(Reading time: 18 - 35 minutes)

னம் இடம் கொடுக்காத போதிலும்..நிரேஷை விட்டு விலகுவது,எப்படிப்பட்ட துன்பத்தில் பலரை ஆழ்த்தும் என்பதை உணர்ந்திருந்தவளால்,இனியும் தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று பார்வையாலையே யஷ்வந்த்திடம் கையை விட்டுவிட சொல்லி கெஞ்ச,உடனே அதற்கு அவனும் சம்மதித்து,மீண்டும் சோபாவிலையே அமர்ந்தான்.

தற்சமயத்துக்கு எந்தவிதமான பிரச்சனையையும் எழுப்ப அவன் தயாராய் இல்லை.அனைத்தையும் சுமூகமாக முடித்து,முதலில் அவந்திகாவை அங்கிருந்து அழைத்து சென்ற பின்னர் தான் மற்றவற்றை கவனிக்க வேண்டும் என்ற தெளிவான ப்ளானுடன் தான் அவன் இங்கு வந்ததே!!

அதனாலையே குரலை உயர்த்தாமல்,”நிரேஷ்.நீங்க இவளை காதலிக்கறதா மாமா சொன்னார்.ஆனால் என் மனைவியை நீங்க காதலிக்க முடியாது நிரேஷ்.ஷீ இஸ் மைன்..உங்களோட காதல் எல்லாம் சட்டத்துக்கு முன்னே செல்லுபடியாகாது”என்றான்.

அவனோ,சொன்னவனை விட்டுவிட்டு,”அவந்தி..அவன் கைல இருக்கது ஜஸ்ட் அ பேப்பர்.அதை என்ன செய்து,ஆதாரமே இல்லாம அழிக்க முடியும் என்று எனக்கு தெரியும்..நேர்வழியில கூட,நாம டிவோர்ஸ் வாங்கிக்கலாம்.நீ பயப்படாதே.நான் எப்பவும் உன் கூட தான் இருப்பேன்”என்று அவளுக்கு ஆறுதல் கூறுவது போல தனக்கும் கூறிக்கொண்டானோ!!

“மிஸ்டர் நிரேஷ்..உங்களோட பைத்தியக்காரத்தனத்துக்கும் ஒரு அளவுகொள் இருக்கு..இது வேண்டுமானால் பேப்பரா இருக்கலாம்.பட் நாங்க ரெண்டு பேருமே நிஜம்.எங்களோட காதல் நிஜம்..அதை பொய்னு நிரூபிக்க யாராலும் முடியாது”என்று குரலில் சிறு பிசிறில்லாமல் கூறும் போது,அவனை வியந்து பார்க்காமல் எப்படி அவளால் இருக்க முடியும்..!!

மனதில் ஒரு உறுதி பிறந்தது போல இருந்ததே..!!

அதே நேரத்தில் நிரேஷ்க்கும் இந்த உண்மை முன்பே தெரியுமே..நேற்று கூட அவனது மண்டையில் ஓங்கி அடிப்பது போல,மீளா மயக்கத்தில் ஆழ்ந்திருந்த போதிலும் கூட,அவனது பெயரையும்..அவர்களது கல்யாண நாளையும்..போனில் பேசிக் கொண்டிருந்த விஷயங்களை எல்லாம் உளறிக்கொட்டி...அவனை உடலாலும்,மனதாலும் தீயிடாமலே, ஆசிட் ஊற்றாமலே எரித்திருந்தாளே!!

அப்போது அவன் அடைந்த வேதனை..தன்னுடைய இத்தனை வருட காதல் செய்யாத மாயத்தை,எதுவுமே செய்யாமல் எப்படி இந்த யஷ்வந்த் அவளது மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டான் என்று பித்துப் பிடித்ததைப் போல இரவெல்லாம் யோசித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தவனுக்கு..நிதர்சனம் புரிந்த போதும்,அதை ஏற்க இயலாத மன நிலையில்..அப்போதே நெஞ்சு வெடித்து இறந்துவிட மாட்டோமா என்ற அவனது தவிப்புடன் கூடிய பேராசை  நிறைவேறாத சோதனையும் சேர்ந்து ஒரு இரவுக்குள் அவனுடைய மனநிலை எப்படியெல்லாம் மாறியது என்பதை வார்த்தையால் கூட வடிக்க முடியாதே!!

இதற்கு மேல் நாகரீகம் பார்க்கும் நிலையிலும் அவன் இல்லை.தன்நிலையை மறந்துவிட்டான் என்பதே சரியாக இருக்கும்.

“அவந்தி..நீ என்னோட ராதே அவந்தி..என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்க...என் மேல காதல்,நம்பிக்கை இதெல்லாம் இல்லாமலா நேத்து நாம அவ்வளவு சந்தோஷமா இருந்தோம்”என்று உச்சக்கட்ட பரிதவிப்புடன் கேட்க..

அவளது நினைவடுக்கில் இதுவரையுமே தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிகழ்வுகள்,இப்போதுமே நினைவுக்கு வரவில்லை என்றாலும் கூட..நிரேஷின் மேல் அவள் வைத்திருந்த ‘நம்பிக்கை’ நேற்று அவனை முழு மனதாக ஏற்று..அவனுடன் வாழ்ந்து முடிந்துவிட்டோம் என்பதை உணர்த்த..அது கொடுத்த வேதனை,அவளை நிமிர செய்யவில்லை.

அதையுமே அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

அதிர்ந்து போய் யஷ்வந்த் கேட்டுக் கொண்டிருக்க,அந்த அதிர்ச்சியை கண்கொண்டு பார்க்கும் நிலையிலோ,புரியும் நிலையில் கூட அவர்கள் இருவருமே இல்லை.

அவளது தவிப்பைக் கண்டு ,குற்றம் செய்துவிட்ட தவிப்பில் நிரேஷும்,குற்றத்திற்கு துணை போய்விட்டோமே என்ற தவிப்பில் அவளும் இருக்க...யஷ்வந்த்தை கண்டுகொள்ள யாரும் இல்லை.

அதே நேரத்தில்,”சார் ஜூஸ்”என்று வேலைக்காரன் எப்போதும் போல வீட்டுக்கு வந்திருப்பவர்களிடம் குடிக்கக் கொடுக்க வந்திருக்க..

“அவுட்”என்று நிரேஷ் கத்தியக் கத்தலில் வேலைக்காரன் வீட்டை விட்டே வெளியே சென்றிருந்தான்...

அவன் அருகில் இருந்தவளோ இப்படியொரு செயலை அவனிடம் எதிர்பார்க்காமல் கிட்டத்தட்ட நடுங்கிக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.