(Reading time: 13 - 25 minutes)

யிலாய பர்வதத்தின் அடிவாரத்தை அடைந்த ஒரு முதியவர் களைப்பில் சற்று நேரம் அங்கு அமர்ந்து இளைப்பாற, அவரது அருகில் வந்த சிற்பிகளில் மூத்தவர், அவர் யார் என்ன என்று விசாரிக்க, அவரோ, தான் நந்தியின் தந்தை சிலாதன் என்றார்…

“நந்தியின் தந்தை சிலாதன் தாம் தானா?... தம்மைப் பற்றி கேள்வியுற்றிருக்கிறேன்.. தாங்கள் பெரும் பாக்கியம் செய்தவர், ஆம், தமது மகன் மகாதேவருடன் இருக்கும் வரம் பெற்றிருக்கிறானே…” சிற்பி மன மகிழ்ச்சியுடன் கூற, சிலாதன் முகத்திலோ வருத்தம்….

அதனைக் கண்டு சிற்பி, சிலாதனிட்த்தில் காரணத்தை வினவ, அவரும் கூறினார்…

குழந்தை இல்லாத அவர், பல ஆண்டு தவம் செய்து பெற்ற மகன் தான் நந்தி… தன்னுடன் எப்போது இருக்கும், தனக்கு உணவிடும் தனது நம்பிக்கையான காளையை போலவே தன் மகன் வேண்டும் என ஈசனிடம் வரம் பெற்று நந்தியை மகனாகக் கொண்டார் சிலாதன்… நந்தியின் சிறுவயது முதலே, மகாதேவர் பால் ஈர்க்கப்பட்டான்… சிறு வயது பாலகனாக அவன் இருந்த போது ஒரு நாள் கயிலாய பர்வதத்திற்கு சென்றவன் தான் இன்று வரை திரும்பவில்லை வீட்டிற்கு…. சிலாதனும் போன தன் மகன் இன்று வருவான், நாளை வந்திடுவான், என நம்பிக்கை கொண்டது தான் மிச்சம்… அவன் திரும்பி வரவே இல்லை… சிலாதனுக்கும் வயது முதிர்வு ஆரம்பிக்க, இந்த வயதான காலத்தில் தன்னை கவனிக்கவும் ஒரு ஆள் வேண்டும் என்ற நிலைமை, அது போக, மீதம் இருக்கும் நாள்வரையிலாவது மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம்… தன் மகனோடு தன் வம்சம் முடிந்திடாமல், நீள வேண்டும் என்ற எண்ணம்… அதனால் மகாதேவரிடம் பேசி, மகனை தன்னோடு அழைத்து செல்ல வந்திருப்பதாக சிலாதன் சிற்பியிடம் கூறிக்கொண்டிருந்த பொழுது அங்கே வந்தனர் அந்த இரு சீடர்களும்…

“தாம் தான் நந்தியின் தந்தையா?... தாங்கள் கவலை கொள்ளாதீர்கள்?... நாங்கள் மகாதேவரிடம் சென்று இப்பொழுதே விஷயத்தைக் கூறுகிறோம்…” என உற்சாகத்துடன் மகாதேவனைப் பார்க்க்ச் சென்றனர்…

“மகாதேவா… தங்களை நந்தியின் தந்தை சிலாதன் பார்க்க வந்திருக்கிறார்… அதுமட்டுமல்ல அவர் நந்தியை தன்னோடு உடன் அழைத்துப் போகவே இவ்விடம் வந்துள்ளார்…”

அவர்கள் இருவரும் விஷயத்தை அவனிடம் கூற, “நந்தியின் தந்தையை கௌரவத்துடன் இங்கே அழைத்து வாருங்கள்…” என்றான் அவனும்…

சிலாதன் மகாதேவனை வணங்கி, “மகாதேவா… இறைவா… தாம் செய்த அனுக்கிரகமே என் புதல்வன்… என் முன்னோர்களின் வாக்கினை நிறைவேற்றவே நான் தங்களிடம் வரம் பெற்றேன்… தாங்களும் பெரும் மனது கொண்டு எனக்கு நந்தியை அருளினீர்கள்… எனினும் மகன் இருந்தும் நான் இன்றளவும் தனிமையில் தான் வாடுகிறேன்… வேறு எதுவும் எனக்கு சொல்ல வார்த்தை வரவில்லை பிரபு…”

அவர் கண்கள் கலங்க, “நந்தியை உடன் சென்று அழைத்து வாருங்கள்…” என ஆணையிட்டான் மகாதேவன் தனது இரு சீடர்களிடமும்…

“சிலாதன் வந்திருப்பது தெரிந்தால், அவன் இங்கே வரமாட்டானே பிரபு… நாங்கள் என்ன செய்யட்டும்?...” இரு சீடர்களும் திணறி நிற்க,

