(Reading time: 44 - 88 minutes)

பெங்களூர்!!!

ஆனந்த சிரிப்புடன் பரத் அபர்ணாவை  ஆர்த்தி சுற்றி வரவேற்றாள் பணிப்பெண் லலிதா. நீங்க சீக்கிரமா சாரை கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வந்திடுங்க...' முன்பு ஒரு முறை அவள் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது அபர்ணாவுக்கு.

'வெல்கம் கண்ணம்மா!!!' வாய்விட்டு சொல்லி வரவேற்றான் பரத்.

இரவின் தனிமை!!! அவளது புகைப்படங்கள் நிறைந்திருந்த அந்த படுக்கை அறையில் இருந்தனர் பரத்தும் அபர்ணாவும்.

திருமணம் நடந்து கடந்து வந்த இந்த இரவுகளில் உறங்கும் போது அவளை தனது கைகளுக்குள் அடைக்காத்து கொள்வதை மட்டும் விடவே இல்லை பரத். விளக்கை அணைத்து விட்டு எப்போதும் போல் அவளை கைகளுக்குள் சேர்த்துக்கொண்டு சொன்னான் பரத்.

'இந்த வீட்டுக்கு நீ என் பொண்டாட்டியா வருவியான்னு பல வருஷம் கனவு கண்டிருக்கேன் கண்ணம்மா. இன்னைக்கு பலிச்சிருக்கு!!! இதோ நீ என் கைக்குள்ளே. போதும். இது போதும் வாழ்கையிலே' என்றபடியே அந்த நிலையை அனுபவித்து ரசிப்பதை போல் கண்களை மூடிக்கொண்டவன் இரண்டு நிமிட  மௌனத்திற்கு பிறகு தன்னிலைக்கு வந்து கேட்டான்

'வீடு பிடிச்சிருக்கா கண்ணம்மா??? ஏதாவது சேன்ஜெஸ் பண்ணணுமா???'

'வீடெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இந்த ரூம் ஃபுல்லா இருக்கிற என் போட்டோ எல்லாம் மட்டும் எடுத்திடுங்களேன். திரும்ப திரும்ப என் மூஞ்சியையே பார்க்க கடுப்பா இருக்கு..

'ஹேய்... வாய்ப்பே இல்லை... இது கூடத்தான் இத்தனை நாள் வாழ்ந்திருக்கேன்..' அவன் சட்டென சொல்ல..

'அதுக்கில்லை அருண்......!!!!

எப்படி வந்ததோ அவன் பெயர் அவளே அறியாமல் அவள் உதடுகளில் வந்தே விட்டது அருண் பெயர் . பரத் சட்டென அவள் முகம் பார்க்க, அவன் எப்படி உணர்ந்தானோ தெரியவில்லை இவளுக்கு உயிர் வரை சுட்டுப்போனது.

அய்யோ!!! என்ன செய்து விட்டேன் நான்!!! இவன் கைகளில் இருந்துக்கொண்டு அவன் பெயரை உச்சரித்து விட்டு... எப்படி இருக்கும் அவனுக்கு??? பரத் என் பெயரை விட்டு வேறே யார் பெயரையும் சொன்னால்  எப்படி இருக்கும் எனக்கு..'

சாரி பரத். ரொம்ப சாரி பரத்... ஏதோ தெரியாம டக்குன்னு வந்திருச்சு... தப்பா எடுக்காதீங்க பரத்... ப்ளீஸ்,,' படபடபடவென வார்த்தைகள் வர சில துளி கண்ணீர் கூட சேர்ந்துக்கொண்டது அவள் கண்களில்.

'இரு இரு இரும்மா.. இப்போ.. என்ன ஆச்சு.... பேருதானே சொன்னே... அவன் கூட நீ பழகி இருக்கே சில நேரம் அவன் பேர் உன் வாயிலே வரத்தான் செய்யும்... இதிலே என்ன இருக்கு..'

'இல்ல யாருக்கா இருந்தாலும் கஷ்டமாதான் இருக்கும். ரொம்ப சாரி..'

'இல்ல கண்ணம்மா..... நான் தாலி கட்டும் போது என்னை பார்த்து நான் உன் கண்ணம்மாடான்னு சின்னதா ஸ்மைல் பண்ணே இல்ல அது ஒண்ணே போதும்டா எனக்கு. நீ எப்பவும் என் கண்ணம்மாதான் இதெல்லாம்  ஒண்ணுமில்லை. ரொம்ப யோசிக்காதே  ஃப்ரீயா விடுமா..சரியா???'

அவன் சொல்லிவிட்டான்தான் அதன் பிறகு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் வெகு இயல்பாக!!! ஆனால் அவள் மனம்தான் ஏனோ ஆற மறுத்தது. 

நான்தான் உன்னுடைய ஃபர்ஸ்ட் லவ். நீ என்னை எவ்வளவு மறக்க முயற்சி பண்ணாலும் தினமும், என் ஞாபகம் உனக்கு வந்திட்டேதான் இருக்கும் அருண் சொன்னதே அவள் காதில் கேட்டுக்கொண்டிருந்தது

சில நிமடங்கள் கழித்து பரத் உறங்கிவிட்டான் என்ற எண்ணத்தில் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு அவன் கைகளுக்குள் படுத்திருந்தாள் அவள். சற்றுமுன் நடந்த நிகழ்வே அவளுக்குள் சுழன்றுக்கொண்டிருந்தது.

'இதெல்லாம்  ஒண்ணுமில்லை. ரொம்ப யோசிக்காதே  ஃப்ரீயா விடுமா......' நிஜமாகவே உன் மனம் யாருக்கும் வராதடா!!! அவன் நெற்றியின் மீது மெதுவாக இதமாக பதிந்தன அவள் இதழ்கள்.

'முதல்லேயே உன்னை நான் லவ் பண்ணி இருந்திருக்கலாம். தப்பு பண்ணிட்டேன். நீ என் ஃபர்ஸ்ட் லவ்ஆ இருந்திருக்க கூடாதான்னு இருக்கு...' தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.

உறங்கும் பாவனையிலேயே படுத்திருந்த பரத்தின் காதிலும் விழுந்தன இந்த வார்த்தைகள். இருந்தும் கண்களை திறக்கவில்லை அவன்.

அது என்னதாம் ஃபர்ஸ்ட் லவ். செகண்ட் லவ். ஒரு முறை மேகங்கள் கூடி மழை பொழியாமல் கலைந்து போனால் அடுத்து வரும் மழையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கண்ணீர் சிந்துகிறதா என்ன பூமி???

'அப்படியே பார்த்தாலும் நான்தானடி உன் முதல் காதல். உன்னிடம் முதலில் என் காதலை சொன்னது நான்தானே???

இப்போது எதையும் அவளிடம் விளக்க விரும்பவில்லை அவன். ஆறட்டும் அவள் மனம். மெது மெதுவாக என்னுள் கரைய துவங்குவாள் அப்போது அவளே புரிந்துக்கொள்வாள்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.