(Reading time: 44 - 88 minutes)

'ன்னபா??? எப்படி இருக்கே??? பரத்தை நினைவளிகளிளிருந்து தரை இழுத்தது அருண் அம்மாவின் குரல். அவர் தோள் அணைத்தபடி நின்றிருந்தான் அருண்.

'ஓ!!! அம்மா. நான் நல்லா இருக்கேன்மா. உங்க ஹெல்த் பரவாயில்லையா..'

'நல்லா இருக்கேன்பா. என் பையன் என்னை கண்ணுக்குள்ளே வெச்சி பார்த்துக்கறான். இப்போ அருண் நிறைய மாறிட்டான் தெரியுமா???' பரத்திடம் சொல்லிக்கொள்ள வேண்டுமென தோன்றியது போலும் அம்மாவுக்கு. 'அவனுக்கும் சீக்கிரம் ஒரு நல்லது நடந்தா நல்லா இருக்கும்..'

'நடக்கும்மா. சீக்கிரம் நடக்கும்...' புன்னகையுடன் பரத் சொல்ல புன்னகைதான் அருண்.

'உலகத்திலே நாம என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும். உங்களை விஷ்வாவை எல்லாரையும் பார்த்து இப்போதான் அன்பை கொடுக்கிறது எப்படி, அன்பை ஆராதிக்கறது எப்படின்னு கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். சரியான நேரத்திலே எனக்குன்னு ஒரு அன்பு என்னை தேடி வரும். எனக்கு நம்பிக்கை. இருக்கு .' ஒரு ஆழமான சுவாசத்துடன் சொன்னான் அருண்!!!

திருமண வரவேற்பு துவங்கி இருந்தது. இந்துஜாவுடன் கரம் கோர்த்துக்கொண்டுதான் மேடை ஏறினான் விஷ்வா. சில நாட்களுக்கு முன் நடந்த அவளது நடன நிகழ்ச்சியின் போதெல்லாம் அவன் திருமணம் இப்படி சந்தோஷமாக நடக்குமென அவன் நினைக்கவில்லைதான்.

ன்று விமான நிலையத்தில் இந்துஜா ஊருக்கு போவதை  பார்த்துவிட்டு வந்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையிலும்  இந்துஜா எங்கே என்ற கேள்விக்கு இன்னமும் சரியான விடை கிடைக்கவில்லை விஷ்வாவுக்கு.  

அவன் விசாரித்த வரையில் விஷ்வாவுடன் அவள் பழகுவதை தவிர்ப்பதற்காகவே ஊருக்கு அனுப்ப பட்டிருக்கிறாள் என்று புரிந்தது. ஆனால் எந்த ஊராம் அது.??? தெரியவில்லையே!!!

அப்போது அவன் கைப்பேசிக்கு வந்தது பரத்தின் எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. .

'டாக்டர் சார் இப்படி பெங்களுர் பக்கம் வந்திட்டு போறது...'

'டே... வேலை இருக்குடா... அங்கே எல்லாம் வர முடியாது..'

'சரி அப்போ நான் இந்துஜாகிட்டே உனக்கு வேலை இருக்குன்னு சொல்லிடறேன். வெச்சிடவா..'

திக்குமுக்காடிப்போனான் விஷ்வா ' டேய்.. இந்துஜாவா அவளை எங்கே பார்த்தே..'

'உனக்குத்தான் வேலை இருக்கே நீ வேலை பாரு பா..'

'டேய்.. எருமை... ப்ளீஸ்.. சொல்லுடா...' இவன் கெஞ்ச

'நீ நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு நம்ம வீட்டுக்கு வந்தால் உனக்கு தேவையான விவரங்கள் கொடுக்கப்படும்...' என்றான் பரத் சிரித்தபடி.

மறுநாள் அவன் விழுந்தடித்துக்கொண்டு பரத் வீட்டை அடைந்த போது நேரம் நான்கை தாண்டி இருந்தது.

கதவை திறந்தாள் அபர்ணா. 'ஹேய் இந்துஜாக்கு என்னாச்சு. எங்கே இருக்கா அவ??? காலையிலிருந்து போன் பண்றேன் உன் புருஷனுக்கு நேர்லே வா நேர்லே வாங்குறான். கொஞ்சமாவது அறிவு இருக்கா அவனுக்கு...' படபடத்துக்கொண்டே அவன் உள்ளே வர அங்கே ஹாலில் அமர்ந்திருந்தாள் இந்துஜா.'

'இந்துமா.....' அவளை நோக்கி ஓடினான் விஷ்வா 'கால் எப்படி இருக்குமா??? இன்னும் கட்டே பிரிக்கலை அதுக்குள்ளே. ஏன்...இந்துமா என்னை விட்டு வந்திட்டே???' என்றபடி  அவள் காலை அவன் பரிசோதிக்க ஆரம்பிக்க சிரித்தே விட்டாள் அபர்ணா.

'நான் கூட நீ அவளை லவ் பண்றேன்னு நினைச்சேன்...நீ ஒரு பேஷன்ட் குறைஞ்சு போச்சேன்னு கவலை படறே போலே...'

அவளுடனே சிரிப்பில் இனைந்துக்கொண்டான் பரத்.. சின்னதான புன்னகையுடன் எழுந்தான் விஷ்வா.

'இந்துவோட அம்மா எல்லாமே அருண் அப்பாவை கேட்டுதான் செய்வாங்க போல விஷ்வா. இப்போ அருண் அம்மாவும் ஹாஸ்பிடல்லே இருக்காங்க. இப்போ இருக்கிற சூழ்நிலையிலே இவ உன்கூட பழகினா ஏதாவது பிரச்சனை வரும்னு இங்கே அவங்க தங்கச்சி வீட்டுக்கு அனுப்பி இருக்காங்க. உன் அதிர்ஷ்டம் அவங்க தங்கச்சி வீடு எங்க வீட்டு பக்கத்து வீடு...' சொன்னான் பரத். 'நல்ல வேளை இவ சித்திக்கு எங்களை அடையாளம் தெரியலை..மேடமும் உன்னை பார்க்காம ரொம்ப கவலையா இருந்தாங்க. அதான் உன்னை வரச்சொன்னேன்...'

'சரி கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க நாங்க வெளியே போயிட்டு வரோம்..' சில நிமிடங்கள் கழித்து அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு கிளம்பி விட்டனர் அபர்ணாவும் பரத்தும்.

அவள் சக்கர நாற்காலி அருகில் அமர்ந்தான் விஷ்வா. 'உன்னை  என் மனசு முழுக்க நிரப்பி வெச்சிருக்கேன் விஷ்வா.' சொல்லிவிட தவிக்கிறது. ஆனால் இறைவன் மொழி கொடுக்கவில்லையே அவளுக்கு.

'நான் உங்க கையை பிடிச்சுக்கவா?' அவள் கேட்க நினைக்க அதற்குள் விஷ்வா அவள் கையை பற்றிக்கொள்ள, வாசலில் அழைப்பு மணி அடிக்கிறது. அவளது சித்தியாகதான் இருக்க வேண்டும்.

'இங்கே பாரு இந்துமா. உனக்கு ரெண்டு வாக்குறுதி கொடுத்திருக்கேன். ரெண்டும் சரியா நடக்கும். முதல்லே உன்னை நான் ஆட வைக்கணும். அதுக்கு அப்புறம் கல்யாணம் பத்தி யோசிப்போம். தைரியமா இரு.' அவளிடம் சொல்லிவிட்டு பணிப்பெண் வந்து கதவை திறப்பதற்குள் உள்ளே சென்று விட்டிருந்தான் விஷ்வா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.