(Reading time: 10 - 19 minutes)

"ந்தியன் எக்கனாமியே பார்த்து நடுநடுங்குற ஒரு இன்டஸ்ட்டியலிஸ்ட்!"

"அவ எவளா வேணும்னாலும் இருக்கட்டும்!நீ எதுக்கு அவ வீட்டுக்கு இவனுங்களை அனுப்பின?"

"ரகுராம் அங்கிளுக்காகடா!"

"என்ன உளர்ற?"

"ஆமா பிரதாப்!இன்னும் பத்து நாள் ஒரு டென்டர் இருக்கு ஞாபகமிருக்கா!"

"ஆமா!நாமக்கூட ரகுராம் சார்காக அதை வேணாம்னு விட்டுட்டோமே!"

"அதே தான்!ஆனா,மாயா பில்டர்ஸ் அதுக்கு கொட்டேஷன் அனுப்பி இருக்காங்க!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"ஸோ வாட்?"

"தமிழ்நாட்டுல மாயாவை எதிர்க்கிற தைரியம் எவனுக்கும் இல்லை!எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை!தான் ஜெயிக்க எத்தனை பேரை வேணும்னாலும் அழிக்க தயங்க மாட்டா அந்த மாயா!அதுக்காக தான்..."

"விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்ச அனுப்பினியா?"

"நமக்கு வேற வழி இல்லைடா!"

"டேய் என்ன நீ?சரியான பயந்தாங்குளியா இருக்க?அவ ஒரு பொண்ணு!"

"யாருக்கும் அடங்காத பொண்ணு பிரதாப்!அவ முன்னாடி எதிர்த்து பேசுற தைரியம் கூட யாருக்கும் வந்தது இல்லை..!"

"ஏ...!"

"பிரதாப்!பிசினஸ் விஷயமா அவளை யாராலும் எதுவும் பண்ண முடியாது!தயவுசெய்து கோபப்பட்டு காரியத்தை கெடுத்துடாதே பிரதாப்!உன்னை நான் கெஞ்சி கேட்டுக்கிறேன்!"-ருத்ராவின் முகம் முழுதும் அவ்வளவு எரிச்சல்!!

"நாம நேரா அவ ஆபிஸ் தான் போகணும்!"

"வாட்?பைத்தியமா நீ?அந்த திமிர் பிடித்தவளை தேடி நாம போகணுமா??"

"வேற வழியில்லை பிரதாப்!என்னால முடிந்த அளவுக்கு இந்த டென்டரை ரகுராம் சாருக்கு முடித்துவிட பார்த்தேன்.ஆனா,மாயாங்கிற பேரை கேட்டாலே எல்லாரும் அலறுகிறாங்க!"

"மாயா...மாயா...மாயா..ச்சே!"

"பிரதாப் புரிஞ்சிக்கோ!ரகுராம் சார் அப்பாவோட க்ளோஸ் ஃப்ரண்ட்!ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்!இன்னிக்கு இந்த நிலைக்கு வர காரணமே மாயா பில்ட்ர்ஸ் தான்!எவ்வளவோ சமாளித்து ஒண்ணும் செய்ய முடியாது நிலையில தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கு!இந்த நிலையில ரகுராம் சாருக்கு உதவ,மாயாவால மட்டும் தான் முடியும்!!"

"என்னமோ பண்ணு!ஆனா மாயா மட்டும் கிடைச்சா!எனக்கு இருக்கிற கோபத்துக்கு அங்கேயே அவளை சுட்டு கொன்னுடுவேன்!!"-கோபமாக உரைத்தான் ருத்ரா.

"சுடு!"-தனது கைத்துப்பாக்கியை மேசை மீது வைத்தாள் மாயா.எதிரில் அமர்ந்திருந்தவன் திடுக்கிட்டு போனான்.

"ஏதோ!என்னை கொல்ல போறேன்னு சொன்னியாம்?"

"மேடம்!நான் அப்படி எல்லாம் சொல்லலை!"

"இன்ட்ரஸ்டிங்!"-என்று அவள் சொடுக்கிட,அந்த அறையில் இருந்த தொலைக்காட்சி உயிர் பெற்றது.

அதில்,

"மாயான்னா என்ன பெரிய இவளா?அவளுக்கு நான்தான்டா எமன்!என் கையால அவளை துடிக்க துடிக்க சாகடிக்கணும்!கேவலம் ஒரு பொண்ணு அவ!அத்தனை பேர் முன்னாடி ஒரு ஆம்பளைன்னு கூட பார்க்காம இடித்ததுக்கு அறைந்துட்டா!"

"ஆமாடா!நான் வேணும்னே தான் அவளை இடித்தேன்!என்ன பண்ணிடுவா அவ?நான் நினைத்தால் அவளை என்ன வேணும்னாலும் செய்ய முடியும்!என்ன வேணும்னாலும்!ஒரு பொண்ணுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது எனக்கென்னடா?"-குடி போதையில் உளறினான் அவன்.

"மேடம்!நான் ஏதோ தெரியாம..மன்னிச்சிடுங்க மேடம்!"

"கன்னை எடுத்து சுடு!"

"மேடம் ஸாரி மேடம்!"

"கன்னை எடு!"-அவள் பொறுமை இழந்துப் போனாள்.

"மேடம்?"-சட்டென அவன் சுதாரிப்பதற்குள் துப்பாக்கியை எடுத்தவள்,அவனது தோள்பட்டையில் இருமுறை சுட்டாள்.

"ஆ...!"என்று அலறியப்படி விழுந்தான் அவ்வாலிபன்.

தனது இடக்காலின் மேல் வலக்காலினை போட்டு அமர்ந்தவள்,"நிஷாந்த்!"என்று அழைக்க,ஆஜானுபாகுவான தோற்றத்தோடு ஒருவன் வந்தான்.

துப்பாக்கியை அவள் நீட்ட,அதனை வாங்கிக் கொண்டான்.

"டிஸ்போஸ்!"-அவள் உத்தரவிட,அவ்வாலிபனை வந்து தூக்கினர் இருவர்.

"மாயான்னா பயம் இருக்கணும்!மறுபடியும் அந்த பயம் குறைந்தா,அடுத்ததா அந்த புல்லட் உன் இதயத்துக்கு பாயும்!"-என்றவள்,அவனை காலால் தள்ளிவிட்டு எழுந்து நடந்தாள்.எவருக்கும் ஆட்படாத அதிகாரமாய்!!!

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.