(Reading time: 12 - 23 minutes)

னைவருமே சத்தம் வரும் திசையை நோக்கி செல்ல, அச்சத்தம் அவர்களை வினிதாவின் அறைவாசலில் நிறுத்தியது. முதலில் அவர்கள் பார்த்த அந்த பொம்மை இப்போது வினிதாவின் அருகே படுத்திருக்க, அவளின் கை அதை மிகவும் இறுக்கமாக பிடித்து இருந்தது.

ரூபனின் அப்பா மட்டும் வினிதாவின் ரூமினுள் நுழைய மற்றவர்கள் வாசலிலே நின்றனர்.

அவரின் கண்கள் அந்த அறையே அலசின. அவர் எதையோ தேடிக் கொண்டு இருக்க, அவரை ஏமாற்றாமல் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது.அவர் வினிதாவின் கால்களுக்கு நேரே இருக்கும் சுவற்றை நோக்கி சென்று நின்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“இது உன் இடமில்லை, நீ இங்கு இருக்கவும் முடியாது!!! உன் விதி முடிந்து விட்டது அதை ஏற்றுக்கொண்டு இங்கு இருந்து போய்விடு!!” ரூபனின் அப்பா கடுமையாக சொல்ல

“முடியாது...! என் வேலையை முடித்த பின்னரே போவேன்… எனக்கு நீ கட்டளை இட வேண்டாம்!!!”மிக மெல்லிய குரலில் சொன்னாலும் அதில் உறுதியும் வெறியும் இருந்தது.

இவை அனைத்தும் அறைக்கு வெளியே இருந்தவர்களின் காதில் மிக தெளிவாக விழுந்தது. முதலில் ரூபனின் அப்பா ஏன் அந்த சுவற்றை பார்த்து பேசுகிறார் என தெரியாமல் இருந்தவர்கள், அதன் பின்னர் கேட்ட ஓர் பெண்ணின் குரலில் அதிர்ச்சி அடைந்தனர்.

அடுத்து அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை கேட்ட அவர்கள் காத்திருக்க, அவரோ அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து ஹாலில் சென்று அமர்ந்தார்.

அவர் அந்த அறையை விட்டு வெளியே வந்த பின்னரும் மற்றவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்தனர். ரூபனின் அப்பா மட்டும் அடுத்து செய்ய வேண்டியதை உடனடியாக திட்டமிட்டார்.

“மகேன் நீ வீட்டிற்கு சென்று எனக்கு தேவையான பொருட்களை எல்லாம் கொண்டு வா!!” அவர் கட்டளையாக சொன்னார்.

“சரிப்பா..” என்றான் அங்கு உள்ள சூழ்நிலையை புரிந்தவனாய். இவர்கள் பேசுவதை கேட்ட ரூபன், “உங்களை என்ன சொல்லி நான் இங்கு அழைத்து வந்தேன்?” என்று கோபமாக சொன்னான்.

“நான் இங்கு உள்ள சூழ்நிலையை பொருத்து உள்ளது சொன்னதாக ஞாபகம்!”. ரூபன் ஏதோ சொல்ல வர அதை கண்டுக்கொள்ளாமல் வினிதாவின் அண்ணனை பார்த்து “என்னால் முடிந்த சின்ன உதவி இது, உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே நான் இதை செய்வேன்..” சொல்லி அவர்களின் முகத்தை பார்க்க,

“எங்களுக்கு பழைய வினிதா வேண்டும், ஆனா உங்களால் என்ன செய்து விட முடியும்?” என்று வினிதாவின் அண்ணனின் சந்தேக கேள்விக்கு இப்போது அவரிடம் விளக்கம் சொல்ல நேரமில்லையே!

“இப்போ நமக்கு இருக்கும் நேரம் மிகவும் குறைவு! என்னால் உங்களுக்கு விளக்கம் குடுக்கும் அளவிற்கு நேரமில்லை. ஆகையால் பதிலை மட்டும் சொல்லுங்க… வினிதாவின் உயிர் முக்கியம்..” அவர் வினிதாவின் அண்ணனை அவசர படுத்தினார்.

அவரின் அவசர கேள்விக்கு அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவது என தெரியவில்லை. வினிதாவின் அண்ணன் தன் மனைவியை பார்க்க, அவளோ வினிதாவின் நிலையை உணர்ந்து கொண்டதுபோல கணவனை பார்த்து “சரி”என்று மட்டுமே சொல்ல, வினிதாவின் அண்ணனுக்கு குழப்பமே மிஞ்சியது…

சிறுவயதில் இருந்து அவனின் பெற்றோர்கள் ஆவி பேய் எல்லாம் இல்லை!, இவையெல்லாம் வெறும் கட்டு கதைகள் என்|று சொல்லியே வளர்த்தனர். இன்று வரை அது அவர்களின் மனதில் ஆழமாய் பதிந்து இருக்கிறது, இங்கு நடப்பதையும் நடந்ததையும், அவர்களின் வீட்டிலும் வினிதாவை போல ஒரு பெண் வந்து இருக்க, புகைப்படத்தில் வினிதா இல்லாமலும் இருப்பதை பார்க்கையில் குழப்பத்துடனே சரி என தலை அசைத்தாலும், கூடவே மனதில் இது சரியா என்ற கேள்வியும் எழுந்தது!

மனதில் இன்னொரு முலையில் “இல்லை, இங்கு இவர்கள் எல்லாம் சரியில்லை!! வினிதாவை விட்டுக்கு அழைத்து சென்று விடலாம்” என்ற யோசனையும் வந்தது. ஆனால் அதை எப்படி செயல் படுத்துவது தென யோசித்தார்.

அவரை மேலும் சிந்திக்கவிடாமல் மகேன் அவரையும் உடன் அழைத்து சென்றான். போகும் வழியில் அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடலாம் என்று நினைத்தான். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, “பார்த்து ரொம்ப கவனமாக காரை ஓட்டி செல்! அது உங்களை இங்கு வர விடாமல் தடுக்கும் அப்படி இல்லை என்றால் இங்கே வர தாமத படுத்தும்” என்று ரூபனின் அப்பா அவர்களை எச்சரித்து அனுப்பினார்.

ங்கு இருந்தவர்கள் ரூபனின் அப்பாவின் தேவைக்கு ஏற்ப அந்த வீட்டில் உள்ள பொருட்களை நகற்றி வைத்தனர். சில நிலை கண்ணாடிகளை அவைகள் அந்த வீட்டில் பல இடங்களின் வைத்தனர். ஒரு பெரிய நிலைகண்ணாடியை மட்டும் அமுதாவின் வீட்டிலிருந்து எடுத்து வந்தனர்.

நேரம் இரவை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்க, மண்டபத்தில் பொருட்களை எடுக்க சென்றவர்கள் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை. அவர்கள் மண்டபத்திலிருந்து கிளம்பும்போது ஃபோனில் அழைத்து தகவல் தெரிவித்தனர்.. அதன்பின்னர் அவர்களிடம் இருந்து எந்த தகவலுமில்லை.

ரூபனின் வீட்டிற்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் 30 நிமிட பயணதூரமே... அப்படியிருக்கையில் இரண்டு மணிநேரம் கடந்த பின்னரும் அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. எங்கே சென்றார்கள் அவர்கள்??

தொடரும் நிழல்

Go to episode # 08

Go to episode # 10

{kunena_discuss:753}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.