(Reading time: 14 - 28 minutes)

'னக்கு என் பொண்ணுகிட்டே பேசணும். நான் வந்து... நம்பர்... வந்து நம்பர்... தப்பா போட்டுட்டேன் போலிருக்கு..' தடுமாறும் குரலில் அவர் சொல்ல..

'ராங் நம்பர்' என சட்டென சொல்லி அழைப்பை துண்டிக்க மனம் ஏனோ வரவில்லை விவேக்குக்கு .அவர் குரலை கேட்டதிலேயே அவர் வயதானவர் என்று புரிந்தது அவனுக்கு.

'அப்படியா??? பரவாயில்லை' என்றான் மெதுவாக. 'நம்பர் சரியா பார்த்து போடுங்க..'

'உங்க பேர் விவேக் ஸ்ரீநிவாசனா??? எங்கேயோ கேள்விப்பட்ட பேர் மாதிரி இருக்கு...' அவருக்கும் அழைப்பை துண்டிக்க மனமில்லை போலும்.

'ஹா... ஹா... ஹா....' ஒரு உற்சாக சிரிப்பு அவனிடத்தில். இத்தனை நேரம் இருந்த இறுக்கம் எப்படி காணாமல் போனது என புரியவில்லை அவனுக்கு.

'உலகத்திலே நான் மட்டும்தான் விவேக் ஸ்ரீநிவாசனா??? நிறைய பேர் இருப்பாங்க இல்லையா??? எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பீங்க..' என்றான் விவேக்.

'ஆமாம் இருக்கும்....' என்றார் அவர் சின்ன சிரிப்புடன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'அவருக்கு தெரியவில்லை அவர் கேள்விப்பட்டது இவனை பற்றிதான் என!!! அவனுக்கும் தெரியவில்லை இவர் யாரென!!! தெரிந்திருந்தால் அவரை அடுத்த நிமிடம் அவரை தேடி ஓடி இருக்க மாட்டானா அவன்!!!! அவன் கண்ணீர் எல்லாம் ஒட்டு மொத்தமாக காணாமல் போயிருக்காதா???

'நான் என் பொண்ணுக்குதான் போன் போட்டேன். அவ ரொம்ப பிசி. அவளை நான் தொந்தரவு எல்லாம் பண்றது இல்லை எப்பவும்.. இப்போ கொஞ்சம் அவசரம் அதான்.' அவனிடம் இதை சொல்லிக்கொள்ள வேண்டுமென தோன்றியது போலும் அவருக்கு.

'அப்படியா???''

'சரி.. உங்ககிட்டே பேசினது ரொம்ப சந்தோஷம்..' என்றார் அவர்.

'எனக்கும் ரொம்ப சந்தோஷம்...' என்றான் அவன் பொய் இல்லாத தொனியில்.

'நான் வெச்சிடறேன். பத்திரமா இருந்துக்கோபா...' துண்டித்தார் அழைப்பை. கடைசியில் அவர் வார்த்தைகளில் ஒருமை குடிகொண்டதில் சின்னதாய் ஒரு நிறைவு அவனுக்குள்ளே.

'ஏன் இந்த சந்தோஷம், நிறைவு எல்லாம்???" புரியவில்லை அவனுக்கு.

'தாமோதரன்!!!' தனது கைப்பேசியில் அந்த எண்ணை பதித்துக்கொண்டான் அவன் காரணமே இல்லாமல். பின் தன்னிச்சையாக கையை திருப்பி நேரம் பார்த்தவன்...

'மை..காட் இட்ஸ் டைம்..' என்றபடி சாப்பாட்டை அள்ளி விழுங்கிவிட்டு அந்த பத்திரிக்கையை அள்ளிக்கொண்டு ஓடினான் விவேக். அங்கே மேஜையின் மீது அவன் மறந்துவிட்டு சென்ற ரோஜாப்பூக்கள் அவன் சென்ற திசையையே பார்த்திருந்தன இனி தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதைப்போல்!!!

காக்பிட்டுக்கு சென்று சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டு அமர்ந்தான் விவேக். மும்பையிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி  கிளம்புவதற்கு தயாராக விமானம்!!!

முன்பொரு முறை இதே பாதையில் அவன் பறந்த போதுதான்... புன்னகைத்துக்கொண்டான் அந்த நினைவில்...

அந்த பயணம் துவங்குவதற்கு முன் அப்படி ஒரு படபடப்பு, பரபரப்பு அவனிடத்தில். அவன் முதல் முறையாக விமானத்தை தனியாக ஓட்ட ஆரம்பித்த தினத்தில் கூட இத்தனை தவிப்பு இருக்கவில்லை அவனிடத்தில். இது அதி முக்கியமான பயணம் ஆயிற்றே!!!

ஏதோ ஒரு வேலையாக சென்னையிலிருந்து மும்பை வந்திருந்த அவனது தந்தை அவனுடைய அந்த விமானத்தில்தான் விசாகபட்டினம் செல்வதாக இருந்தது.

விமானத்தை சுற்றி வந்து செய்ய வேண்டிய சோதனைகளை முடித்துவிட்டு, பயணத்திட்டத்தை வகுத்துக்கொண்டு, காக்பிட்டில் ஏறி அமர்ந்துவிட்டான் அவன். பயணிகள் எல்லாரும் விமானத்தில் ஏறிவிட்டிருந்தனர்

தந்தை வந்தாரா??? இல்லையா??? தெரியவில்லை அவனுக்கு. ஒரு வேளை வந்து ஏறி அமர்ந்திருப்பரோ??? சிறு வயதில் அவர் வேலை முடிந்து திரும்பி வர காத்திருந்ததை போல் காக்பிட்டின் ஜன்னல் வழியே எட்டி எட்டிப்பார்துக்கொண்டு அமர்ந்திருந்தான் விவேக்..

அப்போது இவன் கேப்டன் பதவியை தொட்டிருக்கவில்லை. துணை விமானி   இருக்கையில்தான் அமர்ந்திருந்தான் அவன். ஆசை அவனுக்கு!!! தனது தந்தை வரும் விமானத்தை அவனே செலுத்த வேண்டுமென ஒரு ஆசை!!

சிறு வயதில் அவர் தோள்களில் ஏறி செய்த சவாரி உட்பட எத்தனை முறை அவர் என்னை சுமந்து சென்றிருப்பார்??? இப்போது நான் அவரை அழைத்து செல்ல வேண்டாமா???

இவனும் அந்த கேப்டனும் இதுவரை  மாற்றி மாற்றியே விமானத்தை செலுத்திக்கொண்டிருக்க இப்போது செலுத்துவது அவன் முறையாகவே இருந்த போதிலும் மெதுவாக அவரிடம் கேட்டான் அவன் ஆங்கிலத்தில்  'என் தந்தை வருகிறார் நான் இந்த முறை விமானத்தை செலுத்துகிறேன் என..'

'அஃப் கோர்ஸ்.. யூ ஹேவ் டு...அதுவும் உங்க அப்பா வரும் போது...ப்ளீஸ் .கோ அஹெட்..' புன்னகையுடன் சொன்னார் அவர்.

'வந்தாரா இல்லையா அப்பா??? எத்தனை நேரம் காத்திருப்பதாம் இவன்.??? ஒரு வேளை வரவில்லையோ யோசித்தபடியே இவன் கேப்டன் இருக்கையில் சென்று அமர கண்ணில் பட்டார் அப்பா. ஏறிக்கொண்டிருந்தார் விமானத்தில் .படபடத்தது இவன் இதயம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.