“நோ என்ட் டு மீ பேபி...ஆனாலும் முதலும் கடைசியுமா..உனக்கும் என் குழந்தைக்கும்..”என்றவன் மெல்ல அவளது டாப்ஸை விலக்கியவன்..அவளது வயிற்றில் அழுத்தமாய் முத்தம் வைக்க...அது சொன்ன செய்தியில் அவள் அதிர்ந்து போய்விட்டாள் என்றாலும்..அவசரமாக அவனை பிரித்தெடுக்க முயன்று..முடியாமல் போக..அவளது சேயாய் மாறி..அவளது இடையை இறுகப் பிடித்து..அழுத்தமாய் முகத்தைப் புதைத்தவன்...அதன் பின் எழவேயில்லை...
முடிந்து போயிற்று..எல்லாமே முடிந்து போயிற்று..!!
அவனது வாழ்வும் முடிந்து போயிற்று..அவன் அவந்திகாவின் தோழிகளுக்கு என்ன செய்தான் என்ற ரகசியமும் அவனோடு புதைந்து போயிற்று...
எந்த மருந்துகொண்டு அவர்களை ‘அவந்திகா’என்ற ஒருவளின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு அவர்களை நடைப்பிணமாக மாற்றினான் என்பதும் கூட தெரியாமல் போயிற்று!!
அப்படி என்ன தான் செய்தான் என்பதற்கான முழு ஆதாரம் யஷ்வந்த்திடம் இல்லை..
அதற்கான விளக்கமும்,அவர்களை எப்படி மீட்பது என்பதற்கான விபரங்களும் கூட அவந்திகாவிடம் இல்லை.. அவளிடமும் முழுதாக சொல்லாமல் மறைத்திருந்தான்.
நிரேஷ்க்கு துணை நின்றவன் ஒருவன்! தலைமுறை தலைமுறையாக சித்த வைத்தியம் செய்த குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவன் அவன்.அவனை கண்டறிய காவல் துறைக்கு வருடங்கள் ஆகலாம்..நொடியில் அல்லது சில நாட்களில் அவனைப் பிடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று.
நிரேஷ் என்பவனின் அத்தியாயம் இந்த பூமியில் இன்றோடு முடிந்துவிட்டது.அவனது உடல் பூவலகில் இல்லையென்றால் கூட ,அவந்திகாவின் ஜீவன் பிரியும் மட்டும்,அவன் அவளோடு தான் இருப்பான்.இதில் மாற்றமேதுமில்லை..
காதல்..மூன்றெழுத்து வார்த்தை தான்.வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத சுகத்தையும்,துக்கத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கின்ற இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு தான் இந்த உலகில் அதீத சக்தி உள்ளது..
காதல்-உயிரை மீட்க வல்லது
காதல்-உயிரை குடிக்க வல்லது.
இன்றைய இளம் சமுதாயத்தில் மட்டுமல்ல..ஆதி காலத்தில் இருந்து இந்த காதல் பலரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல்..’என்னை நீ காதலிக்க வேண்டும்..காதலித்தே ஆக வேண்டும்’என்ற உரிமை மனப்பான்மையையும் விதைக்கும் அதே நேரத்தில்..
“என்னைத்தவிர வேறு யாரையும் நீ பார்க்கக் கூடாது.பேசக் கூடாது.காதலிக்கக் கூடாது”என்ற கட்டுப்பாட்டையும் விதிக்கிறது.
“என்னை நீ காதலிக்கவில்லையா-உன்னை கொன்றுவிடுவேன்”
“என்னை நீ காதலிக்கவில்லையா-நான் தற்கொலை செய்துகொள்வேன்”இப்படிப்பட்ட மிரட்டல்கள் இல்லாமல் காதல் கடந்து சென்றுவிடுகிறதா..இல்லையே..
என்னை நீ மறுத்தால்,ஆசிட் ஊற்றுவேன்.கேவலமாய் சமூகத்தில் சித்தரித்துவிடுவேன்..ஆதாரமில்லாமல் உன்னை அழித்துவிடுவேன் என்ற மிரட்டல்கள் எத்தனை எத்தனை..கணக்கில் எண்ணினாலும் அடங்குமா..!!
