(Reading time: 18 - 35 minutes)

ரவேற்பறையில் யஷ்வந்த் அமர்ந்திருக்கக் கண்டவள் குழப்பமாக நிரேஷை காண,கவனம் முழுவதையும் இவள் மேல் வைத்திருந்தவன் சற்றே நிம்மதியாக உணர்ந்தான்.

பெரிதாக அவள் ஆர்வம் காட்டவில்லை என்பதிலையே மனம் நிம்மதி அடைந்ததில்,”வாங்க யஷ்வந்த்”என்று அமைதியுடனே வரவேற்றவன்,பிடித்த பிடியை விடாமல் அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.

அதைக் கண்டு யஷ்வந்த் வருத்தம் கொண்டாலும்,நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“நான் என் மனைவியை கூட்டிட்டுப் போக வந்திருக்கேன்”எனவும் நிரேஷ் சுற்றும் முற்றும் தேடினான்.

‘அப்படி யாரும் இங்கே இல்லையே’என்பது போன்ற பாவனை!!

அதில் கோபமுற்றவன்,தன் கையில் இருந்த ஆதாரத்தை கிட்டத்தட்ட தூக்கி வீசவே செய்தான்.

அதை எடுத்துப் பார்த்த நிரேஷிற்கு அதிர்ச்சி என்றால்,அவந்திகாவின் கண்களில் தோன்றிய மின்னல் அவனை நரகத்திற்கே அழைத்து சென்றது.

அதைவிட இதுவரை ஒருவித தவிப்புடன்,அதே நேரத்தில் அழுத்தத்துடன் அமர்ந்திருந்த யஷ்வந்த்,’இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்’என்பது போன்ற பாவனையில் நிம்மதியுடன்,கண்களில் ஒளியுடன் அவந்திகாவை பார்த்திருந்தான்.

அவர்களது திருமண நாளுக்கு முன்னால்,கோவிலில் இருவரும் திருமணத்திற்கு சம்மதம் என்று எழுதிக் கொடுத்த பத்திரம் அது.அப்போது இரு குடும்பத்தினரும் சேர்த்து போட்டோவும் சில எடுத்திருக்க,அதையே ஆதாரமாக வைத்து கோவிலில் திருமணம் நடந்துவிட்டதென சாட்சியாகக் கூறி,ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டான் யஷ்வந்த்..அவந்திகா காணாமல் போன அன்று தான் அவசரமாக இந்த வேலையையும் செய்திருந்தான்.

இப்போது இருவருமே சட்டப் பூர்வமான கணவன் மனைவி.அதை யாராலும் மாற்ற முடியாது எனும் போது ஏன் இவ்வளவு நாள் அமைதி காத்தான்-அவந்திகாவின் மனதில் கேள்வி எழுப்ப..அதையே அவள் கண்களிலும் பிரதிபலிக்க,யஷ்வந்த்தால் பதில் சொல்ல முடியவில்லை.

‘உன்னைப் பணையம் வைத்திருந்தேன்’என்று எப்படி அவனால் உண்மையை ஒப்புக்கொள்ள முடியும்.என்றாவது ஒருநாள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும்,இந்த நிரேஷின் முன் அதை ஒப்புக்கொள்ள அவன் தயாராக இல்லை.

நிரேஷிற்கு நொடியில் எல்லாம் மாறிவிட்டது போலிருந்தது.இத்தனை நாள் மெல்ல மெல்ல அவந்திகாவை தன் பக்கம் இழுக்க அவன் அத்தனை முயற்சி செய்துகொண்டிருக்க,நொடியில் யஷ்வந்த் அவந்திகாவுடன்    பார்வை பரிமாற்றம் நடந்ததை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

‘இதையெல்லாம் எதிர்பார்த்தாய் தானே..உள் உணர்வு எச்சரித்ததினால் தானே நேற்று உன் உயிராகிப் போனவளிடமும் நீ உன் வேலையை காட்டினாய்’என்று அவனிடம் இருந்த நல்ல மனம் குத்திக் காமிக்க..அதை புறந்தள்ளியவன்..

‘அவந்தி..இட்ஸ் ஜஸ்ட் எ பேப்பர்..நீ கவலைப்படாதே.நான் பார்த்துக்கறேன்”எனவும் தான் அவந்திகாவிற்கு இவனின் நினைவே வந்தது.

மீண்டும் குற்ற உணர்ச்சியில் தத்தளித்தது மனம்..இருதலைக்கொள்ளியாக தவிக்கும் மனதை அடக்கும் வழி தெரியாமல் கண்ணீரை அடக்கிக்கொண்டு அவன் கைப்பிடியில் அமர்ந்திருக்கும் நிலை,மேலும் அவளை காயப்படுத்தியது.

இதையெல்லாம் யஷ்வந்த் உணர்ந்திருந்தாலும்,”அவந்திகா,போகலாமா”என்று இதுநாள் வரை எதுவுமே நடந்திராதது போல அவன் எழுந்து அவள் கைப்பிடிக்க..இவளும் எழுந்துகொள்ள.இப்போது ஒரு கை இவனுள்..மறு கை அவனுள்..(நிரேஷ்)

பெண்ணாக பிறந்ததையே முழுதாய் அவள் வெறுத்தது அந்த நொடி தான்..!!

யஷ்வந்த்தின் பார்வை அவளிடம் கெஞ்சவில்லை என்றாலும்,ஒருவித அழுத்ததினுடன் அவன் பார்க்க,நிரேஷோ முழுக்க முழுக்க வலியுடன் தனது ‘ராதே’யை பார்த்தான்.

அந்தப் பார்வையை ஏனோ எதிர்கொள்ளவே முடியவில்லை அவளால்..அவசரமாக அவளது கை யஷ்வந்த்திடமிருந்து வெளியே வரப் போராட,அதற்கு அவன் விட்டால் தானே..!!

இரு ஆண்களும் அவளுள் ஓர் அழுத்தத்தை விதைத்துக் கொண்டிருந்தார்கள்.காதலிக்கப்படுவது சுகமென்று யார் சொன்னது..அது வலியும் கூட!!

ஒருவனை மனதால் காதலித்துவிட்டு,இன்னொருவனின் காதலை முழு மனதாக உள்வாங்கி,அவனது வேதனைகளை உணரும் போது ஏற்படும் வலி..வாள் கொண்டு அறுப்பதை விட கொடுமையான விஷயம்..

இருவருமே அவளது அன்புக்கு பாத்திரமானவர்கள்.ஒருவரையும் அவளால் விட்டுக் கொடுத்து பேச முடியவில்லை.ஆனால் யஷ்வந்த்தை தள்ளி வைக்க அவசரமாக முடிவு செய்தது மனம்.

அவன் எதுவென்றாலும் தாங்கிக்கொள்வான்..அவனையே காதலிக்கும் நந்தனா இருக்கிறாள்..வர்ஷூ இருக்கிறாள் என்று அவசரமாக மூளை அந்த நினைவுகளை எல்லாம் கொண்டு வந்து அவனது கைபிடியை விட்டு விலக சொன்னது மூளை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.