(Reading time: 12 - 23 minutes)

வீட்டில யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்க முடியாம உள்ளுக்குள்ளே எல்லாம் வைச்சு ரொம்பவே கஷ்டப் பட்டிருப்பான்னு நினைக்கிறேன். ஒரே விஷயத்தை யோசிச்சு யோசிச்சு ரொம்ப அதிகமான ஸ்ட்ரெஸ், கூடவே பல நாளா சாப்பிடாம, தூங்காம இருந்ததாலயும் வீக்னெஸ்ஸா இருக்கலாம். எப்படின்னாலும் அவளோட மேரேஜ் விஷயத்தில உங்க வீட்ல நடந்துக்கிட்டது ரொம்பவே தப்பு. சரி எதுவானாலும் சரி பண்ணிடலாம். சூசைட் வரை யோசிச்சிருக்கா? கவுன்சலிங்க் எதுவும் தேவையான்னு பார்க்கலாம். இப்ப அட்மிட் பண்ணிடறேன், நைட்குள்ள ஓரளவு சரியாகிட்டா அவளை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். நீங்க அனி அட்மிட் ஆகியிருக்கிற விஷயத்தை வீட்ல சொல்லிருங்க சிஸ்டர் பின்னே இன்னும் லேட்டா சொன்னீங்கன்னா கிறிஸ் வேற உங்க மேல கோபப்படப் போறான் என தீர்வு சொல்லியவன். பிரபா எழுந்துச் சென்றதும் ரூபனிடம்,

இப்ப என்னச் செய்யலாம்னு நினைக்கிற ரூபன்? அனியை நீ அடிச்சு வேற வச்சிருக்க, அவ அப்பா போலீஸை காண்பிக்காம விட மாட்டாரே……… வேணும்னா நான் உன் பேரை சொல்லாம விஷயம் வெளியே தெரியாம பார்த்துக்கறேன். பிரபா கிட்டயும் அப்படியேச் சொல்ல சொல்லிடலாம் இங்கிருந்து புறப்பட்டு போ. போகிற போக்கில கிறிஸ் வைஃப் கிட்ட அட்மிஷன் ஃபார்மலிடீஸ் பண்ண சொல்லிடு. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் என்றவனுக்கு பதில் கொடுக்காதவனாக ரூபன் எழுந்து ரிசப்ஷனை நோக்கி சென்றான்.

அட்மிஷன் பார்ம்களில் கேட்ட இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டவன் முன்தொகையாக கட்ட வேண்டியதை கார்ட் செலுத்திக் கட்டினான். பிரபா போனில் கிறிஸ்ஸிடம் பேசி கொண்டிருப்பது கேட்டது. அவளை முழுவதுமாகச் சொல்ல விடாமல் கணவன் திட்டிக் கொண்டிருக்கின்றான் என்பது அவள் முகபாவனையிலேயே தெரிந்தது.

அனிக்காவை அட்மிட் செய்திருந்த அந்த ஸ்பெஷல் அறைக்குள் ரூபன் நுழைய, சற்று முன்னரே அவளை பரிசோதித்து விட்டு டாக்டர் சென்றிருக்க அக்கம் பக்கம் யாருமில்லாத அந்த தனிமை அவனுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

அட்மிஷன் பார்ம்களில் அவள் பெயரை எல்லாவிடமும் மிசர்ஸ் அனிக்கா ரூபன் என்று எழுதி இருந்தவன் ஹஸ்பெண்ட் என்று தன்னுடைய கையெழுத்தையே தேவையான இடங்களிலெல்லாம் இட்டிருந்தான். தான் என்னச் சொன்னால் என்னச் செய்து வைத்திருக்கிறான் என்கிற ஆத்திரத்தில் அவ்வறையின் வாயில் வந்து நின்ற ராஜேஷையும், ஃபேக்டரி செக்யூரிட்டி மூலமாக அனிக்கா ஆஃபீஸிர்கு வந்ததையும், ரூபன் அவளை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் போகும் வழிச் சென்றதையும் அறிந்து அனிக்காவிற்கு என்னவாயிற்றோ எனப் பதறியபடி வந்து நின்ற ஜீவனையும் சாட்சியாக்கி மயங்கியிருந்த அனிக்காவை தன் மடியில் ஏந்தியவனாக திருச்சிலுவைக் கொண்ட அவர்கள் குடும்ப வழக்கமான தங்கத் தாலிச் செயினை ரூபன் அவளுக்கு அணிவித்து இருந்தான்.