இதில் நிரேஷ் வேறு ரகம்..அவள் வேறு ஒருவனை காதலிக்காமல் இருந்த வரை அவளை நிழலாக பின் தொடர்ந்தான்.அவள் ஒருவனை காதலிக்க தொடங்கிய பின் நிஜமாக மாறி அவளை கடத்தி வந்துவிட்டான்.அதன் பின்னும் அவனால் அந்தக் காதலை அடைய முடிந்ததா..இல்லையே..
அவள் மேல் அவன் வைத்தக் காதல் கடலளவு தான்.அதை உணர்ந்த ஒரு காரணத்திற்காகவும்,அவன் கொண்ட காதலுக்காக மட்டுமே,இவளுக்கு காதல் வந்துவிட வேண்டும் என்று ஏதேனும் விதி இருக்கிறதா..
அநியாயமாய் இறந்துவிட்டான்..குழப்பவாதியாய் இருந்து..இவனை கொன்றுவிட்டாள்.நிரேஷ் பாவம் என்று மூன்றாவது மனிதரின் பார்வையில் எதையும் கூறிவிடுவது மிக எளிது..
ஆனால் உணரும் ஜீவன் எத்தனை துக்கத்தை அனுபவிக்கும்..வாழ்நாள் முழுமைக்கும் அவளை தொடரும் இந்த சாபத்தில் இருந்து எந்நாளுமே அவளால் மீள முடியாது..
இப்போது இவன் ஏன் தற்கொலை செய்துகொண்டான்.நிதானித்திருக்கலாமே..எல்லாருக்கும் தோன்றுவது தான்..காதல் தோல்வி எதையுமே யோசிக்க விடுவதில்லை.அது எப்பேர்பட்ட குணவானாக இருந்தாலும் சரி தான்!!
கிட்டத்தட்ட அவந்திகா,அவனிடமிருந்து பிரிந்து சென்ற நாள் முதல் ஏற்பட்ட மனஉளைச்சல்..அவனை இன்று இப்படி ஒரு முடிவெடுக்க வைத்துவிட்டது..உயிர் பிரிந்துவிட்டது.இனி ஏன் எப்படி எதற்கு என்ற காரணத்தை ஆராய்வதில் துளி உபயோகமில்லை.
ஆனால் மூன்றாமவர் ஆராய்வாரே..அந்த மூன்றாமவர் மீடியாவாக இருக்கும் பட்சத்தில்..அதிலும் அவந்திகாவும் நிரேஷும் சமீப காலத்தில் அதிகமாக ஊர் சுற்றியது பலருக்கும் தெரியுமே...
‘இப்போது இவள் என் மனைவி’ என்று புதிதாக ஆதாரத்தோடு யஷ்வந்த் வந்திருக்க,,இவ்வளவு நாள் நிரேஷ் உடன் இருந்த நாட்களுக்கு பெயரென்ன..!!!
லிவிங்டுகெதர் என்பதை கூட ஏற்றுகொள்ள தயாராக இருப்பவர்கள் இதனை ஏற்றுகொள்வார்களா..!!
ஆராய வேண்டியவர்களை விட்டுவிட்டு..மீடியாக்களும்,சமூக வலைதளங்களில் உள்ள மனிதர்களும் எவ்வளவு ஆராய்வார்கள்!!
பழியோ..பாவமோ..வேதனையோ,தண்டனையோ...எல்லாம் இனி அவந்திகாவுக்கு மட்டுமே சொந்தமானது.
அதை நிரூபிக்கும் வண்ணமாக...இவ்வளவு நேரமும் வெளியில் நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சமையல்காரன்..சுற்றி இருந்த காவல்காரர்களை மீறி..மீடியாக்களுக்கு தகவல் சொல்லிவிட்டு அவர்கள் முன் பேட்டி கொடுக்க செல்லும் வரை..வீட்டுக்குள் இருந்தவர்கள் யாரும் நிரேஷின் இறப்பிலிருந்து மீளவில்லை..
இருந்தாலும்,இறந்தாலும் அவன் ஜீவன் அவளுள்ளே!!
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her next episode.
{kunena_discuss:1004}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.