'இறங்குங்க மேடம்..' என்றபடியே அவன் காரை விட்டு இறங்க விழிகளை சுழற்றியவளுக்கு புரிகிறது அது என்ன இடமென!!!!
சுவாசம் தடுமாறுவது போன்றதொரு படபடப்பில் இறங்குகிறாள் அவள். அது அவள் படித்த கல்லூரியின் அந்த பின்னால் இருக்கும் மரங்கள் நிறைந்த மைதானம்.
நீ ரெண்டு நாளிலே ஊருக்கு போயிடுவே அதுக்குள்ளே என் மனசை உனக்கு சொல்லிடணும் தான் கூட்டிட்டு வந்தேன் கண்ணம்மா...' முன்பொரு நாள் அவன் கண்ணாடி வளையல்களுடன் தனது காதலை சொல்ல நின்றானே அதே இடம்.
வாழ்க்கையிலே முன்னேறணும்ங்கிற எண்ணமே எனக்கு உன்னாலேதான்..... உன்னை பார்த்ததும்தான் வந்திருக்கு. நீயே அசந்து போய் கை தட்டுற அளவுக்கு நான் மேலே வருவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நீ என்னை ஏத்துபியா???
அவன் கேட்ட அந்த வார்த்தைகளின் நினைவில் நெகிழ்கிறது அவள் மனம். கண்கள் பளபளக்க அவள் அவன் முகம் பார்க்க கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருக்கிறான் பரத். சில நிமிடங்கள் பேச்சிழந்தவளாக விழிகள் விரிய சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.
பின்னர் திடீரென அவன் பக்கம் திரும்பியவள். 'நீங்க அந்த கண்ணாடி வளையல் வெச்சிருக்கீங்களா இன்னமும்???' தவிப்புடன் கேட்டாள்
'ம்...' கண்சிமிட்டியவன் தனது முதுகில் தொங்கிக்கொண்டிருந்த பையை இறக்கினான்.
அவள் இதை கேட்பாள் என எதிர்ப்பர்த்திருந்தானோ அவன்!!!. அடுத்த சில நிமிடங்களில் அவள் கைகளில் ஏறின அந்த வளையல்கள்.
'நீ கை தட்டுற அளவுக்கு வந்துட்டேனா கண்ணம்மா. இப்போ என்னை ஏத்துப்பியா??? அவன் அவள் முகம் ஏந்திக்கொண்டு கேட்க
'போடா அதெல்லாம் முடியாது..' என்றபடி சிரிப்புடன் அவன் மார்பில் முகம் புதைத்தவளை அவன் அப்படியே தூக்கி சுழற்ற மலர்ந்து சிவந்து சிரித்தவளின் நினைவு ஏட்டில் திடீரென ஏதோ ஒரு மின்னல்.
'பரத்... எனக்கு இப்போ சென்னை போகணும்..'
'சென்னையா??? எதுக்குடா திடீர்னு???? கீழே இறக்கினான் அவளை.
'எனக்கு போகணும்.. ப்ளீஸ்... ப்ளீஸ்.. எனக்கு ஒரு விஷயம் பார்க்கணும் ப்ளீஸ்... வேண்டாம்னு சொல்லாதீங்க...'
அடுத்த சில மணி நேரங்களில் சென்னையில் இருந்தனர் இருவரும். தனது அறையில் ஏதேதோ பழைய குப்பைகளை குடைந்தபடியே இருந்தாள் அவள். இது எப்படி இத்தனை நாட்கள் மறந்து போனது என்று தெரியவில்லை அவளுக்கு.
'ஹேய்... என்னடி பண்றே..'
'இருங்க சொல்றேன்.. அஞ்சே அஞ்சு நிமிஷம்...' அவள் சொல்லிக்கொண்டே இருந்த போது அவளுக்கு கிடைத்தது அது. விரல் நடுங்க அதை எடுத்து அவசரம் அவசரமாக அதன் பக்ககங்களை திருப்பி......
'என்னது கண்ணம்மா...' என்றபடியே அவள் அருகில் வந்தவனின் பார்வையும் அதில் விழ
''பரத்' அந்த பெயர் எனக்கு பிடிக்கத்தான் செய்கிறது. ரகசியம் இது பரம ரகசியம். 'உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்' அவன் சொல்லும் போது உள்ளுக்குளே சிலிர்க்கத்தான் செய்தது எனக்கு.
'உன் கண்ணிலே தண்ணி மட்டும் வர விட மாட்டேன் கண்ணம்மா' சொன்னானே அவன். வருவானோ மறுபடியும்??? அவனுக்கு நான் கைதட்டவும் செய்வேனோ. தெரியவில்லை பார்க்கலாம்.'
அன்று அவனை சந்தித்துவிட்டு வந்த பிறகு அவள் எழுதி வைத்த டைரியின் பக்கம் அது. சுவாசிக்க மறந்து இருவரும் அதையே திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருந்தனர்.
'அப்படி என்றால் இவன் தான் என் முதல் காதலா???' சில நிமடங்கள் கழித்து இருவர் கண்களும் சந்தித்துக்கொள்ள நெகிழ்ச்சியின் பிடியில் அவன் முகம் ஏந்தி மாறி மாறி முத்தமிட்டாள் அபர்ணா.
'கண்ணம்மா...' அவன் இதழ்கள் அவள் கன்னம் தொட முயல அவள் சட்டென அவனை விலக்கிவிட்டு விலக
'ஹேய்.. என்னடி... ராட்சசி... .நீ மட்டும் நினைச்சப்போ எல்லாம் முத்தம் கொடுக்கலாமா??? ஒண்ணே ஒண்ணு என் கண்ணம்மாவுக்கு ..'என்றபடி அவன் இதழ்கள் அவள் கன்னம் உரச
'அதெல்லாம் கிடையாது. நான் 'எஸ்' சொன்னதுக்கு அப்புறம்தான் உங்களுக்கு பெர்மிஷன்..' அவனை நகர்த்தினாள் அவள்.
'அதுதான் எப்போ???'
'சீக்கிரமே நம்ம அறுபதாம் கல்யாணத்துக்கு முன்னாடியே..' சொல்லிவிட்டு அவனை தள்ளிவிட்டு துள்ளி குதித்து ஓடும் தன் கண்ணம்மாவை மனதார ரசித்திருந்தான் பரத்!!!!
நிறைந்தது!!!!
{kunena_discuss:982}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.