(Reading time: 18 - 35 minutes)

தற்கு பிறகே யஷ்வந்த்திற்கு சுய நினைவு வர,எது எப்படி இருந்தாலும்,வாழ்க்கையை வாழ்வதோ,இல்லை பிரிவதோ அதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தான்.அவனும் சாதாரணமான மனிதன்.உடனே அவர்கள் சொன்ன செய்தியைக் கேட்டு இப்படித்தான் எண்ண முடிந்ததே தவிர,என்ன நடந்தாலும் அவளை ஏற்றுக்கொள்வேன் என்ற பக்குவம் அவனிடம் இல்லை.

இப்போதைக்கு அவளை அழைத்து சென்றுவிட வேண்டும் என்பது மட்டுமே மனதில் நிற்க,”இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்ல நிரேஷ்.சட்டப்படி அவந்திகா என் மனைவி.நீங்க அவளை அனுப்ப முடியாதுன்னு அடம்பிடித்தால்,உங்களை நான் அரெஸ்ட் செய்ய வேண்டி வரும்..நீங்க இருக்க லெவல்க்கு இந்த மாதிரி விஷயங்கள் உங்களை ரொம்ப பாதிக்கக் கூடும்.யோசிங்க”என நிதானமாக இவன் கூறினால்,அதே போல அவனும் நிதானமாக இருக்கக் கூடுமா!!

“என் லெவல் என்ன..என் லெவல் என்னவாவோ இருக்கட்டும்.பணம் புகழ்,மரியாதை எதுவுமே என் ராதேக்கு மேல பெரிசு இல்லை”என வீடு அதிரும்படி கத்த,

‘இப்படி தன்னால் நினைக்கக் கூட முடியும்’என்று யஷ்வந்திற்கு தோன்றவில்லை.

அதிர்ச்சியுடன் அவந்திகா அமர்ந்திருக்க,இந்த தீராத காதலைக் கண்டு பிரமிப்பதை விட்டுவிட்டு,வலியை,வேதனையை பிரதிபலித்து அவனைப் பார்க்க...

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்ட நிரேஷ்,முயன்று வரவழைத்த நிதானத்துடன்,”என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே அவந்தி”என்று எதற்கு நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற காரணத்தை கூறாமலையே அவன் கேட்க,எப்போதும் போல் தலையாட்டுவாள் என்று நினைத்திருந்தான்.

அவளோ தலையாட்டவில்லை!!

அவளுக்கு எப்படி பதில் கூறுவது என்றே அந்த நொடி புரியவில்லை என்பதே நிஜம்.

அவளது வினாடி நேர தாமதிப்பில்...நிரேஷின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பிஸ்டல் அவனது இதயத்தை நோக்கி,குறி பார்த்திருந்தது.

தவறு செய்ய துணிந்துவிட்ட காலம் தொட்டு அவனிடம் இருந்த பிஸ்டல் இன்று தன் வேலையை சத்தமே இல்லாமல்,அவனது இடது பக்கமிருந்த சதையை துளைத்து ரத்தத்தைக் கொட்டி...உள் நுழைந்திருந்தது,.

“நோ”என்ற அலறல் அவளிடமிருந்து வெளிப்பட..யஷ்வந்த் அவசரமாக அருகில் வர...பிஸ்டலை இப்போது அவந்திகாவின் பக்கம் திருப்பிய நிரேஷ்..”பக்கத்தில வந்த என்னோடையே என் ராதேயை கூட்டிட்டுப் போயிடுவேன்”என்று அந்த நிலையிலும் வெறிப்பிடித்தது போல கத்த..பின்வாங்குவதை தவிர,அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

இன்னமும் திடமாக தான் நிரேஷ் நின்றிருந்தான்..அவன் சாய்வதற்கு முன் அவள் அவனை தாங்கியிருக்க...

“யஷ்வந்த்..ஹாஸ்பிட்டல் போகலாம்..காரை எடுங்களேன்”என்ற கதறல் கேட்டு..அவன் கிளம்பும் முன்..மீண்டும் அவனது பிஸ்டல் தன் மடி தாங்கியிருந்த அவந்திகாவின் நெற்றியில் இருக்க...யஷ்வந்த்தால் அந்த நிலையை கையாளவே முடியவில்லை..அவன் மட்டும் இல்லை..அவனை சுற்றியிருந்த குழுவும்..!!

ஆம்..இவர்கள் வருவதற்கு முன்பே அவனது வீட்டை சல்லடை போட்டு சலித்த அவனது குழு,மறைந்திருந்து அனைத்தையும் வேடிக்கை   பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது அவர்களால் வெளிப்படவும் முடியவில்லை.

அவனது வலது கை பிஸ்டலை தாங்கியிருக்க,இடது கை அழுது கொண்டிருந்தவளின் இடக்கையை எடுத்து..இரத்தம் வலிந்து கொண்டிருந்த பகுதியில் வைத்து அழுத்தம் கொடுக்க....

கொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தை மீறி..உயிரை எடுக்க காத்திருந்த வேதனையை மீறி..அவள் கை அழுத்தியதால்,அணிந்திருந்த சட்டையை தாண்டி,லேசாக அதே நேரத்தில் அழுத்தமாக உராய்ந்ததில் ஏற்பட்ட வலியை மீறி..அவளது கண்களில் வலிந்த நீர்..அவனது இரத்தத்துடன் கை கோர்க்க..அதில் இதம் கண்டது அவன் மனம்..

‘எனக்காக அழ இவள் இருக்கிறாள்..இவள் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தம்’என்று அந்த நொடியும் அவனது மனம் பெருமை கொண்டது..

இன்னமுமே அவனது கையிலிருந்த பிஸ்டல்,அப்படியே இருக்க..வரவழைத்துக் கொண்ட தைரியத்தில்”நாம ஹாஸ்பிட்டல் போகலாம் நிரேஷ்..நாம வாழனும்..நம்ம குழந்தைங்களை சந்தோஷமா வளர்க்கணும்..எனக்கு..எனக்கு நீ வேணும் நிரேஷ்..வேற யாருமே வேண்டாம்..நான் உன் கூடவே வந்துடுறேன்..வேற எதுவுமே வேண்டாம்..நீ என்ன சொன்னாலும் நான் அப்படியே நம்புவேன்..உன்னோட நம்பிக்கை எப்பவுமே பொய்க்க விடமாட்டேன்..போயிடலாம்...”என்று கதறலாக,கோர்வையாக,திடமாக அவள் கூறிக் கொண்டிருக்க..மெல்ல..மெல்ல கையிலிருந்த பிஸ்டலை நழுவ விட்டவன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.