(Reading time: 44 - 88 minutes)

'நான் வெளியே இருக்கேன் நீ பேசிட்டு வா கண்ணம்மா..' அவனது முதல் கேள்வியிலேயே விருட்டென எழுந்து விட்டான் பரத்.

'ப்ளீஸ் 'டூ மினிட்ஸ் பரத் உட்காருங்க ' சொன்னவள் அருணை நேருக்கு நேராக பார்த்தாள்...'

'அருண்... நீங்கதான் எனக்கு எல்லாம்னு நினைச்சு நான் உங்களை ரொம்ப நேசிச்சேன் அருண்..' அவள் குரல் தடுமாற கொஞ்சம் தளர்ந்தான் அருண். சில நொடிகள் மௌனம் அங்கே

'எனக்கு உங்ககிட்டே ஒரே ஒரு கேள்விதான் கேட்கணும். நீங்க ஏன் வரலை அருண். எது நடந்தாலும் அருண் வருவார்ன்னு நான் நம்பிக்கையோட வெயிட் பண்ணேன். நீங்க ஏன் வரலை அருண்???

'என்னை ஏமாத்திட்டாங்க அபர்ணா. உனக்கு குழந்தையே பிறக்காதுன்னு சொல்லி இந்த பரத்தும் அஸ்வினியும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க'

'அதாவது எனக்கு குழந்தை பிறக்காதுன்னு நான் வந்து சொன்னேன்னுதான் நீங்க அப்போ நினைச்சீங்க இல்லையா??? இந்த கல்யாணத்தை நிறுத்திடாதீங்க அப்படின்னு கூட சொன்னேன் இல்லையா???' அவளது கேள்வியில் சற்றே தடுமாறித்தான் போனான் அருண்.

பதில் சொல்லுங்க அது நான்தான்னுதானே நீங்க நினைச்சீங்க???

வேறே வழியில்லை அவனுக்கு  'ஆமாம்' ஒப்புக்கொண்டான் அவன்.

எனக்கு நடந்தது எல்லாம் அன்னைக்கு காலையிலேயே ஓரளவு புரிஞ்சிடுச்சு. அப்படியும் ஒரு நம்பிக்கை. நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை. கடைசியிலே அது உடைஞ்சு நொறுங்கி போச்சு அருண். என் மனசு மொத்தமும் உடைஞ்சு நொறுங்கி போச்சு ' அவள் குரல் கொஞ்சம் கரைய அவள் கரம் பற்றிக்கொண்டது பரத்தின் கரம். இவர்களையே பார்த்திருந்த அம்மாவின் கண்களில் கட்டிக்கொண்டது கண்ணீர்.

'நான் பெத்து கொடுக்கிற குழந்தையும், என்னாலே கிடைக்குற பெருமையும்தான் உங்களுக்கு முக்கியமா இருந்தது இல்லையா??? 'நான் உங்ககிட்டே கேட்டது அன்பு மட்டும்தான் அதை மட்டும் நீங்க கொடுக்கவே இல்லையே அருண்'

அவள் பேசியது சுருக்கென தைக்க 'ஆமாம் நான் வரலை. அதுக்காக ஒரே நாளிலே உன் மனசை மாத்திகிட்டு இவனுக்கு கழுத்தை நீட்டிடுவியா நீ???' வார்த்தைகள் வெடிக்க  எழுந்து அமர்ந்தான் அவன்.

'வேறே நான் என்ன செய்யணும்??? பளிச்சென கேட்டாள் அபர்ணா.  

நீங்க நினைச்சிருந்தா வந்திருக்கலாம். அது எனக்கு தெரியும். இல்லை ஒரு போன்!!! இல்லை ஒரு மெசேஜ். எல்லாம் சரியாயிடும்னு!!! இது எதுவுமே முடியலையா உங்களாலே???

