(Reading time: 11 - 21 minutes)

"து மகேந்திரனோட இரத்தம்!மறந்துப் போச்சா?அந்த சிங்க கர்ஜனை மறந்துப் போச்சா?கூட்டமா வந்து நரி மாதிரி சாகடிக்கலை!தனியா எதிர்த்து நின்ற கதை மறந்துப் போச்சா?ஆணவம்,அகங்காரம்,பிடிவாதம்,வைராக்கியம் இதெல்லாம் பணம் கொடுத்து வர வைக்க முடியாது!சொல்லியும் கற்றுக்க முடியாது!அதெல்லாம் ரத்தத்திலே ஊறி இருக்கணும்!"

"எந்த தைரியத்துல என் முன்னாடி வந்து நிற்கிற?இதோ இந்த ரகுராம் தந்த தைரியமா?இல்லை..மாயா பழைய விஷயத்தெல்லாம் மறந்துடுவான்னு நம்பிக்கையா?இது பகை...20 வருட பகை!அன்னிக்கு என் அப்பா சிந்தின ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் ஈடா இன்னிக்கு உன் ரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கிறேன்!"

"இன்னும் சாந்தமாகலை!உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?என்னால உன்னை என்னைக்கோ கொன்னு எரித்திருக்க முடியும்!இதுநாள் வரை நான் மௌனம் சாதிக்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா?நீ அழணும்!உன் உடம்புல உயிர் இருக்கிற வரை நீ அழணும்!தாங்கிக்கவே முடியாத வேதனையுள்ள மரணத்தை உனக்கு நான் கொடுக்கணும்!வாழ்நாள் முழுக்க அன்னிக்கு மகேந்திர குமார் எந்த துக்கத்தை தன் மனதளவுல போட்டு புழுங்கி உயிரை விட்டாரோ,காயத்ரி தேவி நீயும் அதே நரக வேதனையை அனுபவிக்கணும்!எந்த ஒரு ஆதாரமும் இல்லாத நிலைமையில செய்த பாவத்தோட பலனா யாரை அன்னிக்கு தூக்கி எறிந்து போனியோ,அதே மாயாக்கிட்ட நீ திரும்ப வர வைக்கும் என் பார்வை உன் மேலே இருந்து விலகாது!"-வார்த்தைகளில் தாண்டவமாடினாள் அவள்.

"மாயா!"-பொறுமை இழந்த அர்ஜூன்,அவளது புஜங்களைப் பற்றி இழுத்து,அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

நடந்த தாண்டவத்தை கண்ட மித்ராவின் இதயம் சில நொடிகள் துடிக்க மறந்தன.

"வா!"-அவளது கரத்தைப் பற்றி இழுத்து சென்றான் அர்ஜூன்.அவளிடம் பேச்சில்லை!!சிலையாகிப் போயிருந்தாள்!!இருவரும் நகர்ந்த பின்,அப்படியே தரையில் அமர்ந்தார் காயத்ரி.கண்ணீர் தன்னிச்சையாக பெருக்கெடுத்து கன்னத்தில் வழிந்தது.

"மா!"-மித்ரா ஓடிச்சென்று அவரைத் தாங்கினாள்.ருத்ராவின் தீக்ஷணப் பார்வை மகேந்திரனது சமாதியில் நிலைத்து நின்றது!!மறைக்கப்பட்ட சகாப்தத்தை உணர துடித்தது அவன் மனம்!!மகளின் மேல் வெறுப்பே நிறைந்திருந்தாலும்,தந்தையின் மேல் விளக்க இயலா மரியாதையை ஏற்றது அவன் மனம்!!

"பைத்தியமா மாயா நீ?அறிவில்லை உனக்கு?என்ன பேசுறோம்னு யோசிக்க மாட்டியா?"

"எதுக்காக என்னை அறைந்த?"-எங்கோ வெறித்தப்படி முனகினாள் அவள்.

"நீ பண்ற தவறுகளை எல்லாம் வேடிக்கை பார்க்க நீ எனக்கு யாரோ கிடையாது!இன்னிக்கு நீ செய்த தப்பை உன் அப்பா ஸ்தானத்துல இருந்து கண்டித்திருக்கேன்!"

"அர்ஜூன்!"

"நிறுத்து!உங்கப்பா இருந்திருந்தாலும் இதே மாதிரி தான் நடந்திருப்பார்!"

"அந்த விஷயத்துல அவரோட மரணம் உண்மையிலே எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது!"-எங்கோ வெறித்தப்படி கூறினாள் அவள்.

"மாயா!"

"............."

"நடந்தது அறியாமல் நடந்தது!அதற்காக இந்த அளவு பகையை உன்கிட்ட இருந்து நான் எதிர்ப்பார்க்கலை!இதை வைத்து என்ன சாதிக்கப் போற நீ??சொல்லு மாயா!"

"நிம்மதி அர்ஜூன்!என் கண்ணீருக்கான அங்கீகாரம்!இன்னிக்கு நீ கேட்ட சாந்த சொரூபினியான மாயாவோட இடத்துல இந்த மாயா சண்டி ரூபினியா தாண்டவமாட காரணம் அந்த காயத்ரி!நான் சிரித்து பல வருடங்கள் ஆச்சு அர்ஜூன்.அந்தச் சிரிப்பு திரும்ப என்கிட்ட வரணும் இல்லையா?அதுக்காக தான் எல்லாம்!"

"அந்த காயத்ரி அழியணும்!அவளோட கண்ணீர் என் பாதத்தை நனைக்கணும்!அவளோட சடலத்தின் மேலே இந்த மாயா தாண்டவம் ஆடணும்!அவளோட ரத்தத்திலே தான் என் கோபம் தணியும்!அதுவரை மாயாவை சாந்திப்படுத்த யாராலும் முடியாது!"

"இது வெறும் பகை இல்லை!ஒரு பாவமும் அறியாத ஒரு அப்பாவி மேலே விழுந்த கறைக்கான கூலி!!செய்த பாவத்துக்கான தண்டனை!"

"இதனால உன் எதிர்காலமே நாசமாகிவிடும் மாயா!"

"எதிர்காலமா?நான் மூன்று காலத்தையும் கடந்தவள்!வாழ்க்கை மேலே நான் இதுநாள் வரை பிடிப்பு வைக்கலை!உண்மையை சொல்லணும்னா என் அப்பா இல்லாத உலகத்துல அதிக நாள் நான் வாழ விரும்பலை!எது நடந்தாலும் எதிர்க்கிற தைரியம் எனக்குண்டு!என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது!"

"மாயா!புரிந்துக்கோ மாயா!உனக்காக ஒரு வாழ்க்கை இருக்கு!"-அவள் தன் கரத்தினை உயர்த்தி காண்பித்தாள்.

"நான் அதை அழித்துவிட்டேன்!"-என்றவள் தனது காரில் ஏறி கிளம்பினாள்.அவள் சென்ற திசையை நெடுநேரமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்!!பெருமூச்சை விடுத்தவன்,தன் வானத்தை உயிர்பித்து புறப்பட்டான்.

ருவரும் கடந்தப்பின் அமைதியான அச்சூழலில் பிரவேசித்தான் ருத்ரா.அவன் விழிகளில் ஆயிரமாயிரம் வினாக்கள்!!

"யார் இந்த மாயா?"-என்ற வினா மட்டுமே அவனிடம் மிஞ்சி இருந்தது.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.