அனிக்காவை வசதியாக படுக்க வைத்தவனிடம் ஆக்ரோஷமாக வந்து சட்டையைப் பற்றிக் கொண்டு “என்னடாச் செய்யிற?” எனக் கேட்ட ராஜேஷைக் கண்டுக் கொள்ளாமல் ரூபன் அலட்சியமாய் நிற்க, ஜீவன் அவர்களுக்குள் நின்று ராஜேஷின் கரத்தை ரூபனின் சட்டையினின்று பிரித்தெடுத்தான்.

உன்னை நம்பினதுக்கு நீ இப்படிச் செய்வன்னு நான் நினைக்கலை? ஏமாற்றமாய் வெளிவந்தது ராஜேஷின் வார்த்தைகள். நான் கிறிஸ்-க்கு என்ன பதில் சொல்வேன்? அதான் நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னேனே, நீ போயிருக்கலாமே?”

“எதுக்கு அவ சூசைட் பண்ணுறதை பார்க்கிறதுக்கா? அப்படி பயப்படுறவனா இருந்தா நான் லவ் பண்றதில அர்த்தமே இல்லை. அவங்க வீட்டுக்காரங்க அவ மனசைப் புரிஞ்சுக்கிறவங்களா இருந்தா அவ மனசு வெறுத்து சாகிறேன்னு சொல்லுற வரைக்கும் வர விடுவாங்களா? நீயெல்லாம் பேருக்கு அவ அண்ணேன்னு சொல்லிட்டு இருக்காத. நான் என்னப் பிரச்சினை வந்தாலும் பார்த்துப்பேன். முடிஞ்சா எனக்கு சப்போர்ட் பண்ணு, இல்ல ஒதுங்கிப் போ நான் எல்லாத்தையும் பார்த்துப்பேன். இனி அவ என் பொண்டாட்டி என் கூட என் வீட்டுக்கு தான் வருவா. எப்போதும் எல்லோரும் அவளை இஷ்டப் படிக்கு ஆட்டி வைக்கிறதை எல்லாம் என்னால பார்த்திட்டு இருக்க முடியாது. திடமாய் ஒலித்தது அவன் குரல்.

உண்மைதானே ஒருவேளை கிறிஸ்-ஸிற்காக பார்த்து தான் தற்போது ரூபனுக்கு உதவாவிட்டால் அனிக்கா ஏதாவது தவறான முடிவு எடுத்து விட்டால் தன்னால் தன்னையே மன்னிக்க முடியாது போகும் என்றெண்ணிய ராஜேஷ் தான் ரூபனை எதிர்ப்பதை விடுத்தான். நான் உனக்கு சப்போர்ட் செய்வேன்னு எதிர்பார்க்காதே, ஆனால் உனக்கு எதிர்ப்பாவும் இருக்க விரும்பலை. என்னவாயிருந்தாலும் நீயே ஃபேஸ் பண்ணிக்க என்றவனாக அங்கிருந்து நகர்ந்தான்.

அடுத்து என்ன நிகழப் போகிறதோ? என ரூபன் தவிர்த்து அனைவரும் உள்ளுக்குள் உதறலாக காத்திருக்க அனிக்கா மட்டும் நிர்சிந்தையாக மயக்கத்தில் இருந்தாள்.

வாசலிலிருந்த பிரபாவை முறைத்தவாறே கிறிஸ் ஹாஸ்பிடலின் உள்ளே நுழைய பின்னாக தாமஸ் போலீசொருவரோடு வந்திறங்கினார். மகளைக் காணச் சென்றவரின் கண்கள் அருகில் இருந்த ரூபன் மேல் நெருப்பைக் கக்கியது.

போலீஸிடம் தன் மகளை காயப் படுத்தியதாகவும், கடத்தி வந்ததாகவும் கூறி ரூபனை கைது செய்யச் சொல்ல ரூபனோ தாங்கள் கணவன் மனைவி என்றும், சாதாரண பலவீனம் காரணமாக மனைவியை அட்மிட் செய்திருப்பதாகவும், கடத்தி வரவில்லையென்றும் நிமிர்வாய் பதில் கூறினான்.

பெண்ணின் கழுத்தில் தாலி, அட்மிஷன் ரெக்கார்டில் இருந்த அவள் பெயர் போன்றவை போலீஸிற்கு குழப்பத்தை ஏற்படுத்த இப்போது அனிக்காவின் வாய்மொழியாக உண்மையென்னவென்று தெரிந்தாலொழிய எந்த முடிவையும் எடுக்க முடியாது என்கிற நிலையாயிற்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.