரூமை திறந்து போட்டுதான் தூங்குவாராமா சார்?’ என நினைத்தபடி இவள்  அவன் ரூமை எட்டிப் பார்க்க….

எதோ ஒரு குறுகுறுப்பு….. எது உந்தி தள்ளியது என தெரியவில்லை……  மெல்ல அந்த ரூமிற்குள் நுழைந்தாள்….

அவன் அத்தனை பெரிய பெட்டில் ஒரு விளிம்பில் படுத்திறுக்கிறான்….விளிம்பில் என்றால்…..லிட்ரலி அவனோட வலதுகாலை தரையில் ஊன்றி இருக்கிறான்…. இடது காலும் மொத்த உடம்பும்தான் பெட்ல இருக்குது…..

‘டேய் பெட்ல கூட ஓடிட்டே தூங்குவியா….அதான் சின்ன பாப்பா போல பெட்டைவிட்டு விழுந்துட்டியா என்ன…?’ இவள் இன்னுமாய் அருகில் செல்ல அப்போதுதான் அவள் கண்ணில் படுகிறது அது….. அவனோட இடது கையில் எதோ பேப்பர்ஸை பிடித்திறுக்கிறான்….. ஆஃபீஸ் பேப்பர்ஸ்…

காற்றில் பட படத்துக் கொண்டிருக்கிறது அவை….

கூடவே அவன் நேத்து நைட் இந்த ட்ரெஸ்ல தூங்கப் போகலை என்ற நியாபகமும் வர….. வழக்கம் போல காலையிலேயே எழுந்திருச்சு எதோ ஆஃபீஸ் வேலை பார்க்க ட்ரைப் பண்ணியிருக்கான்…. தூக்கம் பத்தாம தூங்கிட்டான் போல…..  என விஷயம் புரிகிறது இவளுக்கு….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அப்படின்னா இவள சந்தோஷமா வைக்கிறதுக்காக டே டைம்ல இவ கூட வெளிய சுத்திட்டு….. அடுத்து டைம் பத்தாம வீட்ல தூக்கத்தை கெடுத்து வேலை பார்க்கானா? என இவள் யோசிக்கும் போதே….

“அண்ணா நைட் வொர்க் பண்றதுல மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல் வச்சுகோங்க அண்ணி…..” என முன்பு கண்மணி சொன்னதும் சரியாய் இந்த நேரத்தில் நியாபகம் வர…..

அப்போ நைட் இவ படுக்க போனதுல இருந்து இங்க உட்கார்ந்து வொர்க் பண்ணிட்டு அவன மீறி தூங்குறானோ என தோன்ற.....ரொம்பவுமே ஒரு மாதிரி ஆகிவிட்டது இவளுக்கு….. 

கவனமாய் குனிந்து அவன் கையிலிருந்து ஆடிக் கொண்டிருந்த அந்த காகிதங்களை எடுத்து அருகிலிருந்த டேபிள் மேல் வைத்து, அவை பறக்காத வண்ணம் ஒரு குண்டு புத்தகத்தை அதன் மீது தூக்கி வைத்தாள்…..

அடுத்து அவன் தூக்கம் கலையாமல் கேர்ஃபுல்லா அவன் காலை மட்டும் சரியாய் ஏற்ற பொஷிஷன்ல தூக்கி வைக்கலாம் என வருகிறது ஒரு எண்ணம்…..இப்ப மாதிரி தூங்குறது ரொம்ப அன்கம்பர்ட்டான விஷயம்…..

அந்த நினைப்பில் இவள் அவன் காலைப் பார்த்து குனிந்தும் விட்டாள்….. கட்டிலிலிருந்த அவன் கை இப்போது குனிந்த இவளுக்கு மிக அருகில் தெரிய…. முன்பு இவள் அவன் கண்ணிலிருந்த தூசியை ஊத நெருங்கிய சமயம் அவன் அந்த கைகளை மூடிக் கொண்டது இப்போது மனகண்ணில் ஃப்ளாஷிடுகிறது….

சட்டென அவன் காலை தொடாமலே எழுந்துவிட்டாள்…. தப்பி தவறி விழிச்சுட்டானா….. இவ தொடுறத சாதாரணமா எடுப்பானா?? அதுவும் அவன் தூங்குற ரூம்க்கு தேடி வந்து……

தப்பா நினைக்கிறது அடுத்த விஷயம்…. இப்ப விழிச்சுப் பார்த்து “ஹேய் ரியு….இங்க என்ன செய்துட்டு இருக்க….” என அவன் கேஷுவலாக கேட்டால் கூட இவளால் எதாவது பதில் சொல்ல முடியுமா? அவன் ரூம்க்கு சும்மா போய் சுத்திட்டு வர்ற அளவு இவளுக்கு இங்கு உறவிருக்கிறதாமா?

மனதிற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல்…..அவனை அப்படியேவிட்டு வர மனமும் இல்லாமல் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே  அறையை விட்டு அரை குறை மனமாக வெளியே வந்தாள்…

ஆனாலும் அடுத்து கிட்சனில் இவள் காட்டிய கைவரிசையிலும்…. Lip theory படியும் அதான் Live in the present தியரி படியும்….. விவன் திரும்ப விழிச்சு வர்றதுக்குள் இயல்புக்கு வந்துவிட்டாள் ரியா…

    இதில் அன்னைக்கு அவளுக்கு கைனகாலஜிஸ்ட் அப்பாய்ண்ட்மென்ட் வேறு…..  முதல் ஸ்கேன் எடுக்கனுமாம்…..ஏனோ என்னவென்று சொல்ல முடியாதவண்ணம் மனதிற்கு பிடிக்கவே இல்லை இந்த விசிட்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.