“நந்தி எனக்கு செய்த சேவைகள் போதும்… இனி அவன் அவனது தந்தைக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது… நந்தியின் பிறப்பே, சிலாதனின் வம்ச விருத்தியை முன்னிறுத்தித்தான்… நந்தியின் மீது எனக்கு அதீத பிரியம் உண்டு… எனினும் சிலாதனுக்கே நந்தி உரியவன்…” என்றவன், “நான் நந்தியை அழைப்பதாக கூறி அவனை இங்கு அழைத்து வாருங்கள்…” என்றான் தனது இருசீடர்களிடமும்…

அமைதியாக வந்த நந்தி சிலாதனை வணங்கி தழுவிட, சிலாதனின் விழிகளிலோ நீர்…. முகத்திலோ ஆன்ந்தம்… ஆனால் நந்தியின் முகத்திலோ அப்பட்டாமான கவலை தென்பட்ட்து… யாதொரு உணர்ச்சிகளும் இல்லாதிருந்தான் அவன்…

“என்னருகில் வா நந்தி…” என மகாதேவன் அழைக்க, அவனருகில் சென்று வணங்கினான் நந்தி…

“பெற்றவர்களுக்கு செல்வம் தனது பிள்ளையே… அதுவே அகிலத்தின் சத்தியமும் கூட… நீ இதுவரை எனக்காற்றிய சேவைகளில் நான் மனமகிழ்ந்தேன்… அதில் திருப்தியும் அடைந்தேன்… இனி உன் தந்தைக்கு உனது சேவையும் பணிவிடையும் அவசியம்…”

“எனில் அனைத்தும் அவசியத்தின் பேர் தான் நடக்கின்றதா?... அவர் தனது தேவைக்கு தவம் இருந்தார்… தாங்களும் அருள் புரிந்தீர்கள்… என்னை வரமாக பெற்றார்… எனில் நான் யாருக்கு அவசியம் பிரபு?... தமக்கு செய்த சேவைகள் போதும் என என்னை இங்கிருந்து வெளியே அனுப்ப முடிவெடுத்துவிட்டீர்கள்… என்னை குறித்து தாம் கூட சிந்திக்கவில்லையா?... எனினும் நான் எந்த அவசியத்தின் பேரிலும் தமக்கு சேவைகள் செய்யவில்லை… உளமார, உள்நோக்கம் ஏதும் இல்லாது நான் தமக்கு சேவைகள் செய்தேன்… அதுவே என் வாழ்வின் நோக்கம்… அது நான் பெற்ற பெரும் பாக்கியம்… தமது சேவகன் என்பதே எனது அடையாளம்.. அது இல்லாது போய்விடில் இந்த நந்தி அடையாளமற்றவன் ஆகிவிடுவான் பிரபு… தமக்கு சேவைகள் செய்வதென்பது எனது இயல்போடு கலந்தது… விழிகள் பார்ப்பதை போல, செவிகள் சத்த்தினை உணர்வது போல அது என் இயல்பாகிவிட்டது… நான் இன்றி தம்மால் இருக்க முடியுமா கூறுங்கள் மகாதேவா…”

அவன் தன் கண்ணீர் உதிர்க்க, “முடியாவிடினும் நான் முயற்சி செய்வேன்…” என்றான் மகாதேவன்…

“அது எனக்கு இயலாது… என்னை இங்கிருந்து இவரோடு இப்போது அனுப்புவதற்காகவா தங்களோடு இணைத்து எனக்கு ஒரு பந்தம் உருவாக்கினீர்கள்?... நான் ஒப்புக்கொள்கிறேன்… எந்தவித மோக பந்தங்களிடையேயும் சிக்கிக்கொள்ள கூடாதென்று கூறுபவர் தாம்… எனினும் தம்மோடு எனக்கு இப்பந்தத்தினை ஏன் உருவாக்கினீர்கள் மகாதேவா?..…”

ந்ந்தி கேள்வி எழுப்ப, “இப்போழுது வாதம் செய்யும் நிலையில் நானில்லை…” என்றான் மகாதேவன்..

“இவரோடு நான் சென்றால், நான் அனுஷணமும் வேதனையிலேயே மூழ்கி போவேன்….”

“அவ்வாறு நடக்க வாய்ப்பு இல்லை நந்தி… அவர் உன் தந்தை… அது உன் இல்லம்… அதனால் நீ உன் தந்தையுடன் செல்… இது என் ஆணை…”

அவன் உறுதியுடன் கூற, அவனது காலில் விழுந்து அழுத நந்தி, சற்று நேரத்திற்குப் பின் சட்டென எழுந்து, தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, “வாருங்கள் தந்தையே…” என அங்கிருந்து வெளியேறினான் வேகமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.