(Reading time: 14 - 28 minutes)

வர் அங்கே விமான பணிப்பெண்னிடம் ஏதோ பேசுவது தெரிகிறது. அவள் அவரை அழைத்து வருகிறார்கள் காக்பிட்டினுள்ளே!!!

அவரை இவன் கேப்டனிடம் அறிமுக படுத்தி வைக்க, அவர் அந்த காக்பிட்டின் செயல் முறைகளை அப்பாவுக்கு விளக்கிகொண்டிருக்க அப்பாவின் பெருமை பொங்கும் பார்வை அவனை அவ்வபோது தொட்டு தொட்டு விலகிக்கொண்டிருந்தது. அவன் காதில் ஹெட்போனை அணிந்துக்கொள்ள சட்டென ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார் அவனை.  

காக்பிட்டை விட்டு வெளியே செல்ல மனமில்லாதது போலவே அவனை பார்த்தபடியே நின்றிருந்தார் அப்பா. தயங்கி தயங்கிதான் அவரை வெளியே போக சொன்னான் அவன். புன்னகையுடன் அவன் கேசம் தொட்டு கலைத்துவிட்டு வெளியேறினார் அவர்.

அதுவும் இது போன்ற மாலை நேரம்தான். பிரேக்குகள் விலக்கப்பட மாலை வெயிலை ரசித்தபடியே காற்றை கிழித்துக்கொண்டு விருட்டென மேலே ஏறி.. அப்பாவை அழைத்துக்கொண்டு அப்படியே பறந்து பறந்து.............

'ரெடி கேப்டன்???' பக்கத்தில் இருந்த துணை விமானியின் குரல் அவனை பழைய நினைவுகளிலிருந்து தரை இறக்கியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'ஆங்... யா.. எஸ் ஐம் ரெடி..' என்றவனின் கண்கள் சிறு குழந்தையாய் அப்பாவை தேடின. கண்ணில் தென்படவில்லையே அப்பா!!! காக்பிட்டில் இல்லையே அப்பா!!!

தறிகெட்டு துடிக்க ஆரம்பித்த மனதை இழுத்து பிடித்து ஒரு நிலையில் நிறுத்திவிட்டு,

'ஆர் வீ க்ளியர் டு ஸ்டார்ட் ..' கேட்டான் கீழே இருப்பவர்களிடம்.

'க்ளியர் டு ஸ்டார்ட் கேப்டன்..' ஆணை கிடைத்தவுடன் என்ஜின்களின் சத்தம் மெல்ல மெல்ல கூட துவங்க..

'திஸ் இஸ் யுவர் கேப்டன் விவேக் ஸ்ரீநிவாசன் அலாங் வித் அவர் கோ பைலட் வைபவ் ஸ்ரீவத்சன்.... அறிவித்துக்கொண்டிருந்தான் விவேக்.

அவர் பிளைட் இஸ் ரெடி ஃபார் டேக் ஆஃப் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் ப்ளீஸ் ஃபாஸ்டென் யுவர் சீட் பெல்ட்ஸ்.!!!

'நான் அங்கே சீட்லே உட்கார்ந்து இருந்தேன்டா. நீ அன்னௌன்ஸ் பண்ணியே திஸ் இஸ் விவேக் ஸ்ரீநிவாசன் அப்படின்னு அப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா??? இவன் என் பையன்... இவன் என் பையன்னு எல்லாருக்கும் கேட்கிற மாதிரி கத்தணும் போலே இருந்தது. என் பக்கத்திலே இருக்கிறவங்களுக்கு எல்லாம் சொன்னேன்....' அந்த பயணம் முடிந்த பிறகு இவன் அருகில் அமர்ந்து மறுபடி மறுபடி சிலாகித்துக்கொண்டாரே அப்பா!!!

மறுபடி அந்த புள்ளியை தொட ஓடிய எண்ணங்களை கடிவாளம் கொண்டு கட்டிவிட்டு ஓடுதளத்தில் அதி வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் விமானத்தை. அந்த வேகத்தில் இவன் உடலும் தடதடத்துக்கொண்டிருந்தது.

'வி ஒன்... ரோடேட்...' காக்பிட்டில் துணை விமானியின் குரல் ஒலிக்க சரேலென காற்றில் ஏறியது விமானம்.

மாலை சூரியனின் கதிர்கள்  கண்ணாடிகளின் வழியே ஊடுருவி அவன் அனுமதி இல்லாமலே அவனை முத்தமிட உனக்கு இதற்கெல்லாம் அனுமதி இல்லை என்பதை போலவே குளிர் கண்ணாடியை அணிந்துக்கொண்டான் விவேக்..

நீல வானத்தை நோக்கி அவன் செல்ல செல்ல உள்ளமும் மெதுமெதுவாய் அவன் கட்டுக்குள் வந்து விட்டிருந்தது. இதழ்களில் புன்னகையின் நாட்டியம் துவங்கி இருந்தது.

தே நேரத்தில்

அங்கே பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தான் அவன். சுதர்ஷன். அவனருகில் அவனது  தந்தை!!! சிலையாகிப்போனவன் போல் அமர்ந்திருந்தான் அவன்.

'திஸ் இஸ் யுவர் கேப்டன் விவேக் ஸ்ரீநிவாசன்' அந்த அறிவிப்பே அவனை சுழற்றிப்போட்டிருந்தது.

விவேக் ஸ்ரீநிவாசனா??? அந்த விவேக் ஸ்ரீநிவாசனா அவன்??? அவன் தான் இந்த விமானத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறானா??? அதிர்ந்து போய் படபடத்துக்கொண்டிருந்தது இதயம்.

இவன் விவேக்குக்கு செய்த அந்த மிகப்பெரிய தவறு, தவறு இல்லை அது பாபம், அந்த பாபம்  கண் முன்னே வந்து வந்து போய்க்கொண்டிருந்து!!!!

அந்த நிலையில் ஏன் அப்படி செய்தேன்??? எப்படி அப்படி செய்தேன் நான்??? விமானம் புறப்பட்டு கிட்டத்தட்ட இருபது நிமடங்கள் கடந்திருக்க மனசாட்சி அவனை கூறு போட்டுக்கொண்டிருக்க அப்படியே அமர்ந்திருந்தான் சுதர்ஷன்.

அப்போது நிகழ்ந்தது அது!!!!

'த... த...ர்...ஷன்... நெஞ்....சு ரொம்...ப வலிக்கு....துடா,,'  நெஞ்சை பிடித்தபடியே நடுங்கும் குரலில் சொன்னார் அவன் அப்பா!!!

தொடரும்......

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.