கல்யாணத்துக்கு நான் போகலைன்னா அபர்ணா துடிச்சு போயிடுவான்னு உங்களாலே ஒரு நிமிஷம் கூட யோசிக்க முடியலை இல்லையா அருண்.??? என் கண்ணீரை பத்தி உங்களுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை இல்லையா??

அப்படிப்பட்ட .உங்களுக்காக, உங்களையே நம்பி நான் எத்தனை நாள் நான் காத்திருக்கணும்??? இல்லை ஒரு வேளை நீங்க வரவே இல்லன்னா நான் வாழக்கையை வெறுத்து தற்கொலை பண்ணிக்கனுமா ??? இல்லை இந்த ஆம்பிளைங்க எல்லாரும் இப்படித்தான்னு வசனம் பேசிட்டு காலம் பூரா கல்யாணமே பண்ணிக்காம இருக்கணுமா???. இது எதுவுமே தேவை இல்லைன்னு தோணிச்சு!!!

'இதோ என் பரத்!!!' அவள் சட்டென சொல்ல விருட்டென  நிமிர்ந்தான் பரத். இத்தனை நாட்கள்  அவன் கேட்க வேண்டுமென தவமிருந்த வார்த்தை 'என் பரத்!!!'. இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான் அவன். மொத்தமாக பற்றிக்கொண்டது அருணின் கோபம். தொடர்ந்தாள் அபர்ணா.

'கல்யாணம் ஆன முதல் நாள் ஒரு பொண்டாட்டியா நான் அவர்கிட்டே கேட்ட முதல் கிஃப்ட் நான் அருணை பார்க்கணும்கிறது. எப்படிபட்ட புருஷனா இருந்தாலும் சுள்ளுன்னு கோபம் வரும். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனை என்னடி பார்வைன்னு கோபம் வரும். ஆனா ஒரு வார்த்தை பேசாம இதோ என்னோட வந்து உட்கார்ந்து இருக்கார். இது என் கண்ணிலே தண்ணி வரக்கூடாது அப்படிங்கற ஒரே காரணத்துக்காக!!!! அப்படிப்பட்டவரோட  அன்பை நான் எதுக்காக இழக்கணும்.???

'என் மனசை உடைச்சப்போ, நீங்க என்னை கை நீட்டி அடிச்சப்போ கூட என்னாலே உங்களை மன்னிக்க முடிஞ்சது. ஆனா கடைசி வரைக்கும் என் அன்பை நீங்க புரிஞ்சிக்கவே இல்லையே அருண். அதைத்தான் என்னாலே தாங்கிக்க முடியலை. இதுக்கு மேலே நம்ம உறவிலே எந்த அர்த்தமும் இல்லைன்னு புரிஞ்சது.

இவர் பொய் சொன்னார்தான் உங்ககிட்டே. ஆனா எனக்கு உண்மையா இருக்காரே!!! அவருக்கு எப்பவுமே முக்கியம் என் சந்தோஷம் மட்டும்தான். எனக்காக இப்படி ஒரு காதல் காத்திருக்கும் போது எல்லாத்தையும் மறந்திட்டு சந்தோஷமா அவரோட வாழணும்னு தோணிச்சு. அதுதான் மனசார பரத்தை கல்யாணம் பண்ணிகிட்டேன்...'

இப்படி ஒரு நிமிர்ந்த பதிலை அவளிடமிருந்து அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அதற்கு மேல் அதிர்ந்து போனது அவன் அம்மா.

'என் மகன் அபர்ணாவை கை நீட்டி அடித்தானா??? தாங்கிக்கொள்ள முடியவில்லை அவனை பெற்றவரால். 'என் வளர்ப்பு இப்படி தப்பாக போகுமா...'

'ஹேய்.... அது எப்படி சந்தோஷமா வாழ்ந்திடுவியா. காலம் பூரா என் நினைப்பு உன்னை கொல்லும்டி..' அருண் கொதித்து எகிற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.