(Reading time: 44 - 88 minutes)

'ன்னை சந்திக்க வேண்டும் எப்போது வருகிறாய்..' என்ற மறுபடி மறுபடி குறுஞ்செய்திகள். அவன் தனது கட்டுப்பாட்டிலேயே இல்லையோ என்று தோன்றியது அபர்ணாவுக்கு. கண்மண் தெரியாத கோபத்தில் மூழ்கி கிடக்கிறானோ???.

ரத் வீட்டை அவர்கள் அடைந்த போது  சந்தோஷமான வரவேற்பு. எல்லாரிடமும் ஆனந்தம். அபர்ணாவிடம் மட்டும் கஷ்டப்பட்டு பூசிக்கொண்ட சின்ன புன்னகை. காலை உணவு முடிந்து கிடைத்த தனிமையில் அவனாகவே கேட்டான் பரத்.

'எப்போமா அருணை பார்க்க போகணும். நீ எப்போ வரணும்னு அவன்கிட்டே பேசிட்டியா???'

மனம் முழுவதும் வியப்பு மட்டுமே அவளுக்கு. எப்படி இவனால் இப்படி இருக்க முடிகிறது??? 'மனதார நேசிப்பது என்பது இதுதானா???

'நான் ப்ரியாகிட்டே சொல்லி பேச சொல்றேன் நாம ஒரு பன்னெண்டு மணிக்கு அங்கே போகலாமா பரத்..'

'சரிடா.. கண்டிப்பா...' சொல்லிவிட்டு அவள் கன்னம் தட்டிவிட்டு நகர்ந்தான் அவன்.

சில நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கூட சலனமே இல்லாத புன்னகையுடன் அவளருகில் அமர்ந்து அவன் காரை கிளப்ப கொஞ்சம் தவிப்புடன் அவனை பார்த்தாள் அபர்ணா.

'வலிக்காதா??? அவனுக்கு இது வலிக்காதா???' நினைக்கும் போதே அவளுக்குத்தான் வலித்தது. 'நிச்சியமாக வலிக்கும் அவனுக்கு. அவனும் எல்லா ஆசைகளுடன் கூடிய ஆண் மகன்தானே!!!

'பரத்..'

'ம்...'

'எனக்கு அருண்கிட்டே கொஞ்சம் பேசணும். உங்களுக்கும் எனக்கும் நடுவிலே இனிமே ஒளிவு மறைவு எதுவும் இல்லை அதனாலேதான் உங்களையும் வர சொன்னேன்' விரல்களை பார்த்துக்கொண்டே சொன்னாள் அவள். 'உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா???'

'உங்களுக்கும் எனக்கும் நடுவிலே இனிமே ஒளிவு மறைவு எதுவும் இல்லை' அந்த வார்த்தைகளில் அவனுக்குள்ளே பனிச்சாரல். 'நீ என்னவன் என அழுத்தமாக சொல்கிறாளே இதை விட வேறென்ன வேண்டுமாம்???' கிளப்பிய காரை நிறுத்தியே விட்டான் பரத்

சட்டென விழி நிமிர்த்தி அவனை பார்த்தாள். ரொம்ப கஷ்டமா இருக்கா??? 'ஏதாவது சொல்லுங்க பரத்..'

மெல்ல திரும்பினான் அவள் பக்கம் 'லவ் யூ கண்ணம்மா..' சட்டென புன்னகையுடன் சொன்னான் பரத். அதற்கு மேல் அங்கே வேறே வார்த்தைகள் தேவையாக இருக்கவே இல்லை.  காரை கிளப்பிக்கொண்டு பறந்தான். '

இப்போது மறுபடி ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளுக்கு 'இப்போது அவசியம் அருணை பார்த்து பேசத்தான் வேண்டுமா??? பேசாமல் விட்டுவிடலாமா???

'நான் விட்டுவிட்டால் அவன் விட்டு விடுவானா??? திரும்ப திரும்ப அழைக்க மாட்டானா??? அவனிடம் நேருக்கு நேராக பேசி விடுவதுதான் சரி.' கடைசியில்  ஒரு வழியாக முடிவுக்கு வந்தது அவள் மனம்.

மருத்துவமனை!!!.

வரவேற்பில் அவன் இருக்கும் அறையை தெரிந்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர் பரத்தும் அபர்ணாவும். அவன் அறையில் இருந்தது அவனும் அவன் அம்மாவும். நேற்றிலிருந்தே அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் அம்மா மீது கோபம். இவர்கள் திருமணதிற்கு சென்று அவர் வாழ்த்திவிட்டு வந்த கோபம்.

'வாங்க வாங்க..' வரவேற்றார் அம்மா.

அவனது நெற்றியை சுற்றியும் கை கால்களிலும் சின்ன சின்ன கட்டுகள் கண்மூடி படுத்திருந்த அருண் சட்டென கண்திறக்க இருவரையும் ஒன்றாக பார்த்த மாத்திரத்தில் நிறையவே கசப்பு அவனிடத்தில். அவள் தனியாக வருவாள் என எதிர்ப்பார்த்திருந்தான் போலும்!!!

ஒரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து அவளது கண்ணீருக்கு நான் காரணமாகி இருக்கிறேனே என்ற உணர்வு அவனிடத்தில் எழவே இல்லை. இப்போதும் 'நான்' 'என்னுடையது' என்ற எண்ணமே அவனுக்கு மேலோங்கி இருந்தது.

கோபம். கண்மூடித்தனமாய் எதையும் யோசிக்க விடாத கோபம். அம்மா சொன்னதைப்போல் எதையாவது பெரிதாக இழந்தால்தான் அந்த கோபம் அழியுமோ???

அவன் எதிரில் அமர்ந்தனர் இருவரும். விழிகளை நிமிர்த்தி அருண் முகம் பார்த்தாள் அபர்ணா.

இத்தனை நாட்களாக இவன்தான் எனது வாழ்வு அவள் உருகி உருகி ரசித்த காதல் அவள் கண் முன்னே அங்கே!!! இறுகிப்போன பாறையாகத்தான் இருந்தது அவள் முகமும் உள்ளமும். பல நாட்களாய் பார்த்து பார்த்து ரசித்து ரசித்து கட்டிய நம்பிக்கை கூடு கீழே விழுந்து நொறுங்கி விட்டதை உணர்ந்து விட்ட வலி அவளிடம்!!!

இப்போதும் படபடவென பொரிந்துவிடவில்லை அபர்ணா.!!!. மருத்துவமனையில் கிடக்கும் அவனிடம் பெரிதாக வாக்குவாதம் செய்ய தோன்றவில்லை அவளுக்கு மெதுவாக கேட்டாள் அவள்

'உடம்பு எப்படி இருக்கு அருண்...'

'ஏன் உயிரோடத்தான் இருக்கேனா செத்தேனான்னு பார்க்க வந்தியா??? தனியா வருவேன்னு நினைச்சேன். இப்படி ஜோடி போட்டுட்டு என் முன்னாலே வந்து நிக்க என்ன தைரியம் இருக்கணும் உனக்கு' சுள்ளென்று வந்து விழுந்தது அவன் கேள்வி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.