(Reading time: 10 - 19 minutes)

ப்பெண்ணை நோக்கி திரும்பியவன்,

"ஓ.கே.நாங்க ஆபிஸ்ல போய் பார்த்துக்கிறோம்!அவங்கக்கிட்ட அர்ஜூன் குமார் சார் அனுப்பி வைத்தார்னு சொல்லிடுங்க!"

"ம்..."-இருவரும் வந்த வழியே திரும்பினர்.

அந்நங்கை விரைந்து பதறியப்படி உள்ளே சென்றாள்.அங்கு அமைந்திருந்த விசாலமான பூஜை அறைக்குள் நுழைந்தாள்.அவ்வறைக்குள் நுழைந்ததும் முதலில் கண்களுக்கு புலப்பட்டது ஏறத்தாழ ஏழடியில் செதுக்கப்பட்டிருந்த ஈசனின் தவக்கோல சிற்பம்!!அமைதியான தவத்தில் அவர் அனைத்தையும் மறந்து அமர்ந்திருக்க,கீழே இரண்டிலிருந்து மூன்றடிக்குள் கருங்கல்லால் செதுக்கப்பட்டிருந்தது சிவலிங்கம்!!காண்போரின் மனதினை கட்டுப்படுத்தும் தெய்வீகம் அவ்வறையை பரிப்பூரணமாக்கியது!!!

அச்சிவனின் அருகே அமர்ந்தப்படி,கரம்கூப்பி,விழி மூடி இருந்தாள் அவள்!!மாயா!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

பெருமூச்சு ஒன்றை விடுத்தாள் நோட்டமிட வந்திருந்தவள்.அவ்வறையை தியாகித்து வெளி வந்தவளின் கவனத்தை ஈர்த்தது,

"யார் வந்தா?"என்ற மற்றொரு பணியாளர் சங்கரனின் குரல்!!

"மாயாம்மாவை தேடி ஆபிஸ் விஷயமா வந்தாங்க!"

"பசங்க புதுசு போல!"-என்றவர் புன்னகைத்தார்.

"அவங்க கோபப்படலையே?"

"இல்லை..மாயாம்மா தியானத்தை கலைக்கலை!"

"நல்லக்காலம்!இல்லைன்னா,பிரளயம் வெடித்திருக்கும்!சரி...நீ போய் வேலையைப் பாரு!"

"ம்..."-என்றவள் மீண்டும் தனது வேலையை தொடர்ந்தாள்.

ங்கே பூஜை அறையில் அமர்ந்திருவளின் கவனம் சிறிதும் திசை மாறவில்லை!நெறி பிழறவில்லை!!மனம் திருப்தி அடைந்த வேளையில் மெல்ல மூடியிருந்த அவள் நேத்திரம் திறந்தது.

அவ்விழிகள்!!அதில் நிறைந்திருந்தது எல்லாம்,கோபம்!ஆணவம்!அகங்காரம்!வைராக்கியம் மட்டுமே!!இதழ்கள் புன்னகை பூக்கவில்லை.அகம் அதில் எங்கும் மகிழ்ச்சி இல்லை.வதனத்தில் ஒரு வித கம்பீரம்!!காண்போர் எவரையும் மிரள வைக்கும் கம்பீரம்!!எவருக்கும் ஆட்படாத தன்மை!!அதற்காகவே அவள் பிறவி எடுத்திருக்கலாம்!!இல்லையேல்,வருடங்கள் பல கடந்து செய்யும் இத்தவம் அவள் மனதினை பாறையாய் மாற்றி ருத்ரனின் பிம்பத்தினை அவளுள் பதித்திருக்கலாம்!!மனம் சகிக்காத அனைத்தையும் அழிக்கும் அவதாரமாய் இருந்தாள்!காண்பது அனைத்தும் தனக்கே சொந்தம் என்பதில் அவள் மனம் நிலைத்திருந்தது!!இறுதியாக,ஒருமுறை இறைவனை வணங்கியவள்,இதழ் திறந்து கூறினாள்,"நம:சிவா!"என்று!!

தவம் கலைந்து எழுந்தவள்,நேராக தனதறைக்கு சென்றாள்.அவள் நடையில் தான் எவ்வளவு கர்வம்?கம்பீரம்!!சிறிது நேரத்தில் தயாராகி கீழே வந்தவள் வேறு ஒரு அறைக்குள் நுழைந்தாள்.அவ்வறையில் இருந்தது எல்லாம் ஒன்றே!!மறைந்த அவளது தந்தையின் புகைப்படம்!!அவளிடம் தொனித்த அதே கம்பீரம்!!அவள் வைராக்கியத்தின் மூலாதாரம் புகைப்படத்தில் புன்னகைத்து கொண்டிருந்தது!!இரு கரம் கூப்பி தன் தந்தையை வணங்கியவள்,தாம்பூல தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த ரோஜா இதழ்களை இரு கைகளில் எடுத்து தன் பிதாவை ஆராதித்து வணங்கினாள்.சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியவள்,மீண்டும் வெளியே வந்தாள்.

"தேவசேனா!"-அவள் குரலில் ஒப்பற்ற  அதிகாரம் தென்பட்டது.

"ஆ..அம்மா?"-கண்களில் கிலியோடு எதிர்ப்பட்டாள் தேவசேனா!!

"டிபன் எடுத்து வை!"

"ம்...சரிங்கம்மா!"-என்றவள் விரைந்து உள்ளே சென்றாள்.தனது கைப்பேசியை ஆராய்ந்தப்படி உணவு பரிமாறும் மேசை அருகே வந்து அமர்ந்தாள் மாயா.

ஒரு சிறிய கிண்ணத்தில் அவள் உண்ணும் உணவு கொணர்ந்து வைக்கப்பட்டது.மாயாவிடம் ஒரு வழக்கம் அது!!அன்றாடம் ஏதேனும் ஒரு இனிப்பை தன் கரம் கொண்டு சமைத்து அதனை அவள் மனம் கொண்ட பிரிய இறைவனுக்கு படைத்து,அந்த உணவை மட்டும் தான் காலை வேளையில் உட்கொள்வாள்.

இரு கரம் கூப்பி மாதா அன்னப்பூரணியை ஒருமுறை வணங்கியவள்,தன் முன் வைக்கப்பட்டிருந்த உணவினை உட்கொண்டாள்.

அதை உண்டு முடித்ததும்,யாரிடமும் கூறாமல் எழுந்து கிளம்பினாள் மாயா.

"ஏன்பா!மாயாம்மா எப்போதுமே இப்படி தானா?"-சங்கரனிடம் வினவினாள் தேவசேனா.

"நீ இப்போ தானே வந்திருக்க!மாயாம்மாவோட உண்மையான சுயரூபத்தை பார்த்தது இல்லையே!அவங்க இன்னொரு முகம் இதைவிட கொடுமையானது!!"

"என்னப்பா சொல்றீங்க??"

"வைராக்கியத்தோட மறு உருவம் தான் மாயாம்மா!யாருக்கும் அடங்கினது இல்லை!போக போக பார்!"-கதிகலங்கி போய் நின்றாள் தேவசேனா.

"வடா அவ?வீடு தேடி வந்த இரண்டுப் பேரை இப்படி அவமானப்படுத்தி அனுப்பி இருக்கா?"-எரிச்சலோடு அர்ஜூனிடம் வினவினான் ருத்ரா.

"மாயா!"

"மாயா???"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.